தமிழ் திரையுலகம் 2017
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
00:00

தமிழ் சினிமாவில் 2017ல் 180க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின அதிகபட்சமாக ஜூன், செப்., மற்றும் நவம்பரில் 25 படங்கள் வெளியாகி உள்ளன. இதில், விஜய் நடித்த, 'பைரவா, மெர்சல்', அஜித் நடித்த 'விவேகம்', சூர்யாவின் 'சிங்கம் - 3', பிரபாஸ் நடித்த 'பாகுபலி - 2 படங்கள் குறிப்பிடத்தக்கவை.
இவற்றில் 'பாகுபலி 2, மெர்சல்' படங்கள் மட்டுமே அதிக லாபத்தை தந்தன. 'விக்ரம் வேதா, போகன், அறம், தரமணி, அவள், குற்றம் - 23' உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தவை மற்றும் சின்னபட்ஜெட் படங்கள் பெயர் சொல்லும்படி அமைந்தன. 60 சதவீத படங்கள் வெற்றிப்படங்களாக, அறிவித்து விழா கொண்டாட மட்டுமே பயன்பட்டன.
ஜி.எஸ்.டி., மற்றும் கேளிக்கை வரி, தியேட்டர் ஸ்டிரைக், கந்து வட்டி கொடுமையால் இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை, பெப்சி ஸ்டிரைக், தயாரிப்பாளர் சங்க வெற்றியை தொடர்ந்து விஷால் எடுத்த அதிரடி முடிவுகள், அதனால் ஏற்பட்ட சோதனைகள் என 2017 திரையுலகினருக்கு பரபரப்பான ஆண்டாக காணப்பட்டது.

ஆறு... அரசு விருது...
தமிழக அரசு, ஆறு ஆண்டுகளுக்கான விருது மற்றும் மானியம் வழங்கி புத்துயிர் ஊட்டியது. 2009 - 2014 வரையிலான அரசின் திரைப்பட விருதுகள், ஜூலையில், அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதுக்கு, கரண், விக்ரம், விமல், ஜீவா, ஆர்யா, சித்தார்த் ஆகியோர், தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த நடிகையராக பத்மப்ரியா, அமலாபால், இனியா, லட்சுமிமேனன், நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறந்த இயக்குனர்களாக, வசந்தபாலன் - அங்காடித்தெரு, பிரபுசாலமன் - மைனா, ஏ.எல்.விஜய் - தெய்வத்திருமகள், பாலாஜி சக்திவேல் - வழக்கு எண் 18ன் கீழ் 9, ராம் - தங்கமீன்கள், ராகவன் - மஞ்சப்பை ஆகியோர் தேர்வாகினர். சிறந்த படங்களாக, 'பசங்க, மைனா, வாகை சூடவா, வழக்கு எண் 18ன் கீழ் 9, ராமானுஜன், குற்றம் கடிதம்' ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அத்துடன் சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

தேசிய திரைப்பட விருது
சினிமாவுக்கான, 64 வது தேசிய விருதுகள், ஏப்ரலில் அறிவிக்கப்பட்டன. தமிழில், ராஜுமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' படம் சிறந்த படமாக தேர்வானது. கிராம மக்களின் சுகாதார பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் உருவானது. சிறந்த பாடல் ஆசிரியராக, வைரமுத்து தேர்வானார். சூர்யா நடிப்பில், விக்ரம்குமார் இயக்கத்தில் வெளியான, '24' என்ற படத்திற்கு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளராக விருது, திருவுக்கு கிடைத்தது.

'சிஸ்டம் சரியில்லை'
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து, 'தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை' எனக்கூறிய ரஜினி; டுவிட்டர் அரசியல் நடத்திய கமல்; ஆர்.கே.நகரில் வேட்புமனுத்தாக்கல் செய்த விஷால் என, திரைத்துறையினர், அரசியல் வட்டாரத்திலும், பரபரப்பு காட்சிகளை அரங் கேற்றினர்.
ராகவா லாரன்ஸ், விஜய், கமல், ஜி.வி.பிரகாஷ்குமார், சூர்யா, கார்த்தி, நயன்தாரா உள்ளிட்ட பலர், ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக குரல் கொடுத்தனர்.

கலக்கல் அறிமுகம்
அறிமுக நடிகைகளில், 'அருவி' அதிதி பாலன் முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து, பாராட்டுக்களைப் பெற்றார்.

அசத்திய அறிமுக இயக்குநர்கள்
இந்த ஆண்டில் அறிமுகமான பல இயக்குனர்களில், குறிப்பிடப்பட வேண்டியவர்கள். லோகேஷ் கனகராஜ்- மாநகரம், தனுஷ்- பா.பாண்டி, சுரேஷ் சங்கையா- ஒரு கிடாயின் கருணை மனு, ஏ.ஆர்.கே.சரவணன்- -மரகத நாணயம், ஹிப்ஹாப் தமிழா- மீசைய முறுக்கு, நிதிலன்- குரங்கு பொம்மை, ரத்னகுமார்- மேயாத மான், மிலிந்த்- அவள், கோபி நயினார்-அறம், சி.வி.குமார்-மாயவன், அருண் பிரபு புருஷோத்தமன்- அருவி ஆகியோர், தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

