உத்தனஹள்ளி ஜூவாலாமுகி திரிபுரசுந்தரி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
00:00

ஆதிசக்தி செய்த அசுர வதங்களுள் குறிப்பிடத்தக்கது, ரக்த பீஜனை அழித்தது.
நிசும்பன் என்ற அசுரனை வதம் செய்த தேவியைக் கொல்வதற்கு தனது படைத்தளபதியான ரக்தபீஜனை எத்த களத்திற்குள் அனுப்பினான் அவன் அண்ணன் சும்பன்.
அவன் சரீரத்திலிருந்து பூமியில் விழும் ஒவ்வொரு துளி ரத்தமும் அவனைப் போலவே உருவமும், பலமும் கொண்ட ஓர் அசுரனாக உருப்பெறும் என்பது ரக்தபீஜன் வாங்கிய வரம். இப்படிப்பட்ட வரம் பெற்றதால் அவன் மதம் கொண்ட யானையைப் போல் யுத்த களத்திற்குள் நுழைந்தான்.
கதை ஏந்தி மாத்ரு தேவதையான இந்திரசக்தியுடன் யுத்தம் புரிந்தான். தனது வஜ்ராயுதத்தால் அவனை அடித்தாள் இந்திரசக்தி. அதனால் அவன் உடலிலிருந்து ரத்தம் பெருகியது. அவற்றிலிருந்து அவனை போல் வடிவும், வலிமையும் வாய்ந்த ஆயிரமாயிரம் அசுரர்கள் தோன்றினார்கள்.
வாராஹி வாளாலும், மகேஸ்வரி திரிசூலத்தாலும், கௌமாரி சக்தி ஆயுதத்தாலும் வைஷ்ணவி சக்ராயுதத்தாலும் ரக்தபீஜனை வதைத்தார்கள். அசுரனின் சரீரத்திலிருந்து ரத்தம் வௌ்ளமாக ஓடியது அதிலிருந்து வெளிவந்த அசுரர்கள் உலகம் முழுக்க வியாபிக்கத் தொடங்கினார்கள். பல்கிப் பெருகிய அசுரர் பலம் கண்ட தேவர்கள் பயந்தனர். தேவியிடம் மீண்டும் சரண் அடைந்தனர்.
சாமுண்டி கோபத்துடன் தனது புருவங்களை நெறித்தாள். அதிலிருந்து உருவான காளி ரக்தபீஜனின் உடலில் இருந்து வெளிவந்த ரத்தத்தைக் குடித்தாள். அப்போது மற்ற தேவதைகள் பாணத்தாலும் கத்தியாலும் வஜ்ரத்தாலும் அசுரனை தாக்கினார்கள். பலவிதமான ஆயுதத்தால் தாக்கப்பட்ட அசுரன், ஒரு கட்டத்தில் உடலில் உள்ள ரத்தம் முழுவதும் வெளியேற பூமியில் விழுந்து மடிந்தான்.
சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எனும் முத்தொழிலுக்குக் காரணசக்தியாய் விளங்கும் நாராயணியே உனக்கு நமஸ்காரம் எனப் பயந்தனர் யாவரும்.
தேவியின் யுத்த பராக்கிரமத்தை அஷ்டமி, நவமி, சதுர்த்தி தினத்தில் படிப்பவர்கள், கேட்பவர்களுக்கு எதிரிகள், வௌ்ளம், நெருப்பு, ஆயுதங்கள் போன்றவற்றால் பயம் ஏற்படாது. குலம் தழைக்கும். தனம், தான்யம் பெருகும். கிரஹ பீடை நீங்கும். புண்ணியம் உண்டாகும். ஞானம் சித்திக்ம் என்கின்றன புராணங்கள்.
அசுரனின் உதிரத்தைப் பருகிய தேவி, ஜூவாலா முகி திரிபுரசுந்தரி எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ள தலம் ஒன்றை தரிசிப்போம்.
சாமுண்டி மலையின் அடிவாரத்தில் அழகிய சூழலில் அமைந்துள்ளது மைசூரு மகாராஜாக்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், ஆனைமுகன் தரிசனத்துடன் ஆலயத்தை வலம் வந்து விட்டு சிவன் மற்றும் உற்சவரை தரிசனம் செய்கிறோம்.
தேவி தனது கரங்களில் சங்கு, சக்கரம், பாணம், வஜ்ரம், கோடரி, கதை, கத்தி, கலப்பை, உலக்கை, கேடயம், தோமரம், கயிறு, திரிசூலம் என பலவகை ஆயுதங்கள் தரித்திருந்தாலும் மிக அழகிய ரூபம் கொண்டவள்.
கருவறையில் மூவுலகிலும் அழகிற் சிறந்த ஜூவாலாமுகி திரிபுரசுந்தரியின் திருவுருவ தரிசனம் கிடைக்கிறது. தனது நாக்கை தொங்க விட்டு நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். மிகவும் ஆற்றல் வாய்ந்த தேவியாகத் திகழும் இவளை வழிபட்டால் பாவம் நீங்கும் புண்ணியம் பெருகும்.
பெரிய விழாவாக வருடம் ஒருமுறை நடைபெறும் ஜாத்ரா, பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மைசூரு அரசர் கிருஜ்ணராஜ உடையார் அளித்த திருவாபரணங்கள் அப்பொழுது தேவிக்கு அணிவிக்கப்படுகின்றன. அன்றுதான் அவரின் பட்டத்தரிசிக்கு தேவி காட்சி தந்ததாக ஐதிகம். ஜாத்ராவின் போது கூடும் பக்தர்கள் கூட்டம் இவளின் கருணைக்குக் கட்டியம் கூறுகிறது.
மலை மீதிருக்கும் சாமுண்டி ஆலயத்தைவிட பழமையானது திரிபுரசுந்தரி ஆலயம். சாமுண்டியின் தங்கையாக இத்தேவி வழிபடப்படுகிறாள். சாமுண்டியை தரிசனம் செய்பவர்கள் இத்தேவியையும் வழிபட்டுச் செல்வது மரபு.
அதிசயங்கள் நிகழ்த்தும் இந்த அம்பிகையின் அருள் பெற நீங்களும் ஒருமுறை இத்தலம் சென்று வரலாமே!

எங்கே இருக்கு: மைசூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் மைசூரு - நஞ்சன்கூடு சாலையில் அமைந்துள்ளது. உத்தனஹள்ளி ஜூவாலாமுகி திரிபுரசுந்தரி ஆலயம்.

- சமாத்மிகா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X