ஈ.சி.ஆர்.,யில் விபத்துக்களை தவிர்க்க நடைமேம்பாலங்கள் தேவை | செய்தி கட்டுரைகள் | News Stories | tamil weekly supplements
ஈ.சி.ஆர்.,யில் விபத்துக்களை தவிர்க்க நடைமேம்பாலங்கள் தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2011
00:00

ஆர்.சீனிவாசன்
திருவான்மியூர் முதல் ஈஞ்சம்பாக்கம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் அதிகம் கடக்கும் பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதை தவிர்க்க நடைமேம்பாலங்கள் அமைக்க வேண்டும். சென்னை புறநகரில் அதிக போக்குவரத்து கொண்ட சாலைகளில் கிழக்கு கடற்கரை சாலையும் ஒன்று. இந்த சாலையில் முட்டுக்காடு வரை கேளிக்கை அரங்குகள், முதலைப் பண்ணை, படகு குழாம், தீம் பார்க்குகள் உள்ளன. மாமல்லபுரம் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தும் இந்த சாலையில் அதிகம். வார விடுமுறை நாட்களில் ஈ.சி.ஆர்.,யில் போக்குவரத்திற்கு குறைவில்லை. இதன் காரணமாக 24 மணி நேரமும் போக்குவரத்து காணப்படும். இந்நிலையில், இந்த சாலையை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
திருவான்மியூர் முதல் ஈஞ்சம்பாக்கம் வரை கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகளும், குடியிருப்புகளும் உள்ளன. இப்பகுதியில் வசிப்போர் தங்களின் தேவைக்காக பல இடங்களில் சாலையை கடக்கின்றனர். குறிப்பாக திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதி பஸ் நிறுத்தங்கள் உள்ள பகுதிகளில் பீக்-அவர்சில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சாலையை கடக்கின்றனர். குறிப்பிட்ட ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில், பொதுமக்கள் தங்கள் இஷ்டத்திற்கு சாலையை கடக்கின்றனர். இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, கிழக்கு கடற்கரை சாலையை பொதுமக்கள் பாதுகாப்புடன் கடக்கும் வகையில் நடைமேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அப்பகுதி பொதுநலச் சங்கத்தினர் கூறியதாவது:
திருவான்மியூர் முதல் ஈஞ்சம்பாக்க்ம் வரை தினமும் கிழக்கு கடற்கரை சாலையை கடப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. அவசரத்தில் பொதுமக்கள் கவனக்குறைவுடன் சாலையை கடக்கும் போது, வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. திருவான்மியூரில் இருந்து ஈஞ்சம்பாக்கம் வரை மீடியன் உயரம் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் தங்கள் இஷ்டத்திற்கு சாலையை கடக்கின்றனர். தற்போது, நீலாங்கரை முதல் திருவான்மியூர் வரை மீடியன் உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதற்கு ஒரே நிரந்தர தீர்வு நடை மேம்பாலம் அமைப்பதுதான். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் அதிகம் சாலையை கடக்கும் பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X