விளையாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
00:00

ஜனவரி
ஜன. 1: இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ் ஓய்வு
ஜன.2: லோதா குழு பரிந்துரையை அமல்படுத்தாத பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர் நீக்கம்.
'தல' விலகல் ஜன.4: மூன்றுவிதமான உலக கோப்பை தொடரில் பட்டம் பெற்று தந்தவர் இந்தியாவின் தோனி. இவர், ஒருநாள், 'டுவென்டி-20' போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.
பெண்கள் கலக்கல் ஜன 4: சிலிகுரி நகரில் நடந்த, பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து பைனலில் அசத்திய இந்திய அணி 3-1 என வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன்மூலம் இத்தொடரில் இந்திய அணி தொடர்ந்து 4வது முறையாக (2010, 12, 14, 17) கோப்பை வென்றது.
ஜன.7: பிரிட்டன் ஜூனியர் ஸ்குவாஷ் பைனலில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், சக வீரரான அபய் சிங்கை வீழ்த்தினார். இதில் பட்டம் வென்ற ௩வது இந்திய வீரரானார் தமிழகத்தின் வேலவன்.
ஜன.8: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ராபர் டோ பவுடிஸ்டா கோப்பை வென்றார்.
* கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்.
ஜன.13: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை நீக்கியது.
ஜன.15: பிரிமியர் பாட்மின்டன் லீக் தொடரின் 2வது 'சீசன்' பைனலில் மும்பையை வீழ்த்திய சென்னை பட்டம் வென்றது.
ஜன.22: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
ஜன.24: குஜராத் அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' சாம்பியன்.
ஜன. 28: ஆஸ்திரேலியாவில் நடந்த 'பிக்-பாஷ் 'டுவென்டி-20' தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சாம்பியன்.
சாதனை மழையில்... ஜன. 28: மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரினா, சகோதரி வீனசை வீழ்த்தினார். இதன் மூலம் 'ஓபன் எராவில்' அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் (23) வென்று சாதனை படைத்தார்.
ஜன.29: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடாலை வீழ்த்திய சுவிட்சர்லாந்தின் பெடரர் பட்டம் வென்றார்.
* லக்னோவில் நடந்த சையது மோடி கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் சிந்து சாம்பியன்.
ஜன. 30: இந்திய கிரிக்கெட் போர்டை நிர்வகிக்க வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட கட்டுப்பாட்டு குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

பிப்ரவரி
பிப்.1: இங்கிலாந்துக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இந்தியா கைப்பற்றியது.
* டேவிஸ் கோப்பை டென்னிஸ் ('ஆசிய- ஓசியானா குரூப்-1') இரட்டையர் பிரிவில் சக வீரர் விஷ்ணுவர்தனுடன் களமிறங்கிய இந்தியாவின் பயஸ் தோல்வி.
உயரிய கவுரவம் பிப். 4: 'கிரிக்கெட் பைபிள்' என போற்றப்படும் விஸ்டன் இதழில், கிரிக்கெட் தொடர்பான அனைத்து தேடலுக்கும் விடை கிடைக்கும். இதன் அட்டைப்படத்தில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி 'ரிவர்ஸ் சுவீப்' செய்வது போன்ற படம் வெளியானது. இது இந்திய அணிக்கு கிடைத்த கவுரவமாக கருதப்படுகிறது.
பிப். 6: அரியானாவில் நடந்த தேசிய டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சரத் கமல் சாம்பியன்.
பிப். 7: ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய நட்சத்திரங்களுக்கு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் (ஆக.4-13, லண்டன்) பங்கேற்க தடை.
சபாஷ் இந்தியா பிப். 12: பெங்களூருவில் நடந்த பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்றது. இதன் மூலம், இத்தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக (2012,17) கோப்பை வென்றது.
பிப். 15: விளையாட்டுத்துறைக்கான ஆஸ்கர் விருது என அழைக்கப்படும் லாரஸ் விருதை, ரியோ ஒலிம்பிக்கில் 3 தங்கம் (100, 200, 4x100 மீ.,) வென்ற, ஜமைக்கா தடகள வீரர் போல்ட் வென்றார்.

