பம்பா பதி !
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2011
00:00

கர்நாடக மாநிலத்தின் ஹம்பியில் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கோயில்களும், மண்டபங்களும் ஏராளமாக உள்ளன. கலைநுட்பம் வாய்ந்த இந்த வேலைப்பாடுகள் ஹொய்சாள கலாசாரத்தை நினைவுபடுத்துக்கின்றன.
ஹம்பியில் உள்ள கோயில்களுள் துங்கபத்ரா நதியின் தென்கரையில் அமைந்துள்ள விரூபாட்சிஸ்வரர் கோயில் முதன்மையானது. தூண்கள், மண்டபங்கள், கோபுரங்கள் ஆகியவற்றில் கலைநயம் மிளிரும் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.

நூற்று அறுபதடி உயரம் கொண்ட ஒன்பது நிலை ராஜகோபுரம். முதல் இரண்டு நிலைகள் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதில் தெய்வீகச் சிற்பங்களும் வாழ்வியலை விளக்கும் சிற்பங்களும் அழகான முறையில் வடிக்கப்பட்டுள்ளன. அதன் மேல் அமைந்துள்ள ஏழு நிலைகள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. இது 15-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.
கோயில் இரண்டு பிராகாரங்களைக்கொண்டது. வெளிப்பிராகாரத்தில் நூறு கால் மண்டபம், கல்யாண மண்டபம் மற்றும் மடைப்பள்ளி உள்ளன. மடைப்பள்ளிக்கு துங்கபத்ராநதியிலிருந்து நேரடியாக நீர வரும்படியாக வாய்க்கால் அமைந்துள்ளது.
முதற் பிராகாரத்தைக் கடந்து உட் பிராகாரத்திற்கு மூன்று நிலைகளைக் கொண்ட உள் கோபுரத்தின் வழியாகச் செல்ல வேண்டும். அங்கும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.
உட்பிராகாரத்தில் கற்களால் வடிக்கப்பட்ட தீபஸ்தம்பம், தாமரை வடிவிலான பலிபீடம், கொடிக்கம்பம், நந்தி மண்டபத்தில் மூன்று நந்திகள் வரிசையாக இடம் பெற்றுள்ளன.
அடுத்துள்ளது 38 தூண்களைக் கொண்ட அழகிய ரங்க மண்டபம். நுழை வாயிலில் அமைந்துள்ள இருதூண்களில் யாளியின் உருவத்தை அழகுற வடித்திருக்கின்றனர். மண்டபச்சுவரில் சிவபெருமான், விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், திரௌபதியின் திருமண நிகழ்வு, பீடாதிபதி வித்யாரண்யரின் திருவீதி உலா ஆகியவற்றை விளக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் நேர்த்தியாகத் தீட்டப்பட்டுள்ளன.
கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட இம்மண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே அர்த்த மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல் பகுதி பத்ம விதானமாக அமைந்துள்ளது சிறப்பாகும்.
கருவறை வாயிலின் இருபுறமும் எட்டடி உயரமுள்ள தெய்வங்கள் நாற்கரங்களுடன் கம்பீரமாக இருக்கின்றன. கருவறையில் நாகாபரணத்துடன் எழிலோடு காட்சி தந்து அருள்பாலிக்கும் விரூபாட்சீஸ்வரரை கண்குளிர தரிசிக்கலாம்.
பம்பா என்பவள் பிரம்மனின் மகள். சங்கமா எனும் பரம்பரையைச சார்ந்தவர்களின் குலக் கடவுளாக இவள் விளங்குகிறாள். ஒருசமயம் பம்பா தேவி கடுந்தவம் புரிந்து சிவனை இத்தலத்தில் மணந்ததால் ஈசனுக்கு "பம்பா பதி' எனும் திருநாமமும் உண்டு. வியாசராஜர் மற்றும் புரந்தரதாசர் ஆகியோர் இத்தலத்து ஈசன் மீது எண்ணற்ற கீர்த்தனைகளைப் பாடி உள்ளன.
