குரு பார்வை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
00:00

எனது சகோதரர் தற்போது சி.ஏ., படிக்க துவங்கி உள்ளார். சி.ஏ., தகுதியுடன் கூடுதலாக என்ன படிக்கலாம்?

முனீஸ்வரன், அவினாசி
சி.ஏ., படிப்பே மிகக் கடினமான ஒன்று என்பதை அறிவோம். உங்களது சகோதரர் சி.ஏ., முடிக்கும் போது அன்றைய சூழலில் புதிதாக பிரிமியம் படிப்புகள் எதுவும் அறிமுகம் ஆகியிருந்தால் அதற்கேற்ப அப்போது முடிவு செய்யலாம். எனினும் தற்போது உள்ள படிப்புகளில் சி.எப்.ஏ., எனப்படும் Chartered Financial Analyst பணிக்கான படிப்பு சி.ஏ, வோடு தொடர்புடையது.
எனினும் இந்தப் படிப்பை சி.ஏ., படிப்போடு சேர்த்து படிப்பது சிரமம். கடுமையான படிப்பு என்றே இதை கூறலாம். இது போலவே IFRS எனப்படும் International Financial Reporting Standards படிப்பும், உங்களது சகோதரருக்குப் பொருத்தமான படிப்பாக அமையும். மேலும்
எம்.பி.ஏ., படிப்பையும் அவருக்கு பரிந்துரை செய்யலாம்.

எனது மகன் எம்.எஸ்சி., பயோடேக்னாலாஜி முடித்து உள்ளார். சமீபத்தில் பிஎச்.டி., யில் சேர்ந்துள்ள அவருக்கான எதிர்காலம் பற்றிக் கூறவும்
சந்திரசேகரன், திருமங்கலம்
ஆய்வை முடித்தபின் உங்களது மகன் கல்வி தொடர்பான அல்லது மேலும் ஆய்வு தொடர்பாக முயற்சியில் ஈடுபடலாம். மேலும் யு.ஜி.சி., நடத்தும் நெட் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் ஆசிரியப் பணியிலும் வாய்ப்பைப் பெறலாம். பிஎச்.டி., படிப்பை முன்னணி கல்வி நிறுவனங்களில் மேற் கொண்டால் சிறப்பான எதிர்காலத்தை பெறலாம். அவருக்கான எங்களது அறிவுரை - 'கேட்' தேர்வை எழுதி அவரது வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம் என்பதே.

பட்டப் படிப்பு முடித்துள்ள நான் அடுத்ததாக Post Graduate Diploma in Banking படித்தால் வங்கி வேலைகளை பெற முடியுமா?
- முரளி, செங்கல்பட்டு
ஐ.பி.பி.எஸ்., என்னும் அமைப்பு நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலமாக மட்டுமே, பொதுத் துறை வங்கிகளில் வேலை பெற முடியும் என்பதை அறிவீர்கள். கிளார்க் பணிக்கான போட்டித் தேர்வுகளில் Reasoning, Quantitative aptitude, English language, Current affairs with special referene to Banking என்னும் பகுதிகளில் மட்டுமே கொள்குறி வகை வினாக்கள் இடம் பெறுகின்றன. இவை இரண்டு கட்டத் தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. இவற்றில் தகுதி பெற்றால் தான் வேலை பெற முடியும். அதுவே அதிகாரி நிலைப் பணி என்றால், நேர்முகத் தேர்வு வேறு கூடுதலாக நடத்தப்படும். எனவே நீங்கள் கூடுதல் தகுதியாக மேலே குறிப்பிட்டுள்ள டிப்ளமோ படிப்பை முடித்தாலும் அதில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான கூடுதல் கவனம் உங்களுக்கு நேர்முகத் தேர்வில் மட்டுமே தரப்படும். இதை மனதில் கொள்ளவும். ஆனால் ஐ.சி.ஐ.சி.ஐ., போன்ற ஒன்றிரண்டு தனியார் வங்கிகள் நீங்கள் குறிப்பிட்டுள்ள படிப்பை முடிப்பவருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு களை தருகின்றன. சில பல்கலைகழகங்களும் வங்கி தொடர்பான படிப்புகளை தருகின்றன. அவற்றிலும் நீங்கள் சேரலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X