இந்தியர்களை கவர்ந்த பாலைவன நகரம் | சுற்றுலா | Tour | tamil weekly supplements
இந்தியர்களை கவர்ந்த பாலைவன நகரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 பிப்
2018
00:00

இந்தியர்களின் மனம் கவர்ந்த சுற்றுலா தலமாக மாறுகிறது வளைகுடா நாடான துபாய். கடந்த 2017ம் ஆண்டில் மட்டும், 21 லட்சம் இந்தியர்கள் துபாய்க்கு சென்று வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட, 15 சதவீதம் அதிகம் என்கிறது துபாய் சுற்றுலா துறையின் அறிக்கை. துபாய்க்கு கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதிலும் இருந்து, 1.58 கோடி பேர் வந்து சென்றுள்ளனர். 2020ம் ஆண்டுக்குள், 2 கோடி பயணியரை ஈர்த்துவிட வேண்டுமென்று துபாய் சுற்றுலாதுறை இலக்கு வைத்துள்ளது.
சுற்றுலா பயணியர் துபாயை அதிகம் விரும்ப காரணம், இங்குள்ள பிரம்மாண்ட ஷாப்பிங் மால்கள், எண்ணற்ற ஆடம்பர விடுதிகள், ரிசார்ட்டுகள் போன்றவை தான். சர்வதேச விமான வழித்தடங்களின் மையமாகவும் இது இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியர்களை கவர துபாய் சுற்றுலா துறை மேற்கொண்டு வரும் '#BeMyGuest' என்ற பிரசாரமும் ஒரு காரணம் என்கின்றனர்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X