மார்ச்
மார்ச் 1: டில்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 50 மீ., பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் ஜித்து ராய் உலக சாதனை.
மார்ச் 10: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் அணி கேப்டனாக மேக்ஸ்வெல் (ஆஸி.,) நியமனம்.
மார்ச் 22: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில் 'ஏ' கிரேடில் ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் இடம் பிடித்தனர்.
மார்ச் 24: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் பதவியிலிருந்து விலகும் முடிவை சஷாங்க் மனோகர் மாற்றினார்.
மார்ச் 28: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

ஏப்ரல்
ஏப். 2: இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் சிந்து சாம்பியன்.
ஏப். 9: டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'ஆசிய- ஓசியானா குரூப்-1' இரண்டாவது சுற்றில் உஸ்பெகிஸ்தானை 4-1 என வீழ்த்திய இந்திய அணி உலக குரூப் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி.
ஏப்.13: ஐரோப்பா கால்பந்து கிளப் அரங்கில் 100 கோல் அடித்த முதல் வீரர் (ரியல் மாட்ரிட்-84, மான்செஸ்டர் யுனைடெட்-16) என்ற சாதனை படைத்தார் ரொனால்டோ.
ஏப். 16: சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் இந்திய வீரர் சாய் பிரனீத் கோப்பை வென்றார்.
ஏப். 25: ஊக்க மருந்து சோதனையில் இந்திய கால்பந்து கோல்கீப்பர் சுப்ரதா பால் சிக்கினார்.
ஏப். 27: ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, 15 மாத தடைக்கு பின் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா மீண்டும் போட்டியில் பங்கேற்பு.
ஏப்.30: சென்னையில் நடந்த ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பைனலில் தீபிகாவை வீழ்த்திய தமிழகத்தின் ஜோஷ்னா கோப்பை வென்றார்.

மே
மே 6: அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, வெண்கலம் வென்றது.
மே 9: ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தி (164 போட்டி, 195 விக்.,) உலக சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி.
மே 13: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா (65 கி.கி.,) தங்கம் வென்றார்.
ருத்ரா தாண்டவம் மே 13: மும்பை பல்கலை., சார்பிலான சாம்பியன்ஸ் டிராபி 'டுவென்டி-20' தொடரில், பாந்த்ரா அணி வீரர் ருத்ரா, 67 பந்தில் 200 ரன்கள் குவித்து சாதித்தார். உலக அளவில் இலங்கையின் முதல் தர வீரர் தனுகா பதிரானா, ஆஸ்டர்லாண்ட்ஸ் அணிக்காக, 72 பந்தில் 277 ரன் (எதிர், டிராய்ல்ஸ்டன், 2013) எடுத்தது தான் அதிகம்.
மே 16: இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில் 400 மீ., ஓட்டத்தில் கேரளாவின் 22 வயது முகமது அனாஸ் (45.32 வினாடி) தேசிய சாதனை.
மே 20: ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் விதித் சந்தோஷ், வைஷாலி வெண்கலம்வென்றனர்.
வச்ச குறி தப்பாது மே 20: சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை தொடர் நடந்தது. இதன் 'காம்பவுண்ட்' பிரிவு பைனலில், அபிஷேக் வர்மா, சின்ன ராஜு, அமன்ஜீத் சிங் அடங்கிய இந்திய அணி, கொலம்பியாவை 226-221 என்ற கணக்கில் வென்று, தங்கம் கைப்பற்றியது.
மே 21: ஐ.பி.எல்., பைனலில் மும்பை அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் புனேயை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
* ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் 'பிலிட்ஸ்' பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி தங்கம் வென்றார்.
மே 22: லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி 33வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஜூன்
ஜூன் 4: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியது.
* சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், ஜுவென்டஸ் அணியை வீழ்த்தி, ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்.
ஜூன் 10: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ சாம்பியன்.
ஜூன் 18: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் (ஓவல்) இந்தியா (158/10 ரன்), பாகிஸ்தானிடம் (338/4) வீழ்ந்தது.
* உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரில், இந்திய அணி, பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஜூன் 20: இந்திய அணி பயிற்சியாளர் கும்ளே விலகல்.
ஜூன் 25: உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரில் இந்திய அணி 6வது இடம் பிடித்தது.

