அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2018
00:00

அன்புள்ள சகோதரிக்கு -—
என் வயது, 64; அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர், என் கணவர். நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஒரு மகனும், மகளும் உள்ளனர். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில், 'செட்டில்' ஆகி விட்டனர்.
சென்னை புறநகரில் தனி வீட்டில் வசிக்கிறேன். உதவியாக, துாரத்து சொந்தக்கார பையன் தங்கியுள்ளான். கல்லுாரியில் படிக்கிறான்; வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து தருவான். அவனது கல்வி கட்டணம் மற்றும் செலவுக்குப் பணம் கொடுத்து விடுவேன்.
கணவரின், 'பென்ஷன்' பணம், தேவைக்கு போதுமானதாக உள்ளது. தனிமை மற்றும் இயலாமை காரணமாக, முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடலாம் என்று எண்ணியுள்ளேன். வீட்டை விற்று, அந்த பணத்தை, வங்கியில், 'டெபாசிட்' செய்து, அதிலிருந்து வரும் வட்டி பணத்தை முதியோர் இல்லத்துக்கு கட்டி விடலாம் என எண்ணி, வீட்டை விற்க முயற்சித்தேன்.
வீட்டைப் பார்க்க வருபவர்கள் நன்றாக இருப்பதாக கூறினாலும், என்ன காரணத்தாலோ, அதன் பின் தொடர்பு கொள்ள மாட்டார்கள். காரணம் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
இந்நிலையில், கடைசியாக வீடு பார்க்க வந்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'யாருக்கும் நஷ்டமில்லாமல், ஒரு விலையை சொல்லியும், ஏன் தகவல் தெரிவிக்கவில்லை...' என்று கேட்டேன். என் உறவினர் பையன் தான், 'தற்சமயம் வீடு விற்கும் எண்ணம் இல்லை...' என்று நான் சொல்லச் சொன்னதாக, அவரிடம் தெரிவித்து இருக்கிறான்.
அதுமட்டுமல்லாமல், நான் கூறிய விலையை விட, அதிக விலைக்கு விற்க இருப்பதும், அதற்காக, போலியான, 'டாக்குமென்ட்டு'களை தயார் செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.
என் வீட்டுப் பத்திரம் வங்கி லாக்கரில் இருப்பதால், அதற்கும் ஒரு போலி ஆவணம் தயார் செய்ய, ஏற்பாடு செய்துள்ளான்.
'இந்த ஏமாற்று வேலை எல்லாம் எதற்கு?' என்று அவனிடம் கேட்டதற்கு, 'நாலு வருஷமாக இந்த வீட்டுக்கு நாயாக உழைத்திருக்கிறேன். யாரும் இந்த வீட்டுக்கு உரிமை கோரப் போவதில்லை; எனக்கு கொடுத்தால் என்ன...' என்று திமிராக பேசுகிறான்.
வேறு எந்த நெருங்கிய சொந்தமும் இல்லாத தனி மனுஷியான நான், என்ன செய்வது என்று தெரியவில்லை.
என் மகனிடம் இது பற்றி பேசினால், 'போகட்டும் விட்டு விடுங்கள்...' என்கிறான். பெற்ற பிள்ளைகளின் அருகாமையும், ஆதரவும் இல்லாமல், மீதி காலத்தை எப்படி கழிப்பது என்று கவலையாக உள்ளது.
நல்ல ஆலோசனை தருவீர்கள் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு,
உங்கள் சகோதரி.


அன்புள்ள அம்மாவுக்கு —
உறவுக்காரப் பையனை அழைத்து, 'போலி ஆவணம் தயாரித்து, ஒரு கிழவியின் சொத்தை அபகரித்து, கிரிமினலாய் உன் வாழ்க்கையை ஆரம்பிப்பது முறையல்ல...' என, அவனுக்கு அறிவுரை வழங்குங்கள். தனியாக அவனுக்கு பண உதவிகள் செய்திருந்தாலும், அவன் உங்களை பார்த்துக் கொண்ட காலத்திற்கு ஒரு சம்பளத்தை நிர்ணயித்து, கொடுத்து விடுங்கள். இனி, உன் உதவி தேவைப்படாது; நீ வரவேண்டாம் எனக் கூறி, அவனை இதமாய் கத்தரித்து விடுங்கள்.
