நம்நாட்டின் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, முதல் முறையாக எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்த உள்ளது.
டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள வாகனக் கண்காட்சியில் மாருதி சுசூகி தனது எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளது.
ஈ-சர்வைவர் (e-Survivor) எனப் பெயரிடப்பட்ட இது எஸ்.யூ.வி (SUV) வகையைச் சேர்ந்தது. இதில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும். நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய பல பாகங்கள் தானியங்கி முறையில் இயங்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது.