இமயத்தின் மடியில் இதமாக
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2018
00:00

வட இந்தியாவில் கோடை சுற்றுலாவுக்கு திட்டமிட்டால், உடனடியாக நினைவுக்கு வருபவை காஷ்மீர், சிம்லா, டார்ஜிலிங் போன்ற பனிமூடிய மலைப்பிரதேசங்கள் தான். ஆனால், இவற்றை போலவே இயற்கை அழகும், இதமான காலநிலையும் கொண்ட இடங்கள் பல வட இந்தியாவில் இருக்கின்றன. நெடிந்துயர்ந்த இமயமலைத்தொடரின் மடியில் அமைந்துள்ள சில அற்புதமான கோடை சுற்றுலா தலங்களை கீழே காணலாம். இந்த இடங்களில் நெரிசல் குறைவாக இருக்கும், ஆனால் சுவாரஸ்யங்கள் அதிகமாக இருக்கும். கோடையை கொண்டாடுங்கள் இமயத்தின் நிழலில்…


களிப்பூட்டும் கலிம்போங்
எப்போதும் சுற்றுலா பயணியரால் நிறைந்து வழியும் டார்ஜிலிங் போலல்லாமல், மிகவும் அமைதியும் ரம்மியமான சூழலும் கொண்ட மாசுபடாத மலைநகரம், கலிம்போங். மலைக்கவைக்கும் வியூபாயின்ட்கள், இதமான காலநிலை, டார்ஜிலிங் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அருகில் இருப்பது என, கலிம்போங் பலவிதத்திலும் கண்டுகளிக்க ஏற்றது. அமைதியின் அடையாளமாக இருக்கும் கலிம்போங்கில், பாரா கிளைடிங் சாகசங்கள், பறவைப் பார்த்தல், மீன்பிடித்தல் போன்றவை தவிர்க்கக் கூடாத விஷயங்களாகும்.
பார்க்க வேண்டிய இடங்கள்:சாங் டோக், பால்ரி போடாங், மேக் ஃபார்லென் சர்ச், சோங்கா கோம்பா, மோர்கன் ஹவுஸ், டாக்டர் கிரகாம் ஹோம்ஸ், ஹனுமன் கோவில், சயன்ஸ் சிட்டி.

திகட்டாத தவாங்
கிழக்கு இமயத்தின் மடியில், அருணாசலப் பிரதேசத்தின் அழகிய நகரம் தவாங். அவ்வளவாக அறியப்படாத நகரமாக இருக்கும் தவாங், உங்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை தர காத்திருக்கிறது. புத்த மதத்தின் முக்கிய மையமாக நூற்றாண்டுகளாக விளங்கி வரும் இங்கு, இயல்பாகவே ஆன்மிக உணர்வு சூழ்ந்திருப்பதை காண முடியும். அழகிய பழங்குடி கலாசாரத்தை காணவும், உயர்ந்த இமயத்தின் அழகில் திளைக்கவும் இது சரியான இடம். மலை மீது அமைந்துள்ள சோ மற்றும் சாங்ஸ்டர் ஏரிகளின் அழகும், எங்கும் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண பூவரசம் பூக்களின் சிரிப்பும், பல நாட்கள் உங்கள் கண்களைவிட்டு அகலாது.
பார்க்க வேண்டிய இடங்கள்: தவாங் மடாலயம், பிரமதுங் பெண்கள் மடாயலயம், உர்கெல்லிங் மடாலயம், கைவினை மையம், தவாங் உலகப்போர் நினைவுச் சின்னம், கின்மி மடாலயம்.