தேவைப்பட்டால், வழக்கறிஞர் உதவியுடன் இளைஞனின் பெயர், புகைப்படத்துடன், உங்கள் வீட்டு விற்பனைக்கும், இவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, பிரபல நாளிதாழில் விளம்பரம் வெளியிடுங்கள்.
உறவுக்காரப் பையனின் நடத்தையில் அல்லது பேச்சில் வன்முறை தென்பட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். மகன் - மகள் குடும்பத்தை, ஒரு மாதம் இந்தியாவுக்கு வரச்சொல்லி, உங்களுடன் தங்கச் சொல்லுங்கள். வீடு விற்பனையில் உங்கள் மகனை முழுமையாக ஈடுபடுத்துங்கள். துரிதமாக வீடு விற்க, இணையதளங்களில் விளம்பரம் செய்யுங்கள்.
வீட்டை தகுந்த விலைக்கு விற்று, பணத்தை வங்கியில் போட்டு, நீங்கள் முதியோர் இல்லத்தில் சேரும் வரை வழக்கறிஞர் ஆலோசனையில் இருங்கள். கட்சிக்காரருக்கு விசுவாசமாய் இருக்கக் கூடிய வழக்கறிஞரை அமர்த்துங்கள். வீடு விற்பனையில், 25 சதவீதம் மகனுக்கும், 25 சதவீதம் மகளுக்கும் கொடுப்பதாக வாக்குறுதி கொடுங்கள்.
வீடு விற்பனையாகும் வரை தனிமையில் இருக்காதீர்கள். அண்டை அயலாருடன் அன்பாய், நட்பாய் பழகுங்கள். வீடு விற்பனை செய்தபின், முதியோர் இல்லத்தில் சேர்வதற்கு முன், எதாவது ஒரு அன்பான உறவுக்கார பெண்ணுடன் இந்திய அளவில் ஆன்மிக சுற்றுலா சென்று வாருங்கள். தேவைப்பட்டால், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
'வீடு விற்ற பணத்தை, இரண்டாக பிரித்து, உங்கள் இருவரிடமும் கொடுத்து விடுகிறேன். ஆண்டுக்கு ஆறு மாதம் நீயும், ஆறு மாதம் உன் தங்கையும் என்னை கவனித்துக் கொள்கிறீர்களா...' என, மகன் - மகளிடம் கேளுங்கள். அவர்கள் ஒப்புக்கொண்டால், நீங்கள் முதியோர் இல்லம் செல்லாது அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி தங்கலாம். பேரன் - பேத்திகளை உடனிருந்து கொஞ்சும் வாய்ப்பும் கிடைக்கும்.
வயோதிகத்தில் பிள்ளைகளிடம், 'ஈகோ' பார்க்கக் கூடாது; மனம் விட்டு பேச வேண்டும். அவரவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும். கணவர் உயிரோடு இருந்தபோது, இருந்த நிலை இப்போது கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தம். நமக்கு உடன் இருந்து உதவி செய்பவர் நல்லவரா, கெட்டவரா என ஆராயாமல் உடனிருக்க அனுமதிக்கக் கூடாது. அவர்கள் முன் நகை, பணம் புழக்கத்தை காட்டக் கூடாது. மொத்தத்தில், முதியவர்கள் புறநகர் பகுதியில் தனியே வசித்தல் கூடாது.
அம்மா... உங்களின் மகன், மகள் இல்லா வாழ்க்கை, அர்த்தப்பூர்வமாய் அமைய, காஞ்சி காமாட்சியம்மன் அருள் புரியட்டும்!
