இளஸ்... மனஸ்... (104)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2018
00:00

அன்பு சகோதரி ஜெனிபருக்கு, தங்கள் பகுதியை விரும்பி படிக்கும் வாசகி எழுதிக் கொண்டது. சிறுவர்களுக்கு மட்டுமல்ல; எல்லா வயதினருக்கும் உபயோகமாக இருக்கிறது சிறுவர்மலர். என் பிரச்னை என்னவென்றால், என் மகள், எட்டாவது படிக்கிறாள். நல்ல போஷாக்காக இருப்பாள்; பெரிய மனுஷி ஆகி விட்டாள்.
நானே எல்லாம் செய்து கொடுக்க வேண்டியுள்ளது. அவளுக்கு ரொம்ப, 'சென்சிட்டிவ் ஸ்கின்' சில சானிடரி நாப்கின்கள், அவள் உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. அலர்ஜியாகிறது; தரமானதை தேர்வு செய்வது எப்படி என்று சொல்லுங்க சகோதரி... ஒரு தாய் போல், நினைத்து கேட்கிறேன்.
ஷாம்புக்களை எப்படி வாங்குவது என்று சொல்லித் தந்தது போல, இதற்கும் தங்களது ஆலோசனை தேவை. நம் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, தயவுசெய்து என் கடிதத்தை உதாசீனப்படுத்தி விடாதீர்கள்... நல்ல ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.
வணக்கம் சகோதரி... பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான விஷயத்தை தான் கேட்டுள்ளீர்.
பொதுவாக, நாப்கின்கள், XL, XXL என்ற, இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. உடல் பருமன் உள்ளவர்கள், பெரிய அளவை தேர்ந்தெடுப்பர். முக்கியமாக, நாம் பார்க்க வேண்டிய ஒன்று, காலாவதி தேதி. அதை, அநேக நிறுவனங்கள் போடுவதில்லை; உற்பத்தி தேதி மட்டுமே போடுகின்றனர்.
அடுத்து, நாப்கின்களில், மூன்று படுகைகள் இருக்கும். மேல்புறம் காட்டன் படுகையால் ஆனதா என்பதை, லேபிளில் குறிப்பிட்டிருப்பர். அதை பார்த்து வாங்க வேண்டும். காரணம், முதல் படுகை, உடலோடு தொடர்புடையது. மற்றும் அந்த இடத்தில், காட்டன் படுகை இருந்தால் தான், அவ்விடத்திற்க்கு காற்றோட்டத்தை தர முடியும்.
நடு படுகையில், ஈரத்தை உறிஞ்சும் தன்மைக்காக, வேதிப் பொருட்களை கலந்து, 'ஜெல்' போல் பயன்படுத்துவர். இது, சிலருக்கு, சிறு கட்டிகள் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும். இது தான், உங்கள் மகளுக்கு ஏற்பட்டுள்ளது.
'அதிக நேரம் தாங்கும்; அதிக ஈரம் உறிஞ்சும்; கறை படாது!' என்று வரும் விளம்பரங்களை நம்பி, அந்த, 'பிராண்ட்' வாங்க கூடாது. அதிக நேரம் ஒரே நாப்கினை பயன்படுத்தினால், அதிக கிருமிகள் உருவாகும். எனவே, நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றும்படி சொல்லிக் கொடுப்பது நல்லது.
சில நாப்கின் பாக்கெட்களில், 100 சதவீதம் ஆர்கானிக் காட்டன் என்றும் போட்டிருப்பர். அதிலும், அதிக ரசாயனம் கலந்திருப்பர். இவற்றை எரித்துப் பார்த்தால், துர்நாற்றம் வீசும்; நறுமணம் கலந்த நாப்கின்களிலும், அதிக வேதிப் பொருட்கள் கலக்கப்பட்டவை தான். எனவே, காட்டன் நாப்கின்கள் தான் நல்லது; வேதிப் பொருட்கள் கலக்காத, இயற்கையான நாப்கின்கள் கிடைப்பது அரிது.
முக்கியமாக டயாக்ஸின், பியூரான், ரேயான், போன்ற வேதிப்பொருட்கள் கலந்த நாப்கின்களை பயன்படுத்தினால், சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை கேன்சர் போன்றவற்றை உருவாக்க கூடிய, முக்கிய காரணிகள் இவை. அதில் மட்டும் ஜாக்கிரதையாக இருங்கள்.
என்னை கேட்டால், சுத்தமான காட்டன் துணிகளை பயன்படுத்துவது நல்லது. எங்கு சுற்றி வந்தாலும், நம் முன்னோர் பயன்படுத்திய முறைகளே சிறந்தது. நம் சுகாதாரத்தை முன்னிட்டு, பாரம்பரிய பழக்க வழக்கத்திற்கே மாறி விடுவது நல்லது. நீங்க என்ன சொல்றீங்க சகோதரி...
நேசங்களுடன், ஜெனிபர் பிரேம்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X