வரப்போகும் முக்கிய விழாக்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2018
00:00

ஷிக்மோ விழா (மார்ச் 3 முதல் 17 வரை)
கோவாவின் பெரிய வசந்தகால திருவிழா, ஷிக்மோ விழா தான். பளபளக்கும் அலங்காரங்களும், அணிவகுப்புகளும், ஆடல், பாடல் மற்றும் வண்ணங்கள் என, கோவா முழுவதும் விழா களைகட்டும். முக்கிய வீதிகளில் நடக்கும் ஊர்வலங்களில் ராமாயண மகாபாரதக் காட்சிகள், மேளங்கள், நாட்டுப்புற நடனம் இடம்பெறும். தலைநகர் பான்ஜிம் நகரில், கலாசார நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறும். கோவாவின் தனித்தன்மையான உணவுகளையும், ஃபெனி பானத்தையும் சுவைக்க சிறந்த தருணம் இது.
இடம்: கோவா

குடி பட்வா ஷோபா யாத்ரா (மார்ச் 18)
குடி பட்வா என்றழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டை முன்னிட்டு, மும்பை முழுவதும் பெரிய ஊர்வலங்கள் நடைபெறும். தெற்கு மும்பையில் கிர்காம் பகுதியில் காலையில் தொடங்கும் பெரிய ஊர்வலத்தில் அழகான பாரம்பரிய உடைகளுடன் மக்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாக இளம்பெண்கள் புடவை அணிந்துகொண்டு, மோட்டார் பைக்குகள் ஓட்டிக்கொண்டு அணிவகுப்பதை இங்கு காணலாம்.
இடம் : மும்பை

மேவார் திருவிழா (மார்ச் 20 முதல் 22 வரை)
வசந்தத்தை வரவேற்கும் மற்றொரு திருவிழா இது. உதய்பூர் நகரில் பிச்சோலா ஏரிக்கரையில் நடைபெறும் காவ்ரி தெய்வ வழிபாடு முக்கிய நிகழ்வாகும். ஆடல், பாடல், நாட்டுப்புற நடனங்கள், கலாசார நிகழ்ச்சிகள், ஆகியவற்றுடன் நிகழ்ச்சியின் முடிவில் வான வேடிக்கைகளும் பிரம்மாண்டமாக இருக்கும். ராஜஸ்தானின் பாரம்பரிய இசைக்கருவிகளை ரசிக்க சரியான தருணம் இது.
இடம்: உதய்பூர், ராஜஸ்தான்

துலிப் மலர்த் திருவிழா (ஏப்ரல் மாதம் முதல் இரண்டு வாரங்கள்)
வசந்தத்தில் காஷ்மீரே மலர்த்தோட்டமாக காட்சியளிக்கும். இதுவே துலிப் மலர்கள் பூக்கும் காலமாகும். ஆசியாவின் பெரிய துலிப் மலர்த்தோட்டம் இருக்கும் ஸ்ரீநகரில், லட்சக்கணக்கான துலிப் மலர்கள் பூத்திருக்க, கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை ஆகியவை தினசரி அரங்கேறும். காஷ்மீர் உணவுகளையும் இங்கு ருசிக்கலாம்.
இடம்: இந்திராகாந்தி நினைவு துலிப் தோட்டம், ஸ்ரீநகர்.
கட்டணம் : பெரியவர்களுக்கு ரூ 50/-; சிறுவர்களுக்கு ரூ 50/-

ராம நவமி (மார்ச் 25)
இந்தியா முழுவதும் ராமர் அவதரித்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரபிரதேசத்தில் அயோத்தி, ஆந்திர பிரதேசத்தில் பத்ராச்சலம், மற்றும் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் தான் வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் இருக்கும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X