அதிக படங்களில் நடித்த நடிகர்
கவுதம் கார்த்திக் : முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, இந்திரஜித்

அதிக படங்களில் நடித்த நடிகை
நிக்கி கல்ரானி : மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி

கெட்டி மேளம் கொட்டியாச்சு
* நடிகையர் சமந்தா, நமீதா ஆகியோர் மணவாழ்க்கையில் இணைந்தனர். சமந்தா தன் காதலரான, நாக சைதன்யாவை பெற்றோர் சம்மதத்துடன், கோவாவில் திருமணம் செய்தார். நமீதாவும் தன்னை காதலித்த, வீராவின் காதலை ஏற்று, திருப்பதியில் மணம் முடித்தார்
* நடிகையரில், தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தன் காதலரான, விக்னேஷ்சிவனை காதலித்து வந்தார். இருவரும் வெளிநாடுகளில் சுற்றி வந்த நிலையில், தனிக்குடித்தனம் நடத்தி வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது
* பிப்ரவரியில், திருச்சூரில் படப்பிடிப்பு முடித்து, கொச்சிக்கு காரில் திரும்பிய நடிகை பாவனாவை சிலர், காரில் கடத்திச் சென்று, பாலியல் கொடுமை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, பிரபல மலையாள நடிகர், திலீப் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கன்னட படத்தயாரிப்பாளர் நவீன் உடன், பாவனா நிச்சயதார்த்தம் முடித்தார். அக்டோபரில் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திடீரென, 2018 ஜனவரிக்கு திருமணத்தை தள்ளி வைத்தனர்.

விவாகரத்து
'வீரசேகரன்' படம் வாயிலாக, தமிழில் அறிமுக மானவர், நடிகை அமலாபால். 2014ல், இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்த இவர், 2016ல், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 2017 பிப்ரவரியில் நீதிமன்றம், விவாகரத்து வழங் கியது. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் பிசியான நடிகையாக அமலாபால் வலம் வருகிறார்.

ரஜினி, கமல் இல்லை
ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்து, இந்த ஆண்டு ஒரு படம் கூட வரவில்லை. மற்ற சீனியர் ஹீரோக்களில் சரத்குமார் நடித்த 'சென்னையில் ஒரு நாள் 2' படம் மட்டுமே வெளிவந்து தோல்வியைத் தழுவியது.

பாதையை மாற்றும் நயன்தாரா
நயன்தாரா போன்ற சீனியர் நடிகைகள் இன்னமும் மற்ற ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து, கிளாமர் காட்டி, ஆடிப் பாடி நடிப்பதைக் குறைத்துக் கொள்வது நலம். 'அறம்' படம் நயன்தாராவின் இமேஜை அடியோடு மாற்றிவிட்டது. அது அவருக்குப் புரிந்திருந்தால் இனி வேறு தளத்தில் அவர் பயணிக்கலாம்.

முன்னணியில் விஜய்சேதுபதி
இந்த ஆண்டில் குறிப்பிட்ட வெற்றிகளைக் கொடுத்ததில் விஜய் சேதுபதி முன்னணியில் இருக்கிறார். அவர் நடித்து வெளிவந்த படங்களில் 'கவண், விக்ரம் வேதா, கருப்பன்' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்தன.

15 ஆண்டுகளாக த்ரிஷா
'மவுனம் பேசியதே' படம் வாயிலாக, 2002 டிச., 13ல், தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், த்ரிஷா. தொடர்ந்து, 'லேசா லேசா, சாமி, கில்லி' என, ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழ், தெலுங்கு திரையுலகில், நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். 15 ஆண்டுகளாக நாயகியாக வலம் வரும், த்ரிஷா, இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பிசியாக நடித்து வருகிறார்.

சிவாஜி மணி மண்டபம் திறப்பு
சென்னை, அடையாறில் கட்டப்பட்ட சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அக்டோபரில் திறந்து வைத்தார். இதில், அமைச்சர்களுடன், நடிகர்கள் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, சூர்யா உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர். அத்துடன், காமராஜர் சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை, மணிமண்டபத்தில், நிறுவப்பட்டது.

திருமணத்தில் இணைந்த பிரபலங்கள்
'பருத்திவீரன், மலைக்கோட்டை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், ப்ரியாமணி. இவர், தன் நீண்ட கால நண்பரான, முஸ்தபாராஜ் என்ற தொழிலதிபரை காதலித்து, ஆகஸ்ட்டில் திருமணம் செய்து கொண்டார்.
'முண்டாசுப்பட்டி, தெகிடி, மெர்சல்' படங்களில் நடித்த காளி வெங்கட், சென்னையை சேர்ந்த ஜனனியை திருப்போரூரில் திருமணம் செய்து கொண்டார்.
'போடா போடி' இசையமைப்பாளர் தரண், 'அகம், நகர்வலம்' படங்களில் நடித்த, தீக் ஷிதாவை, செப்டம்பரில், திருமணம் செய்து கொண்டார்.
'களவாணி' படத்தில் வில்லனாக நடித்த திருமுருகன், உறவுப்பெண்ணான, மோகனப்பிரியாவை திருமணம் செய்தார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X