கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 பிப்
2011
00:00

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரின் புதிய பதிப்பின் சோதனைத் தொகுப்பு 11 வெளியானதாகப் படித்தேன். இதனைத் தரும் இணைய தள முகவரியினைத் தரவும்.
- சா. உத்தம சோழன், மதுரை.
பதில்: மொஸில்லாவின் இணைய தளம் சென்றால், அது உங்களை வழி நடத்திச் சென்று, தேவைப்பட்ட தளத்தில் விட்டுவிடும். இருப்பினும் இதோ அந்த தள முகவரி: http://www.mozilla.com/enUS/firefox/beta/

கேள்வி: என்னிடம் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ பைல்களில் சப்டைட்டில் இணைக்க ஏதேனும் இலவச சாப்ட்வேர் தொகுப்பு உள்ளதா?
- மீ. வான்மதி சேகர், விழுப்புரம்.
பதில்: கிடைக்கிறது. http://www.avirecomp. com/download.php?list.5 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இங்கு avirecomp tool என்ற சாப்ட்வேர் தொகுப்பிற்கான லிங்க் கிடைக்கும். இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். இது AVI பைல்களை மட்டுமே சப்போர்ட் செய்கிறது. ஆனால் ஒரு சின்ன எச்சரிக்கை. இந்த டூல் சப் டைட்டில்களை அமைக்க சற்று கூடுதலான நேரம் எடுத்துக் கொள்கிறது. கவனமாகக் கையாளவும்.

கேள்வி: விண்டோஸ் சில வேளைகளில் உங்களுக்கு ஸ்டிக்கி கீஸ் இயக்கத்தினைத் தொடங்கி வைக்கவா? என்று கேட்கிறது. இது எதனைக் குறிக்கிறது? இவற்றை எப்படி நான் பயன்படுத்த வேண்டும்?
-தீன்ராஜ் சேவியர், காரைக்கால்.
பதில்: எந்த நேரத்தில் இந்த கேள்வி உங்களுக்குக் காட்டப்படுகிறது என்று கேள்வியில் குறிப்பிட்டி ருக்கலாம். அல்லது அந்த சூழ்நிலை நீங்கள் அறியாமலேயே ஏற்பட்டிருக்கலாம். சரி, ஷிப்ட் கீயை தொடர்ந்து ஐந்து முறை அழுத்துங்கள். இந்த கேள்வி கேட்கப்படும். இந்த ஸ்டிக்கி கீ என்பது சிலரின் விசேஷத் தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சில கீ போர்டு செயல்பாடுகளை எளிதாக அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் எக்ஸ்புளோரர் செயல்பாட்டினை நீங்கள் விண்டோஸ் கீ + E கொடுத்து இயக்கலாம். இதில் விண்டோஸ் கீயை அழுத்திய பின்னர், தொடர்ந்து அதனை அழுத்திப் பிடிக்காமல், விரலை எடுத்துப் பின்னர் உ கீயை அழுத்த நினைக்கலாம். ஸ்டிக்கி கீ பயன்பாட்டை இயக்கிவிட்டால், நீங்கள் இரண்டு கீகளையும் ஒரே நேரத்தில் அழுத்த வேண்டியதில்லை. ஒன்றை அழுத்திவிட்டு, விரலை எடுத்துப் பின்னர், அடுத்த கீயை அழுத்தலாம். இதனை Copy Ctrl C , CtrlZ, Shiftletter போன்ற அனைத்து கீ தொடர்களுக்கும் பயன்படுத்தலாம். Alt, Ctrl, Shift, and Windows ஆகிய கீகளுக்கும் பயன்படுத்தலாம். ஸ்டிக்கி கீ பயன்பாடு செயல்பாட்டில் இருக்கையில், இந்த கீகள் ஸ்டிக்கியாக ஒட்டிக் கொண்டு விடுகின்றன என்பதே இதன் பொருள்.

