ரீத்தா க்ளார்க் கிங், ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர். ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டத்தின் நடுவில் உள்ளது ஜார்ஜியா. ஏப்ரல் 11, 1938ல் அந்நாட்டின், பாவோ எனும் கருப்பர் இன கிராமத்தில் பிறந்தவர்.
தந்தை வில்லி கிளார்க் கூலி தொழிலாளி; தாய் ஓலா மாயே வீட்டு வேலை செய்தார். பள்ளிக் கூடத்தில், மகளை சேர்த்தவர்களால், உணவு கொடுக்க முடியாத சூழ்நிலை.
'ஒரு குவளைத் தேநீர் சாப்பிடுவதற்கே, மணிக்கணக்கில் உழைத்தோம்...' என்று தன் சுயசரிதையில் எழுதியுள்ளார் ரீத்தா.
பள்ளி போக, மீதி நேரத்தில், வீட்டு வேலை, பெயின்ட் அடித்தல், பருத்தி தோப்புகளில் கூலியாளாக கூட, பணிபுரிந்தார், ரீத்தா.
நீக்ரோக்கள் படித்த, 'மால்ட்ரீ' உயர்நிலைப் பள்ளியில், 12 வயதில் தான் சேர்க்கப்பட்டார், ரீத்தா. அங்கே, அமெரிக்கர்கள் உதவித்தொகை அளித்து, அறிவாளி குழந்தைகளை ஊக்குவித்து, தங்கள் நாட்டிற்குப் பயன்பட உதவினர்.
அப்படித்தான் ஒரு அறக்கட்டளையின் கல்வி உதவி தொகை கிடைத்தது. அமெரிக்காவின் அட்லாண்டாவில், ஒரு கல்லுாரிக்கு, ரீத்தா தேர்ந்தெடுக்கப்பட்ட போது, கிளார்க் தம்பதியர் உள்ளம் நெகிழ்ந்தனர்.
அட்லாண்டாவில், ரீத்தா க்ளார்க் படித்த கல்லுாரியின், தற்போதைய பெயர் என்ன தெரியுமா... க்ளார்க் கல்லுாரி! கல்லுாரியின், கல்வித் தரத்தையே உலக அளவிற்கு முன்னேற்றமடைய வைத்து, அதன் பெயரை தனதாக்கிக் கொண்ட மாமேதை, இவரை போல், உலகில் யாருமே கிடையாது.
கணிதம், வேதியியல் பாடங்களில் 1958ல் இளம் அறிவியில் பட்டமும், 1960ல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றார். பின், வெப்ப வேதியியல் அவரை ஈர்த்தது. சிறுவயதில், பெயின்ட் அடித்த காலத்தில் வெப்பத்திற்கும், பெயின்ட்டின் உருகும் தன்மைக்கும், அதன் நிற வேற்றுமைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது எனும் மர்மம் சிந்தனையில் ஊறி, அதனாலேயே, வெப்பவியலை விரும்பி கற்றதாக, பின்னாளில் நினைவு கூர்ந்தார் ரீத்தா.
உலோகக் கலவைகள், வெப்பத்தின் அளவு ரீதியான பாதிப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம், பெற்றார்.
சிக்காகோ நகரில், கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியராக இருந்த, ஜுட் கிங் என்பவரை, 1963ல் மணந்தார். தம்பதியர், அதே ஆண்டு வாஷிங்டன் நகருக்கு குடி பெயர்ந்தனர்.
அங்கே, தேசிய தரக்கட்டுபாடு ஆய்வகத்தில், ஒரு இளம் ஆராய்ச்சியாளராக இணைந்த ரீத்தா, புளோரின் தீ நாக்குகள் மற்றும் வெப்பவியல் மாறுதல்கள் குறித்த தனிமங்களின் கலவை மீதான, தன் கவனத்தை தொடர்ந்தார்.
காற்றுப்புகா குழாய் வடிவங்கள் வழியே, வெப்பமிகு வேதி திரவங்கள் அனுப்பப்படும் போது, வெடித்து சிதறாமல் வேகமாக குளிர்வதையும் கண்டுபிடித்தார்.
அதை உடனடியாக, ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு பயன்படுத்தினர். வெடித்து சிதறாத எரிபொருள் கொண்ட முதல் ராக்கெட், 1967ல் செலுத்தப்பட்டது. விண்வெளி இயலிலும், தொழிற்துறையிலும் நீங்கா இடம் பிடித்தார்.
கடந்த, 1968ல், நியூயார்க் பல்கலைக் கழகத்தில், பேராசிரியராக இணைந்தார். கூடவே, தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 'மெனஸெட்டா மின்ன போலிஸ்' இரட்டை நகர அரசு பல்கலைக் கழகம், 1977ல் அவரை அழைத்து, தலைமை பொறுப்பை ஒப்படைத்தது.
நீக்ரோக்களை தொடர்ந்து கல்வி கற்க வைக்கும் பெரிய பணியை தலைமை ஏற்று நடத்தி, கருப்பர் இன பெண்கள், எந்த வயதிலும் கல்வி கற்க, ஓய்வு நேரப் பள்ளிகளை நிறுவி, இன்றைய தொலைதுார கல்விக்கும், முறைசாரா கல்விக்கும், முதியோர் கல்விக்கும் வித்திட்டு, உலக சரித்திரத்தில்இடம் பெற்றார்.
உலகில் அங்கீகாரம் பெற்றமுதல் கருப்பர் இனப் பெண் விஞ்ஞானி.