விருதுகள் | வருடமலர் | Varudamalar | tamil weekly supplements
விருதுகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
00:00

'புக்கர்' பெருமை
உலக அளவில் இலக்கியத்திற்கான மிக உயரிய 'மேன் புக்கர்' விருது 1969 முதல் வழங்கப்படுகிறது. மூன்று இந்தியர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். 2017ம் ஆண்டுக்கான இவ்விருதை, 'லின்கால்ன் இன் தி பார்டோ' என்ற நாவலுக்காக அமெரிக்காவின் ஜார்ஜ் சான்டர்ஸ் பெற்றார்.

வித்தகர் விஸ்வநாத்
இந்திய திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு 1969 முதல் 'தாதா சாகேப் பால்கே' என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது. 2016ம் ஆண்டுக்கான இவ்விருது ஏப். 24ல், பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு வழங்கப்பட்டது. தெலுங்கு, இந்தி, தமிழில் சிறந்த இயக்குநராக விளங்கினார். குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அடடா... அடெல்
இசை உலகின் உயரிய கிராமி விருதுகள் பிப். 13ல் வழங்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் பெண் இசைக் கலைஞர் அடெல் 5 விருதுகளை பெற்று சாதித்தார். ஆல்பம் ஆப் தி இயர், 'ரெக்கார்டு ஆப் தி இயர் மற்றும் 'சாங் ஆப் தி இயர்' என 3 முக்கிய விருது உள்பட 5 விருதை பெற்றார். இச்சாதனையை 2வது முறையாக பெற்றவர் இவர் ஒருவரே. இதில் இந்திய தபேலா இசைக்கலைஞர் சந்தீப் தாஸ் விருது பெற்றார்.

அமைதி புறா
ஐ.நா., சபையின் இளம் அமைதி துாதராக பாகிஸ்தானின் மலாலா,19, பொதுச்செயலர் அன்டோனியா கட்டார்சால் ஏப். 10ல் நியமிக்கப்பட்டார். உலகளவில் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் பிரசாரத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார். இவர் 2016ல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

'கதா சூடாமணி'
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கு 1965ல் இருந்து ஞானபீட விருது வழங்கப்படுகிறது. 2017க்கான இவ்விருதுக்கு கிருஷ்ண சோப்திக்கு, 85, வழங்கப்பட்டது. இந்தியில் பிரபலமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியவர். 1980ல் ஜிந்தகிநாமா என்ற நாவலுக்காக, சாகித்ய அகாடமி விருதை பெற்றவர். 'கதா சூடாமணி' என்ற சிறப்பு விருதை பெற்ற முதல் எழுத்தாளர். இவரது பல புத்தகங்கள், ஆங்கிலம், ரஷ்யா, சுவீடன் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.

மனித நேய பெண்மணி
'ஆசியாவின் நோபல்' என அழைக்கப்படும் பிலிப்பைன்சின் 'ரமோன் மகசேசே' விருது ஆக. 2ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு தேர்வான ஆறு பேரில், 82 வயதான இலங்கை தமிழாசிரியர் கெத்சீ சண்முகமும் ஒருவர். இவர் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர். குண்டு வெடிப்புகளினாலும் ராணுவத்தின் அச்சுறுத்தல்களினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உளவியல் ரீதியாக உதவிகள் செய்து அவர்களை திடப்படுத்தியவர்.

'நோபல்' கவுரவம்
உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 1901 முதல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஜப்பானின் கசுவோ இசிகுரோ தேர்வானார். இதுவரை 8 நாவல்களை எழுதியுள்ளார். அவை 40 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. 2015ல் எழுதிய 'தி பரிடு ஜயன்ட்' நாவலுக்காக இவருக்கு நோபல் வழங்கப் பட்டது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X