சாய்த்த தலையை நிமிர்த்திப் பார்க்கும் அம்மன்! | குமுதம் பக்தி | Kumuthampakthi | tamil weekly supplements
சாய்த்த தலையை நிமிர்த்திப் பார்க்கும் அம்மன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
00:00

கிருஷ்ணன் அவதாரத்துடன் தொடர்பு கொண்ட தலங்கள் வட இந்தியாவில் ஏராளம், மதுரா, பிருந்தாவனம், துவாரகா போன்றவை அவற்றுள் மிகவும் முக்கியமானவை.
போபால் அருகில் இருக்கும் கங்கல் காளி என்ற தேவியும் கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்டையவள். குதாவல் என்ற சிற்றூரில் எழுநதருளியுள்ள அந்த தேவியை அங்கு வணங்காதவர்களே இல்லை எனலாம். சக்திபீடமாகவே கருதப்படும் தலம் இது.
பிரம்மா, துவாபர யுகத்தில் கிருஷ்ணர் அவதரிப்பதற்காக தேவகியை ஒரு குழந்தையாக வடிவாக்கியபோது, இந்த தேவியின் விக்ரகமும் உடன் எழுந்தது. துர்கா தேவியின் அவதாரமான இவள், கம்ஸ காளி என்றே அக்காலத்தில் அழைக்கப்பட்டாள்.
இந்தக் காளியாலும் அசுர வதம் நிகழ்ந்திருக்கிறது. உலக நன்மைக்காக அசுரவதத்தினை இதழில் புன்னகையுடன் இந்த தேவி புரிந்திருக்கிறாள். உக்ரமான போர்களினால் ஏற்பட்ட அதிக வெப்பம் தேவியின் உடலை உலரச் செய்திருக்கிறது. வெறும் எலும்புக்கூடுபோல் காட்சி தந்த தேவி. பின்னர் கங்கல் காளி என்ற நாமத்தைப் பெற்றால் கங்கல் என்ற சொல்லுக்கு எலும்புக்கூடு என்று பொருள். எலும்புகள், மண்டை ஓடுகள் கொண்ட மாலை அணிந்தவள் என்பதாலும் கங்கல் காளி என்று அழைக்கப்படுகிறாள் என்று சொல்பவர்களும் உண்டு.
இந்த தேவியின் மற்ற மகிமைகள் என்னென்ன?
வட இந்தியாவில் நவராத்திரி வெவ்வேறு பருவங்களில் கொண்டாடப் படுகிறது. அவற்றுள் முக்கியமானவை இரண்டு ஒன்று சைத்ர நவராத்திரி மற்றொன்று ஷாக் நவராத்திரி, சைத்ர நவராத்திரி ஸ்ரீராம நவமியை ஒட்டியும், ஷரத் நவராத்திரி துர்கா பூஜையிலும் முடிவடைகின்றன.
அறியாமையும் ஒரு துன்பம்தான். அறியாமை என்ற துன்பத்தை அழிப்பவள் துர்க்கா. துக் அல்லது துக்ஹ என்ற பதங்கள் வடமொழியில் துக்கத்தை குறிப்பிடுகின்றன. துர்கதி என்பது விதி மோசமான நிலைமையைத் தெரிவிக்கும் அதனை களைபவள் துர்க்கா.
துர்கசி துர்க பவ ஸம்சார நௌராஸங்கா
அதாவது, சம்சாரம் என்ற சாகரத்தினை (கடலை) கடக்க உதவுபவள் துர்கா!
துர்காயை துர்கா பராயை
தொல்லைகளை வென்று அவற்றினின்று நம்மை விடுவிப்பவள் துர்க்கா.
கங்கல் காளியின் சன்னதியில் இரண்டு நவராத்திரிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஷரத் நவராத்திரியில், விஜயதசமி, துர்கா பூஜையாகவே மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சில நொடிகளுக்கு ஒரு பேரதிசயம் நிகழ்கிறது.
இயல்பாக சாய்ந்து இருக்கும் தேவியின் கழுத்து சிலநொடிகள் தானாகவே நேராகிறது. அதைக் காண மக்கள் கூட்டம் அலைமோதும். கிட்டத்தட்ட நாற்பத்து ஐந்து டிகிரி வரை கழுத்து நிமிரும் அதிசயம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
அதுமட்டுமல்ல; குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு காளியின் முழு அருளும் கிடைக்கிறது. இருகரங்களையும் பற்றிக் கொண்டு புறங்கைப்புறம் ஆலயத்தின் பின்புறம் சுவரில் வைத்து மௌனமாக வழிபடும் பக்தர்கள் ஏராளம். பசுஞ்சாணியின் அடையாளங்களும் சிறிய பிராகாரத்தின் சுவர்களை நிரப்பியுள்ளன. இவை, பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையையும் பக்தியையும் வெளிப்படுத்துகின்றன.
சாய்ந்த சிரத்துடன் காட்சிதரும் தேவி, துர்காஷ்டமி அன்று மட்டும் தலையை நிமிர்த்தி நேராகப் பார்ப்பதன் காரணம் என்ன என்பது அந்த அம்மனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

எங்கே இருக்கு: மத்திய பிரதேச மாநிலம், போபாலில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் குதாவல் என்னும் ஊரில் கங்கல் காளிதேவி ஆலயம் உள்ளது.

- போபால் ஜி. குமார்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X