டெல்லி - மும்பை: உலகின் பிசியான வழித்தடம் | சுற்றுலா | Tour | tamil weekly supplements
டெல்லி - மும்பை: உலகின் பிசியான வழித்தடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
00:00

உலகின் பிசியான விமான வழித்தடம் லண்டன் - பாரீஸ் தடமோ, நியூயார்க் - லாஸ் ஏஞ்செலஸ் தடமோ அல்ல; தென்கொரியாவின் தலைநகரான சியோல் நகருக்கும், அந்நாட்டிலுள்ள ஒரு குட்டித் தீவுக்கும் இடையிலான வழித்தடம் தான் அது. 2017ம் ஆண்டில் மட்டும் 65,000 முறை, இந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் விமானங்கள் பறந்திருக்கிறது என்கிறது, சர்வதேச வான்போக்குவரத்து தகவல் அமைப்பு. பயணம் மற்றும் சுற்றுலா துறையில் ஆசிய பிராந்தியம் வேகமாக வளர்ந்து வருவதை இது உறுதிப்படுத்துகிறது. இப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது, சிட்னி-மெல்போர்ன் வழித்தடம். இந்தியாவின் அரசியல் தலைநகரையும், வணிகத் தலைநகரையும் இணைக்கும் டெல்லி-மும்பை வழித்தடம், உலகின் மூன்றாவது பிசியான வழித்தடமாக விளங்குகிறது. இரண்டு நகரங்களுக்கு இடையிலான, 16 மணி நேர ரயில் பயணத்தை, இரண்டு மணிநேரமாக குறைப்பதால், நாளுக்கு நாள் இத்தடத்தில் பயணியரின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X