சமைக்க நேரமில்லை, சாப்பிட நேரமில்லை... இப்படி ஏதோ ஒரு காரணத்தால், நம்மில் பலர் காலை உணவைத் தவிர்க்கிறோம். இதனால் காலையிலேயே நமது ஆற்றல் குறைந்து சோர்வடைந்து விடுகிறோம். அதற்கு பொருத்தமான பழச்சாறு வகை, தர்பூசணி ஸ்மூத்தி. காலை பிரேக்பாஸ்டுக்கு இது போதுமானது மட்டுமல்ல, மதிய உணவுவேளை வரை, பசிக்காமல் இருக்கச் செய்யும்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி : 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
புதினா இலை : 1 டீஸ்பூன் (நறுக்கியது)
சர்க்கரை : 1 டீஸ்பூன்
ஐஸ்கட்டி : 2
செய்முறை:
விதைகள் நீக்கப்பட்ட தர்பூசணி, புதினா இலை, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து, ஸ்மூத்தாகும் வரை பிளண்டரில் அரைக்கவும். பிறகு கிளாசில் ஊற்றி ஐஸ்கட்டியைச் சேர்த்தால் சுவையான ஸ்மூத்தி தயார்.