கேள்வி: ‘‘Safely Remove’’ என்ற வசதியினைக் கட்டாயமாகப் பயன்படுத்தித் தான், பிளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்களைக் கம்ப்யூட்டரை விட்டு எடுக்க வேண்டுமா? எப்படி இந்த வசதியைப் பயன்படுத்து வது?
-சுப. திருஞானம், காரைக்குடி.
பதில்: ஆம். கட்டாயம் இதனைப் பயன்படுத்துவது நல்லது. பிளாஷ் ட்ரைவ் அல்லது வேறு ஏதேனும் ஒரு சாதனத்தைப் பயன்படுத்துகையில், நாம் அதனைக் கம்ப்யூட்டரை விட்டு எடுக்கையில், அதில் தகவல் எழுதப் பட்டுக் கொண்டு இருக்கலாம். அல்லது அந்த சாதனத்தில் உள்ள தகவல்கள் படிக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். திடீரென அதனை நீக்குகையில், அந்த சாதனம் கெட்டுப் போகலாம். அல்லது குறிப்பிட்ட பைல் கரப்ட் ஆகிவிடலாம். நாம் பயன்படுத்தும் இணைக்கப்பட்ட சாதனத்திற்கான ஐகான், சிஸ்டம் ட்ரேயில் இருக்கும். அதில் கிளிக் செய்தால், இணைக்கப்பட்டுள்ள Safely Remove சாதனங்களின் பட்டியல் கிடைக்கும். இதில் நாம் நீக்க விரும்பும் சாதனத்தினைக் கண்டறிந்து அதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Safely Remove செய்தி கிடைத்த பின், சாதனத்தை நீக்கலாம். ஒரு வேளை இந்த ஐகான் உங்கள் சிஸ்டம் ட்ரேயில் இல்லாமல் இருந்தால், அல்லது உங்களால் குறிப்பிட்ட சாதனத்தின் ஐகான் எது எனக் கண்டறிய இயலவில்லை என்றால், மை கம்ப்யூட்டர் கிளிக் செய்து, அதில் நீக்கவிரும்பும் சாதனத்திற்கான ஐகானப் பார்க்கவும். அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் Eject என்பதை அழுத்தியபின், அதனை Safely Remove செய்திடலாம்.

கேள்வி: என் இமெயில் செய்திகளை அமைக்கும்போது, பல வேளைகளில், டெக்ஸ்ட்டில், சப் ஸ்கிரிப்ட் மற்றும் சூப்பர் ஸ்கிரிப்ட் அமைக்க வேண்டியுள்ளது. இதனை எப்படி அமைப்பது?
-பேரா. எல். சந்தான லஷ்மி,செஞ்சி.
பதில்: நீங்கள் எந்த வேர்ட் ப்ராசசர் பயன்படுத்து கிறீர்கள் என்று எழுதவில்லை. மைக்ரோசாப்ட் வேர்ட் அல்லது அவுட்லுக் 2007 அல்லது 2010 பயன்படுத்தினால், டூல்பாரைப் பயன்படுத்தி இரண்டையும் அமைக்கலாம். வேர்ட் தொகுப்பில், இது Home டேப்பில் உள்ளது. அவுட்லுக் தொகுப்பில் இது Format Text பிரிவில் உள்ளது.
வேர்ட் 2003க்குப் பின் வந்த எந்த தொகுப்பிலும், இதனை அமைக்கக் கீழ்க்காணும் கீகளைப் பயன்படுத்தவும். முதலில் எந்த டெக்ஸ்ட்டுடன் சப்ஸ்கிரிப்ட் அல்லது சூப்பர் ஸ்கிரிப்ட் அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின்னர், சூப்பர்ஸ்கிரிப்ட் அமைக்க Ctrl+Shift++ கீகளையும், சப்ஸ்கிரிப்ட் அமைக்க Ctrl+= கீகளையும் அழுத்தவும். மீண்டும் நார்மல் டெக்ஸ்ட் அமைய, அதே கீகளை மீண்டும் அழுத்தவும்.
ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் Format மெனு சென்று Character என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் Character டயலாக் பாக்ஸில் Position என்ற டேப்பின் கீழாக, இடது புறம் Superscript, Normal, or Subscript என்று தரப்பட்டிருக்கும். இதில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். வேர்ட் தொகுப்பில், மாற்றப்பட வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, Font மெனு பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் எபக்ட்ஸ் என்ற பிரிவில் இதற்கான வரிகள் இருக்கும். அதில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் விருப்பப்படி அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்பட்ட டெக்ஸ்ட்டை அப்படியே காப்பி செய்து, பின் இமெயில் மெசேஜ் பிரிவில் ஒட்டிவிடலாம்.

