இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மார்
2018
00:00

வீட்டை வாடகைக்கு விடப் போகிறீர்களா?
நண்பர் ஒருவர், தன் வீட்டை, வட மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தார். அந்த வடமாநிலத்தவரின் மனைவி, தமிழ் பெண்ணாக இருக்கவே, விசாரித்ததில், காதல் திருமணம் என்று சொல்லியுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு பின், பணி மாறுதல் கிடைத்து விட்டதாக சொல்லி, வீட்டை காலி செய்து சென்று விட்டனர், அத்தம்பதி. சில மாதங்களுக்கு பின், தன் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்ற நண்பருக்கு பேரதிர்ச்சி... காரணம், நண்பரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த வட மாநிலத்தை சேர்ந்தவரின் மனைவி, உறவினர் வீட்டில், ஒரு போர்ஷனில் குடியிருந்தார். ஆனால், அந்த பெண்மணியின் கணவராக, அங்கு, வேறு ஒரு வட மாநிலத்தவர் இருந்தார்.
நண்பர் தன் சந்தேகத்தை, உறவினரிடம் சொல்ல, இருவரும் சேர்ந்து, அந்த ஜோடியை, கேள்வி கணைகளால் துளைத்தெடுத்துள்ளனர். பயந்து, உண்மையை சொல்லி விட்டார், வட மாநிலத்தவர்.
விஷயம் இதுதான்... வட மாநிலத்தை சேர்ந்த சிலர், பணி மற்றும் வியாபார நிமித்தமாக ஓர் ஊரிலிருந்து, மற்றொரு ஊருக்குச் சென்று, குறுகிய காலம் தங்க நேர்கையில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, வாடகை மனைவியை தங்களுடன் தங்க வைத்துக் கொள்வராம். வந்த வேலை முடிந்தவுடன், வாடகை மனைவிக்கு பணத்தை செட்டில் செய்து, வீட்டை காலி செய்து விடுவராம்.
இதைக் கேட்டு அதிர்ந்த வீட்டு உரிமையாளர், உடனடியாக வீட்டை காலி செய்ய சொல்லியுள்ளார். வீடு வாடகைக்கு விடுவோர், ஒருமுறைக்கு இருமுறை நன்கு விசாரித்து, வீட்டை வாடகைக்கு விடுவது நல்லது.
— ஜெ.கண்ணன், சென்னை.


பிடி சோறு!

உறவினர் வீட்டு திருமணத்திற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பே, குடும்பத்துடன் கிராமத்திற்கு சென்றிருந்தோம். நாங்கள் சென்ற வேளை, மதிய உணவு நேரம்; பெரியவர்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கத்தில் அவ்வீட்டுப் பாட்டி, பெரிய பாத்திரத்தில் சோற்றைப் பிசைந்து, அவரைச் சுற்றி அமர்ந்திருந்த குழந்தைகளுக்கு ஆளுக்கொரு உருண்டையாக உருட்டி கொடுத்தபடி இருந்தார்.
எங்கள் குழந்தைகளையும் உணவு உண்ண அழைத்தார். முதலில் தயங்கியவர்கள், மற்ற பிள்ளைகள் போட்டி போட்டு உண்பதைப் பார்த்து, அவர்களாகவே வட்டத்திற்குள் இடம் பிடித்து, பாட்டியிடம் உருண்டைச் சோறு வாங்கி உண்ண ஆரம்பித்தனர்; எனக்கும், மனைவிக்கும் ஆச்சரியம் தாங்க முடியல.
வீட்டில், ஒவ்வொரு நாளும் அவர்களை உண்ண வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.
கூட்டுக் குடும்பத்தின் அருமையும், உருண்டை பிடித்துக் கொடுக்கப்படும் பிடி சோற்றின் மகிமையையும் அப்போதுதான், உணர முடிந்தது.
இப்போதெல்லாம் வீட்டில் தனித் தனியாக தட்டு வைத்து உணவு பரிமாறுவதில்லை. என்னையும், குழந்தைகளையும் அமர வைத்து, பாத்திரத்தில் சோற்றைப் பிசைந்து எடுத்து வந்து, என் மனைவி, உருட்டித் தர, சில நிமிடங்களில் பாத்திரம் காலியாகி விடுகிறது.
அந்த பேரின்பத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை; என்னே அந்த பிடிச் சோற்றின் மகிமை!
— ஜி.வெங்கடாசலம், சென்னை.


