உலகப் பயணியரை ஈர்க்கும் கிவி தேசம் | சுற்றுலா | Tour | tamil weekly supplements
உலகப் பயணியரை ஈர்க்கும் கிவி தேசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
00:00

உலகம் தழுவிய அளவில் சுற்றுலா பயணியரின் விருப்பத்துக்குரிய நாடாக, நியூசிலாந்து நாடு பிரபலமாகி வருகிறது. பிரபல பயண இணையதளங்கள், பயண இதழ்கள் ஆகியவற்றின் டாப் பட்டியலில் தவறாமல் இடம் பெற்றிவிடுகிறது இது. அண்மையில் பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் வெளியிட்ட பட்டியலில், தொடர்ந்து ஐந்தாவது நாடாக, பயணிக்க சிறந்த நாடாக நியூசிலாந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, லோன்லி பிளானட் இணையதளம் பட்டியலிட்ட 2018ல் பயணிக்க சிறந்த நாடுகளிலும் இரண்டாவது முறையாக நியூசிலாந்து இடம்பிடித்துள்ளது. பிரபல பயண இதழான 'கோன்டி நாஸ்ட் டிராவலர்' வெளியிட்ட உலகின் சிறந்த 20 நாடுகளிலும் நியூசிலாந்து இடம்பெற்றுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவின் முன்னணி சாகச டெஸ்டினேஷன் ஆக, நியூசிலாந்தை தேர்ந்தெடுத்துள்ளது, வேர்ல்ட் டிராவல் அவார்ட் அமைப்பு.
உலகின் 7வது மகிழ்ச்சியான நாடான நியூசிலாந்தின் நகர்ப்புறங்களில் உள்ள சாகச சுற்றுலா அம்சங்கள், சுவாரஸ்யமான வனப்பகுதி, அழகான நிலத்தோற்றங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகள், மவோரி கலாசாரம் மற்றும் வாழ்க்கை, சிறப்பான காலநிலை, சிறந்த மது மற்றும் உணவு வகைகள், குறைவான குற்றச் செயல்கள், மாசுபடாத சூழல், போன்ற போன்ற காரணிகள் தான் பயணியர் இந்த அளவுக்கு ஈர்க்கப்படுவதற்கு காரணங்களாக அமைந்துள்ளன. நியூசிலாந்து மட்டுமல்ல, அங்குள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள், ரிசார்ட்கள் கூட, உலகின் சிறந்தவை பட்டியல்களில் இடம் பெறுகின்றன.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X