மொட்டை மாடி கரும்பும் நகரத்து பொங்கலும்!: - புஷ்பவனம் குப்புசாமி, அனிதா | பொங்கல் மலர் | Pongalmalar | tamil weekly supplements
மொட்டை மாடி கரும்பும் நகரத்து பொங்கலும்!: - புஷ்பவனம் குப்புசாமி, அனிதா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜன
2018
00:00

பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேட்டி ஒன்று வேண்டும் நாம் கேட்க,
''பொங்கல் திருநாள் வந்தது
பொங்கிடும் இன்பம் தந்தது
எங்கள் திருநாள் இதுவன்றே
இதனை ஏற்றல் மிகநன்றே..!''
என வெண்கல குரலில் தைப்பொங்கலை வரவேற்று பாடவே ஆரம்பித்துவிட்டார் புஷ்பவனம் குப்புசாமி. அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது மென்மையான குரலில் சுருதி சேர்த்தார் அவரது மனைவி அனிதா. நகரத்தில் வாழ்ந்தாலும், பொங்கல் பண்டிகையை கிராமத்தில் கொண்டாடுவது போல் கொண்டாட தயாராகி வருகின்றனர் இந்த தம்பதி.
''இன்று கிராமத்தில் கொண்டாடும் பொங்கலுக்கும், நகரத்தில் கொண்டாடும் பொங்கலுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டுங்க.
எப்படின்னா... கிராமங்களில் நிறைய வயல்வெளிகள் இருக்கும். ஆறு இருக்கும். மக்கள் கூடுவாங்க. பத்து குடும்பங்கள் ஒன்று சேர்த்து, ஆடு, மாடுகளையும் சேர்த்துக்கொண்டு, வீட்டின் முற்றத்தில் சூரியனை பார்த்து மண் பானையில், கரும்பை சுற்றி வைத்து பொங்கல் வைத்து கொண்டாடுவாங்க. ஆனா... நகரத்தில மொட்டை மாடியில்தான் வைக்க முடியும். அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகள் என்றால் கேட்கவே வேண்டாம். இதனால கடமைக்கு 'நாம் தமிழர் பண்பாடு, கலாசாரத்தை காக்க பொங்கலை வைத்து சாமிக்கு படைச்சு கொண்டாடுவோம்' எனக்கூறி, ஸ்டவ்வில் சில்வர் பானையில் வைத்து பொங்கல் வைத்து, 'அப்பாடி, பொங்கலை கொண்டாடிட்டோம்'னு சொல்வாங்க. இதனால நகரத்தில முழுமையான பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாது.
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை. போகி என்பது ஹிந்தி சொல். ஆனா... அது தமிழில் 'போக்கி பண்டிகை' என இருந்திருக்க வேண்டும்.
எதை போக்கிறது என்றால் இந்த ஒரு வருஷமா நாம் பட்ட, நமக்கு வேண்டாத விஷயங்கள், துயரங்கள், வேதனைகள் போன்றவை நம்மைவிட்டு போகணும். இது எல்லாவற்றையும் போக்குற பொங்கல் 'போ(க்)கி பண்டிகை'. இதை யாரிடமும் நாம் கேட்பது. நம்ம குலதெய்வங்கள். அவர்கள்தான் நமது மூதாதையர்கள். அவர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது நேரில் சென்று வழிபட்டு, 'இந்தாண்டாவது துயரங்கள், வேதனை இல்லாமல் இருக்க வேண்டும்' என வேண்டி பொங்கல் படையலிட்டு வணங்குவோம்.
சூரியன் இல்லை என்றால் விவசாயம் இல்லை. உடல், உயிருக்கு உணவு அவசியம். அதை உற்பத்தி செய்ய ஒளிச்சேர்க்கை அவசியம். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர், நிலம் போன்றவை நம்ம பக்கத்திலேயே இருக்கு. ஆனால் ஒளிமூலம் ஊட்டம் தரும் சூரியன், ரொம்ப துாரத்தில் உள்ளது. அதற்கு நன்றி கூற பொங்கல் வைத்து வழிபடுகிறோம். பொங்கல் பண்டிகை அன்று சொந்த ஊருக்கு செல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக பண்டிகைக்கு பிறகு சென்று குலதெய்வத்தை வணங்குவோம். இன்று நகரில் உள்ள எங்கள் வீட்டில் பொங்கலை எப்படி கொண்டாட போகிறோம் என்றால், ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
பொங்கலுக்காக கரும்பு, இஞ்சியை எங்கள் வீட்டின் மாடியிலேயே பயிர் செய்து வருகிறோம். வெளியே வாங்குவதில்லை. மண் பானை, அரிசியை மட்டும் வெளியே வாங்குவோம். நாங்கள் கடமைக்காக பொங்கலை கொண்டாடுவதில்லை.
ஜாதி, மதம் பேதமின்றி எல்லோரும் கொண்டாடுவது பொங்கல் பண்டிகையைதான். அது பொதுவான பண்டிகை. ஏன்னா... எல்லா ஜாதி, மதத்திலும் உழவராக இருக்கின்றனர். அதனால்தான் அரிசி ஜாதி, மதம் பார்த்து விளைவதில்லை,'' என நெகிழ்ச்சியாக கூறி நமக்கு விடை கொடுத்தனர் இந்த இசை தம்பதி.

Advertisement

 

மேலும் பொங்கல் மலர் செய்திகள்:We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X