தமிழக மானம் கப்பலேறியது!

சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு, கர்நாடகாவை சேர்ந்தோர், 25 கர்நாடக அரசு பேருந்துகளில் ஆன்மிக சுற்றுலா வந்திருந்தனர். அவர்களை அழைத்து வந்தது ஒரு சட்டமன்ற உறுப்பினர். இதை, அங்கிருந்தோர் ஆச்சரியமாக பார்த்தனர். அதில், ஒருவர் தமிழ் பேசினார்.
அவரிடம் விசாரித்தபோது, 'ஆண்டுக்கு ஒருமுறை, எங்க சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., எங்கள் தொகுதியில் வசிப்போரில் வீட்டுக்கு இருவர் வீதம், ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வார். எல்லா செலவும் அவருடைது தான். மக்களோடு மக்களாக இருப்பார்; இதன் மூலம், கர்நாடகா மட்டுமல்லாமல், தமிழகத்தை சேர்ந்த நிறைய சுற்றுலா தலங்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது...' என்றார்.
மேலும், 'சமீபத்தில், நடந்த இடைத்தேர்தலில், பணத்தின் மீது ஆசைப்பட்டு, இந்தியாவே காறி துப்புகிற அளவுக்கு நடந்துகிட்டாங்க, உங்க மக்கள். இன்னும் திருந்தாமல் இருக்கீங்களே... எங்க ஊர் அரசியல்வாதிகளிடம் கற்றுக் கொள்ளுங்கள்...' என்று செருப்படியும் கொடுத்தார். கூனி குறுகி, அவரிடமிருந்து, 'எஸ்கேப்' ஆனேன்.
தமிழக வாக்காளர்களே... இன்னும் இந்த அவல நிலை தேவையா? சிந்திப்பீர்!
பி.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar - Trivandrum,இந்தியா
17-மார்ச்-201817:46:27 IST Report Abuse
Rajasekar அதே ஓசி தான் அவன் பஸ்ல கோவிலுக்கு கூப்டு வந்தான் கைல காசு கொடுக்கல அவ்வளவுதான். மேலும் 25 பஸ்ல கூப்டு வந்த செலவு MLA வோட சொந்த செலவு????? எத்தனை பேரு இதை நம்பினீங்க???? இது வேறுவிதமான ஓட்டுக்கு பணம் தரும் முறை அவ்வளவுதான். சிதம்பரம் பாலாஜி திரும்பி கேட்க தெரியாம கூனி குறுக்கிட்டார் பாவம்..... வோட்டுக்கு பணம் கொடுப்பதை நான் ஆதரிக்கல ஆனால் அவர்கள் செய்வதும் அதுதான் என்று கூற விரும்புகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Anusuya Vethanayagam - India ,இந்தியா
14-மார்ச்-201812:51:12 IST Report Abuse
Anusuya Vethanayagam thanks
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-மார்ச்-201811:59:13 IST Report Abuse
D.Ambujavalli வார நாட்களில் அவசர சாப்பாடு வாரஇறுதி நாட்களில் பிற்பகலில் பிள்ளைகளை உட்காரவைத்து உருளியில் குழம்புசாதம் ,மோர்சாதம் உருட்டிப்போட்டால் அதையே நல்ல டிபனாக எண்ணிச் சாப்பிடுவோம். லீவு நாட்களில்மூன்றுமணி ஆனால் 'கையிலே சாதம் வாங்க' என்று அம்மா குரல் கொடுப்பது இன்றும் காதில் ஒலிக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X