பள்ளியில் படிக்கும் போது, பதினைந்து வயதில் என்.சி.சி. ஏர்விங் பிரிவில் சேர்ந்து பறக்கத் தொடங்கிய ஆட்ரி மேபென் என்பவருக்கு இப்போது 41 வயது. ஆனாலும், அவரது பறக்கும் ஆர்வம் குறையவில்லை. தனது 18 வயது மகள் ஏமியுடன் இனைந்து, இரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய 'சினஸ் 912' மிக இலகுரக விமானத்தில், 21 நாடுகள் மீது பறந்து, 40,000 கி.மீ. தொலவு பயணித்து உலகை சுற்றிவரக் இருக்கிறார்.
அடுத்த மாதத் தொடக்கத்தில், புதுடெல்லியில் இருந்து இந்த 90 நாட்கள் பயணத்தை தொடங்க இருக்கிறார். வழியில் 54 இடங்களில் இவர்கள் நின்று செல்வர். நாம் என்று பொருள்பட 'வி' என்று பெயரிட்டிருக்கும் இந்த சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்தால், மிக இலகு ரக விமானத்தில் உலகை சுற்றிவந்த முதல் பெண்கள் என்ற சாதானையை இவர்கள் படைப்பர். பெண்களுக்கு தனியே பயணிக்கும் தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கவே இந்தப் பயணம் என்று சொல்கிறார் மேபெல்.