பிரதான சன்னதியின் வடக்குப் பகுதியில் புவனேஸ்வரி, லட்சுமி, பம்பா தேவி ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இச்சன்னதிகளுக்கு அருகேயுள்ள சுரங்கப் பாதை வழியே கீழ் நோக்கி இறங்கிச் சென்றால் குலகங்கை மாதவ சுவாமி சன்னதி உள்ளது. வழி மிகவும் குறுகலாகவும் இருள் சூழ்ந்தும் இருப்பதால் கவனமுடன் இறங்கிச் செல்லுதல் அவசியம். நவகிரக சன்னதியும் அருகே அமைந்துள்ளது.
கருவறைக்குப் பின்பகுதியில் உள்ளபடி வழியே மேலே சென்றால் வலது பக்கம் இருள் சூழ்ந்த அறை போன்ற பகுதி உள்ளது. இவ்வறையின் கிழக்குச்சுவரில் ஒரு சிறிய துவாரம் உள்ளது. சூரிய ஒளி இத் துவாரத்தின் வழியே ஊடுருவி வந்து மேற்குச் சுவரில் ராஜகோபுரத்தின் நிழல் தலைகீழாகத் தெரிவதை ஆச்சரியத்துடன் கண்டு களிக்கின்றனர் பக்தர்கள்.
தொடர்ந்து அப்படிகள் வழியே சென்றால் இத்திருக்கோயில் உருவாக முக்கியப் பங்கு வகித்த சிருங்கேரி ஆச்சாரியார் வித்யாரண்யா அவர்களுக்கு அமைந்துள்ள தனிச் சன்னதியைக் காணலாம். இவர் 13-ம் நூற்றாண்டில் விஜய நகர சாம்ராஜ்யம் உருவாக முக்கிய காரணமாக விளங்கியவர். ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட நாகராஜா சன்னதியும் அருகே உள்ளது.
மூலவர் சன்னதிக்கு வடப்புறம் அமைந்துள்ள ஐந்து நிலை கோபுரம் கண்கிரிகோபுரம் என்றழைக்கப்படுகிறது. இக்கோபுரத்தை அடுத்துள்ள நடைபாதையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது மன்மதக்குளம். இப்பாதையின் மேற்குப்பகுதியில் சிவன் மற்றும் அம்பாள் சன்னதிகள் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காட்சியளிப்பது வேதனையளிக்கிறது.
கோயில் முழுக்க பைரவரின் வாகனங்கள் (நாய்கள்) வலம் வருவதும் ; சன்னதிகளில் எல்லாம் சாணக்குவியலும் அதிரச் செய்யும் அவலங்கள் ! இதற்கும் மேலாக கோயிலின் பராமரிப்பில் உள்ள பரிதாப நிலைக்கு சாட்சியாக, ரிடபவாகனமே நேரில் வந்துவிட்டதோ என நினைக்கும்படி, கருவறை ஈசனின் பின்புறம் மாடு ஒன்று நின்று அசைபோட்டுக்கொண்டிருந்தது.
அக்காலத்தில் ராஜ கோபுரத்தின் முன் உள்ள சாலையின் இருபுறமும் அங்காடிகள் நிறைந்த மண்டபங்கள் இருந்தனவாம். ஹம்பி அங்காடி என அழைக்கப்பட்ட அவை காலப்போக்கில் சிதைந்து போயின. அம்மண்டபங்களை இப்போதும் காண முடிகிறது.
கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும் ; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
டிசம்பர் மாதத்தில் இவ்வாலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் பம்பா - விரூபாட்சீஸ்வரர் திருக்கல்யாண உற்சவத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
இக்கோயிலின் தலையாய பெருந்திருவிழா, தேர்த்திருவிழாவாகும். பிப்ரவரி மாதத்தில் ஒருவார காலம் கொண்டாடப்படும் இவ்விழாவில் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் அளவில் பங்கேற்பது சிறப்பாகும்.
கர்நாடக மாநிலம் ஹம்பியிலிருந்து இக்கோயில் நடந்து செல்லும் தூரம்தான். ஆட்டோ வசதி உள்ளது. ஹோஸ்பெட் ரயில் நிலையமும் அருகில் உள்ளது.

-ஆலால சுந்தரம், கோவை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X