ஜூலை
ஜூலை 6: ஆசிய தடகளத்தில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்), லட்சுமணன் (5000 மீ., ஓட்டம்) தங்கம் வென்றனர்.
ஜூலை 8: தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் தொடரில், இந்தியாவின் ஹரிந்தர் பால் சாந்து சாம்பியன்.
ஜூலை 9: ஆசிய தடகளத்தில் 2வது தங்கம் (10,000 மீ.,) வென்றார் தமிழக வீரர் லட்சுமணன்.
ஜூலை 10: ஆசிய தடகளத்தில் 12 தங்கம் உட்பட 29 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை.
மிதாலி ராஜ்யம் ஜூலை 12: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெண்கள் உலக கோப்பை லீக் போட்டியில், இந்திய கேப்டன் மிதாலி ராஜ், ஒருநாள் அரங்கில் அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற சாதனை படைத்தார். இவர், 186 போட்டிகளில் 6,190 ரன்கள் எடுத்துள்ளார்.
ஜூலை 15: உலக 'பாரா' தடகளத்தில் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார். ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார்.
ஜூலை 16: விம்பிள்டன் டென்னிசில் 8வது முறையாக கோப்பை வென்றார் சுவிட்சர்லாந்தின் பெடரர்.
ஜூலை 18: காமன்வெல்த் யூத் ஜூடோ, இந்திய வீரர் சோனிக்கு தங்கம்.
ஜூலை 23: பெண்கள் உலக கோப்பை பைனலில் இந்தியா, இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
ஜூலை 24: காமன்வெல்த் யூத் குத்துச்சண்டையில் இந்திய வீரர் சச்சின் (49 கி.கி.,) தங்கம் வென்றார்.
ஜூலை 31: உலக அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப்பில், 7 தங்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் டிரஸல், சகவீரர் பெல்ப்ஸ் சாதனையை சமன் செய்தார்.

ஆகஸ்ட்
ஆக. 4: நெய்மர், ரூ. 1673 கோடிக்கு, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியில் இணைந்தார்.
'சூப்பர்' ஜோடி ஆக. 5: இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தின் தீபிகா பல்லீகல், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி வெண்கலம் வென்றது.
ஓய்ந்தது 'மின்னல்' ஆக. 6: ஒலிம்பிக்கில், 8 தங்கம் வென்ற 'மின்னல்' வேக வீரர் ஜமைக்காவின் உசைன் போல்ட். லண்டனில் நடந்த உலக தடகளத்தில், 100 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்று விடைபெற்றார்.
ஆக. 8: முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென் ஆப்ரிக்காவை, சாய்த்த இந்திய 'ஏ' அணி சாம்பியன்.
* பெண்களுக்கான யூரோ கோப்பை கால்பந்து பைனலில், டென்மார்க்கை வீழ்த்தி, நெதர்லாந்து அணி சாம்பியன்.
* உலக தடகளம், 1500 மீ., ஓட்டத் தில் செமன்யா (தெ.ஆப்.,) வெண்கலம்.
ஆக. 10: உலக தடகள சாம்பியன்ஷிப், ஈட்டி எறிதல் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியரானார் தேவிந்தர் சிங்.
ஆக. 15: நெதர்லாந்துக்கு எதிரான ஹாக்கி தொடரை, இந்திய அணி 2-0 என, கைப்பற்றியது.
ஆக. 19: தேசிய ஜூனியர் டென்னிஸ் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் தக் ஷினேஷ்வர் கோப்பை வென்றார்.
ஆக. 20: டி.என்.பி.எல்., கிரிக்கெட் பைனலில், துாத்துக்குடி அணியை வீழ்த்திய, சேப்பாக்கம் அணி முதன்முறையாக சாம்பியன்.
ஆக. 24: முத்தரப்பு கால்பந்து தொடரில், இந்திய அணி சாம்பியன்.
மாரிக்கு மரியாதை ஆக. 29: பிரேசிலின் ரியோவில் நடந்த பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இவருக்கு, விளையாட்டில் சிறந்து விளங்கிய நட்சத்திரத்திற்கான 'அர்ஜுனா' விருது வழங்கப்பட்டது.

செப்டம்பர்
செப். 2: இந்திய ஹாக்கி அணி பயிற்சி யாளர் ரோலண்ட் ஆல்ட்மன்ஸ் நீக்கம்.
செப். 3: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றது.
* ஒருநாள் போட்டியில் 100 முறை 'ஸ்டம்பிங்' செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனை படைத்தார் இந்தியாவின் தோனி.
செப். 6: இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடந்த 'டுவென்டி-20' தொடரை இந்தியா கைப்பற்றியது.
செப். 7: ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் பளுதுாக்குதலில் தமிழக வீரர் சதீஸ் குமார் (77 கி.கி.,) தங்கம்.
செப். 17: கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன்.
செப். 10: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன்.
செப். 11: யு.எஸ்., ஓபன் டென்னிசில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் கோப்பை வென்றார்.