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
28-பிப்-201816:27:39 IST Report Abuse
Girija இது மாதிரியானா முதியவர்களுக்கு வங்கியின் "ரிவெர்ஸ் மார்ட்கேஜ்" பாதுகாப்பானது . இந்த கடன் வசதியில் சொத்தின் மதிப்பின் பேரில் ஐந்து, பத்து, வருடங்கள், நீங்கள் உங்கள் கடைசி காலம் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் பெற்று வரலாம். உங்களுக்கு இந்த பணம் அவசியமோ இல்லையோ, இது மாதிரி கடன் வசதி பெறுவதன் மூலம் உங்கள் இறுதி காலம் வரை சொத்து வங்கியின் பெயரில் பத்திரமாக இருக்கும் . வங்கி படிவத்தில் நீங்கள் வாரிசுதாரர்கள் அல்லது ஆசிரமங்களை குறிப்பிடலாம். உங்கள் காலம் வரையில் நீங்கள் உங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக தங்கி இருக்கலாம். வங்கியில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை நேரில் வந்து உங்கள் சொத்தை தணிக்கை செய்வர். உங்கள் காலத்திற்கு பின் வங்கி உங்களுக்கு மாதா மாதம் வழங்கிய தவணை மற்றும் அதற்குண்டான வட்டியை உங்கள் வாரிசுதாரர்கள் வங்கிக்கு செலுத்தி சொத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் அல்லது விற்கலாம். மாதம் வரும் தவணை தொகையை நீங்களே உங்கள் கையால் தரும காரியங்கள் செய்யலாம். இதனால் நீங்கள் வெளி உலக தொடர்புகள் குறையாமல் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
Rate this:
Cancel
KRK - Kumbakonam,இந்தியா
27-பிப்-201810:14:24 IST Report Abuse
KRK ஹும் ஒருத்தருக்கு கூடவா இங்கு மாற்று சிந்தனை இல்லை? அனாதை ஆசிரமத்துக்கு குடுக்க எண்ணமிருக்கு இந்த அம்மாவுக்கு, ஆனால் 4 ஆண்டுகளாக எல்லா உதவியும் செஞ்சி உங்களை பத்திரமா பாத்துகிட்டே சொந்தகார பையனுக்கு குடுக்க எண்ணமில்லை., அடடே என்னே உலகம் உதவின்னு செஞ்சாலே அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் மட்டுந்தானா? உங்க பையனோ பொண்ணோ வறுமையால் பட்டினி கிடக்கும்போது உங்களுக்கு தெரிந்தவர்(உறவினர்) கோயிலுக்கு அன்னதானம் செய்ய சாப்பாடு கொண்டுபோனால் எப்படி இருக்கும் உங்கள் மனநிலை? அதற்காக அந்த பையன் செய்தது சரி என்று சொல்லவில்லை, அந்த பையனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவச்சி அந்த வீட்லேயே குடி வச்சி, பிறக்கும் பிள்ளைகளை கொஞ்சி தன் காலத்தை பெருத்த நிம்மதியுடன் வாழ்ந்து, எனக்குப்புறம் இந்த வீடு இந்த பேர பிள்ளைகளுக்கேன்னு எழுதி வைச்சிட்டு போனா என்ன? தன் சொந்த பிள்ளைகளே சொல்லிட்டாங்க போனா போகட்டும் விடும்மான்னு, அப்டின்னா என்ன அந்த வீடு அவங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. உங்களுக்கு இப்போ வேண்டியதெல்லாம் நல்ல துணையும், ஆதரவும், உடம்புக்கு ஒண்ணுன்னா டாக்டர்கிட்ட கூட்டிப்போக பொறுப்பானவர்களும் தான், அது புரியுதா உங்களுக்கு பெரியம்மா?
Rate this:
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
27-பிப்-201810:02:28 IST Report Abuse
Indhiyan இதில் முக்கியமான பிரச்சினை, 64 வயதில் தனிமையில் வாழும் தாயை , முதியோர் இல்லத்தில் விடும் நிலையில் தள்ளி அமெரிக்காவில் வாழும் மகனை, சுயநலவாதியை என்ன சொல்வது?. மனிதனா அவன்?. தாயை தன்னுடன் கூட்டிச்செல்ல வேண்டும் அல்லது மகன் இந்தியா வரவேண்டும். தாயை தனியாக விட்ட மகனை விட 4 வருடம் பார்த்துக்கொண்ட அந்த உறவுக்காரப் பையன் எவ்வளவோ மேல், அந்த வீட்டை கொடுப்பது கூட தவறில்லை. அந்தப்பையனை தன் பையன் போல் பார்த்துக்கொண்டு வாழலாமே. கூடேவே இருப்பானே. இந்த குற்ற உணர்வில்தான் மகன் கூட போகட்டும் என்கிறாரே என்னவோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X