இங்கேயும் இடது - அங்கேயும் அதே! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 மார்
2018
00:00

சுற்றுலாவிற்காக, வெளிநாடு சென்றால், அங்கு, உங்கள் நண்பரது காரை, நீங்கள் ஓட்ட முடியாது. முதலில், 'இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ்!' வேண்டும்.
அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். இப்படி, ஏகப்பட்ட கெடுபிடிகள் உள்ளன. ஆனால், தென்னாப்பிரிக்காவில் அப்படி எதுவும் இல்லை. உங்களுக்கு கார் ஓட்ட தெரிந்திருந்தால் போதும். கூடுதலாக, இந்திய டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் வைத்திருந்தாலே போதும்.
தென்னாப்பிரிக்காவில் தாராளமாக கார் ஓட்டலாம்.
இந்திய சாலைகளில், இடது பக்கம் வாகனங்கள் செல்வது போல தான் அங்கேயும்; அதனால், பிரச்னை இல்லை. விமானத்தில் இருந்து இறங்கிய உடனே, விரும்பிய கார் வாடகைக்கு கிடைக்கும்.
காரை திரும்ப வந்து ஒப்படைக்க வேண்டியதில்லை; நினைத்த இடத்தில் விட்டு செல்லலாம்; எந்த இடத்திலும் காரை எடுக்கலாம். இப்படி நிற்கும் கார்களை எடுத்து செல்வதற்கென, ஓட்டுனர்கள் உள்ளனர்.
சுற்றுலா பயணியரே கார் ஓட்டும் இந்த திட்டத்தை, 'யூரோப் கார் சவுத் ஆப்பிரிக்கா' என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X