கேள்வி: ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் பிரெட் என்று கேள்விப்பட்டேன். இது மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் சம்பந்தப்பட்டது தானே? ஏன் இந்த பெயர்?
-கா. திருச்செல்வன், மதுரை.
பதில்: நல்ல கேள்வி. கூகுள் நிறுவனம் தன் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பல்வேறு பதிப்புகளுக்கு, இது போல டெசர்ட் என அழைக்கப்படும் நொறுக்குத் தீனிகளின் பெயரைச் சேர்த்து வைத்துள்ளது. கப் கேக், டோநட், எக்லேர், ப்ரையோ, ஜிஞ்சர் பிரெட், ஹனி கோம்ப், (Cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honeycomb) என இது செல்கிறது. இதற்கான காரணம் ஒன்றுமில்லை. ஜஸ்ட் ஒரு வேடிக்கைக்குத்தான். தன் புதிய சிஸ்டம் வெளியாகும்போது, அதன் பெயருக்கேற்றார் போன்ற தின்பண்டத்தின் பெரிய அளவில் ஒன்றைச் செய்து, காட்சிக்குத் தன் அலுவலகத்தில் வைத்துவிடும். உங்களுக்கு இன்னொன்றையும் சொல்கிறேன். இன்டெல் நிறுவனம் தன்னுடைய புதிய ப்ராசசர் தயாரிக்கும் திட்டத்தின் குறியீட்டுப் பெயராக புகழ் பெற்ற மலைகள், ஆறுகள், இடங்களின் பெயர்களைச் சூட்டும். இதனால், யாரும் பின்னொரு நாளில் இன்டெல் நிறுவனம் சூட்டும் பெயருக்கு உரிமை கொண்டாட மாட்டார்கள் அல்லவா!

கேள்வி: சரியாகச் சொல்லுங்கள், புரோகிராமர் என்று யாரை, எந்த வேலை செய்பவரைக் குறிப்பிடலாம். பலர் தாங்கள் ஒரு புரோகிராமர் என்று கூறிக் கொள்கின்றனர். ஏதாவது சந்தேகம் கேட்டால், நம்மைக் காட்டிலும் அதிகம் விழிக்கின்றனர். விளக்கம் தரவும்.
-ஆ. நக்கீரன், மதுரவாயில்.
பதில்: உங்கள் பெயருக்கேற்ற கேள்வியும் கோபமும் உங்கள் கடிதத்தில் உள்ளது. ஓகே. பதிலைப் பார்ப்போமா!
புரோகிராமர் என்பவர் யார்?
நாம் அடிக்கடி சாப்ட்வேர் புரோகிராமர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இப்படிக் கூறப்படுபவர் யார்? அவரின் வேலை என்ன? நாம் அன்றாட வாழ்க்கையில் பல சாப்ட்வேர்களைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக உங்களுக்கான ட்ரெயின் டிக்கட் எடுக்கச்செல்கிறீர்கள். டிக்கட் கவுண்டரில் உள்ள கிளார்க் எதிரே உள்ள கம்ப்யூட்டரில் பொறுமையாக நீங்கள் குறிப்பிடும் தேதியில் எந்த பர்த், சீட் காலியாக உள்ளது என்றெல்லாம் கீ போர்டில் பல கீகளைத் தட்டி பதில் சொல்கிறார். இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்து கம்ப்யூட்டருக்கான மொழியில் உங்களுக்கான விடைகளைத் தந்திடும்படி எழுதப்படுவதே புரோகிராம் ஆகும். இதனை உருவாக்குபவரே புரோகிராமர். இவர்களை சாப்ட்வேர் டெவலப்பர் எனவும் அழைக்கிறார்கள். இவர்களை வழி நடத்த புரோகிராமர் அனலிஸ்ட், சாப்ட்வேர் இஞ்சினியர், கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட், சாப்ட்வேர் அனலிஸ்ட் என உயர்நிலை புரோகிராமர்களும் உள்ளனர். உலகின் முதல் புரோகிராமர் யார் தெரியுமா? அடா லவ்லேஸ் எனப்படும் பெண்மணிதான் முதல் முதலில் புரோகிராம் ஒன்றுக்கான அல்காரிதம் எனப்படும் திட்டத்தை வடிவமைத்து புரோகிராம் எழுதியவர். இவர் ஒரு கவிஞரின் மகள் என்பது இன்னொரு சிறப்பு.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan meeran - தமிழ்நாடு.திருநெல்வேலிdist,இந்தியா
23-பிப்-201101:54:05 IST Report Abuse
hasan meeran thanks for computer malar.everyweek i saw internet but i want mobile video convector web site please
Rate this:
Share this comment
Cancel
deenathayalan - Trichy,இந்தியா
22-பிப்-201116:42:18 IST Report Abuse
deenathayalan எச்செல் மேக்ரோ - ஸ்டேப் பய் ஸ்டேப் ?
Rate this:
Share this comment
Cancel
VASU LAKSHMANAN - TENKASI,இந்தியா
21-பிப்-201111:06:05 IST Report Abuse
VASU LAKSHMANAN I made an Excel sheet with Data in different TABS. But when we try to find out a desired word using CTRL+F, it is searching in that particular TAB only. Hence, tell me how to find out a single WORD in an Excel sheet which contains DATA in Multiple TABS.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X