அக்டோபர்
அக். 1: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் வென்ற இந்தியா தொடரை கைப்பற்றியது.
அக். 6: உலக கோப்பை கால்பந்து (17 வயது) லீக் போட்டியில் இந்திய அணி, 0-3 என அமெரிக்காவிடம் வீழ்ந்தது.
முதல் கோ...ல் அக். 9: 'பிபா' உலக கோப்பை கால்பந்து (17 வயது) லீக் போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் ஒரு கோல் அடித்த ஜீக்சன், உலக கோப்பை கால்பந்து அரங்கில் முதல் கோலடித்த இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.
அக். 23: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ஜித்து ராய், ஹீனா சித்து ஜோடி தங்கம் வென்றது.
அக். 27: சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ், டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வு.
அக். 28: புரோ கபடி லீக் தொடரில், பாட்னா அணி கோப்பை வென்றது.
அக். 29: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வென்றது.
* பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன்.

நவம்பர்
நவ. 1: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நெஹ்ரா ஓய்வு.
நவ. 5: ஜப்பானில் நடந்த பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி பைனலில், இந்திய அணி 5-4 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் சீனாவை வீழ்த்தி, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நவ. 8: நாக்பூரில் நடந்த தேசிய பாட்மின்டன் பைனலில் செய்னா, சிந்துவை வீழ்த்தினார்.
தங்க மங்கை நவ. 8: வியட்நாமில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 48 கி.கி., எடைப்பிரிவில் அசத்திய இந்திய வீராங்கனை மேரி கோம், ஐந்தாவது முறையாக (2003, 2005, 2010, 2012, 2017) தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
நவ. 10: மும்பையில் நடந்த சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் சவுரவ் கோசால் சாம்பியன்.
நவ. 26: டெஸ்டில் அதிக சதமடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் கவாஸ்கரை (11) முந்தினார் கோஹ்லி (12).
நவ. 27: உலக ஸ்னுாக்கரில் இந்தியாவின் அத்வானி சாம்பியன்.
முத்தான '300' நவ. 27: நாக்பூர் டெஸ்டில், இலங்கையின் கமகேவை போல்டாக்கிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், டெஸ்ட் அரங்கில் 300வது விக்கெட்டை பதிவு செய்தார்.
நவ. 30: அமெரிக்காவில் நடந்த உலக பளுதுாக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (48 கி.கி.,) தங்கம்.

டிசம்பர்
டிச. 1: ஜெர்மனியில் நடந்த ஆசிய 'லுாஜ்' பனிச்சறுக்கில் இந்திய வீரர் சிவ கேசவன் தங்கம் வென்றார்.
டிச. 2: ஆஸ்திரேலிய-இங்கிலாந்து மோதிய ஆஷஸ் டெஸ்ட், பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடந்தது.
* இலங்கைக்கு எதிரான டில்லி டெஸ்டில் அசத்திய இந்தியாவின் கோஹ்லி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தொடர்ச்சியாக 3 சதமடித்த முதல் கேப்டன் என்ற சாதனை படைத்தார்.
டிச. 3: டில்லி டெஸ்டில், இலங்கை அணியினர் காற்று மாசுபாட்டை காரணம் காட்டி 'மாஸ்க்' அணிந்து விளையாடி, சர்ச்சை ஏற்படுத்தினர்.
டிச. 10: உலக ஹாக்கி லீக் பைனலில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன். இந்திய அணி, வெண்கலம் கைப்பற்றியது.
'விருஷ்கா' உற்சாகம் டிச. 12: இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா திருமணம், இத்தாலியில் உள்ள சொகுசு விடுதியில் நடந்தது. டில்லியில் நடந்த இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
டிச. 13: இந்தியாவின் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டி வரலாற்றில் மூன்று முறை இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.
டிச. 17: தென் ஆப்ரிக்காவில் நடந்த காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கம்.
* துபாயில் நடந்த உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டனில் இந்தியாவின் சிந்து வெள்ளி வென்றார்.
டிச. 18: இங்கிலாந்துக்கு எதிரான பெர்த் டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரை வசப்படுத்தியது.
'மின்னல்' சதம் டிச. 22: இந்துாரில் நடந்த இலங்கைக்கு எதிரான 2வது 'டுவென்டி-20' போட்டியில்,
35 பந்தில் 100 ரன்களை எட்டிய ரோகித், அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார். தவிர, தென் ஆப்ரிக்காவின் மில்லர் படைத்த உலக சாதனையை சமன் செய்தார்.
டிச. 24: இலங்கைக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இந்திய அணி, 3-0 என கைப்பற்றியது.
டிச. 27: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது நான்கு நாள் பகலிரவு டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி வெற்றி.
டிச. 29: சவுதி அரேபியாவில் நடந்த உலக அதிவேக செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சாம்பியன்.
டிச. 30: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மெல்போர்னில் நடந்த ஆஷஸ் 4வது டெஸ்ட் 'டிரா'.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X