'ஜங்க்புட்' சாப்பிட்டு சிறு வயதிலேயே, சிறுவர், சிறுமியர், பலர் குட்டி யானை போல் இருக்கின்றனர். இதற்கு பயந்தே, குழந்தைகளுக்கான உணவில் நெய், வெண்ணெயை பெற்றோர் சேர்ப்பதில்லை. உண்மையில், நெய்யை உணவில் சேர்ப்போருக்கு, உடல் பருமன் போன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை.
நெய் சாப்பிடாதீங்க... என்று சொல்வோருக்கு இந்த விஷயத்தை சொல்லுங்க...
* ஒரு தேக்கரண்டி நெய்யில், 14 கிராம் கொழுப்பு சத்து உள்ளது
* உப்பு, லாக்டோஸ் போன்றவை கிடையாது
* பால் பொருட்கள், ஒத்துக் கொள்ளாதவர்கள் கூட, நெய் சாப்பிடலாம்
* 'கான்ஜூலேட்டட் லினோலிக்' என்ற ஆசிட் உள்ளது. இது, உடல் பருமனைத் தடுக்கிறது
* 'ஒமேகா 3' என்ற கொழுப்பு அமிலம் உள்ளது. இது, மூளைக்கு சிறந்த டானிக்
* மலச்சிக்கல், வாதம், பித்தம், கபம் நீங்கும்
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
* ஜீரண சக்தி துாண்டப்படும்
* கேன்சர், வைரஸ் நோய்களை தடுக்கும்
* தோல் பளபளப்பு ஏற்படும்
* கண் பார்வை தெளிவாகும்
* நெய்யை உருக்கி, சுடு சோற்றுடன் கலந்து சாப்பிட்டால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்; உஷ்ணம் தணியும்
* சிறிது துாரம் நடந்தாலே, சிலருக்கு மேல் மூச்சு வாங்கும். கால் வலி அதிகரிக்கும். உடல் சத்தின்மையே இதற்கு காரணம். இப்படி அவதிப் படுவோர், மதிய உணவில், தினமும் நெய் சேர்ப்பது நிவாரணம் தரும்
* முறையாக சாப்பிடாமல், பட்டினி கிடப்பவர் வயிற்றில், ஜீரண அமிலங்கள் சுரந்து, குடல் உள்சுவரைப் புண்ணாக்கி விடும். வாயுக்கோளாறால் அவதிப்படுவோர், அதிக காரம் சாப்பிடுவோர், மது, போதைக்கு அடிமை யானோர், மன அழுத்தம் உள்ளோருக்கு, குடல் புண்ணாகி விடும்; வாயில் துர்நாற்றம் வீசும். உணவில் நெய் சேர்த்து சாப்பிடும் போது, குடல் புண் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும்.
இனி, 'நெய் ரோஸ்ட்!' தான் சாப்பிடுவேன்னு, நீங்க கத்தற சத்தம் கேக்குது செல்லுாஸ்...
- தேவகி