சிங்கார ஷில்லாங்
மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கை, வடகிழக்கு மாநிலங்களில் சிறந்த கோடை வாசஸ்தலம் என்று தயங்காமல் சொல்லலாம். சிலிர்ப்பூட்டும் ஏரிகள், பசுமையான மலைகள், பைன் மரக் காடுகள், மயக்கும் அருவிகள், சாகச விளையாட்டுகள், பொழுதுபோக்கு செயல்பாடுகள் என, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் அம்சங்கள் ஏராளம் உண்டு. எலிபன்ட் அருவில் மலையேற்ற சாகசம், குகைப் பயணங்கள், பாரா பஜாரில் ஷாப்பிங், உமியம் ஏரியில் போட்டிங், நீர் சாகச விளையாட்டுகள் என நிலைத்து நிற்கும் அனுபவத்தை ஷில்லாங் கொடுக்கும்.
பார்க்க வேண்டிய இடங்கள்: வார்ட்ஸ் ஏரி, ஸ்வீட் அருவி, ஷில்லாங் சிகரம், காசி மலைகள், உமியம் ஏரி, எலிபன்ட் அருவி, லைட்லும் மலையிடுக்கு, மாவ்ஜிம்பியன் குகைகள்.


லயிக்க வைக்கும் லடாக்
இயற்கையுடன் உறவாட சிறந்த இடம், காஷ்மீரின் கிழக்கில் அமைந்திருக்கும் லடாக். கோடையின் வெம்மையை காணாமல் செய்யும் இந்த இடம், வெண்மணல் மேடுகள் மற்றும் பச்சைப்பசேல் பள்ளத்தாக்குகள் கொண்ட நிலத்தோற்றங்கள் முதல், ஓங்கி உயர்ந்த மலைக்கணவாய்களும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புத்த மடாலயங்களும் நிறைந்து, ஒரு புதிய உலகத்தில் உங்களை லயிக்கச் செய்யும். உலகிலேயே மோட்டார் வாகனம் செல்லக்கூடிய உயர்ந்த சாலையான ஷாந்தி ஸ்துபாடோ, கார்டுங் லா, நீலப்பளிங்கு ஏரிகள் முதல் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் வரை, உங்களை பிரமிக்க வைக்க லடாக்கில் ஏராளம் உண்டு.
லடாக்கில் சில நாட்கள் தங்க முடிவெடுத்தால், இயற்கையான வெந்நீர் ஊற்றுகளில் இதமாகக் குளிக்கலாம், சீன எல்லையோரமாக ஒரு பயணம் போகலாம், ஆற்றின் மீது சூரியன் உதிக்கும் அழகை ரசிக்கலாம், மலைகளில் முகாமிடலாம், கம்பீரமான இமய மலைகள், பளிங்கு ஏரிகளில் பிரதிபலிப்பதை இமைக்காமல் பார்க்கலாம், மடாலயங்களில் மனதை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்யலாம்.
பார்க்க வேண்டிய இடங்கள்: சுமாதாங், பழைய மடாலயங்கள், பனி பாலை மற்றும் மூன் லேன்ட்ஸ், மேக்னெடிக் ஹில்ஸ், நுப்ரா பள்ளத்தாக்கு, ஷாந்தி ஸ்தூபா, கார்டுங் லா.


கொள்ளை கொள்ளும் காங்டாக்
கோடையின் கடுமைக்கு உடலுக்கும் மனதுக்கும் இதமளிக்கும் நிறைய அம்சங்கள் கொண்டது, சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான, காங்டாக். வடகிழக்கு இந்தியாவில் கோடைக்காலத்தில் அதிகம் பேர் செல்ல விரும்பும் இடங்களில் ஒன்றாக காங்டாக் விளங்குகிறது. நிறைய சாகச விளையாட்டுகள், பொழுதுபோக்கு செயல்பாடுகள், மடாலயங்கள் என, நிச்சயம் உங்களை வசீகரிக்கும் இந்த அமைதியான நகரம். தீஸ்தா ஏரியில் ராப்டிங், சோம்கோ ஏரியில் படகுச் சவாரி, பாரா கிளைடிங் சாகசம், கேபிள் கார் பயணம் போன்றவை நீங்கள் இங்கு தவறவிடக்கூடாத விஷயங்கள்.
பார்க்க வேண்டிய இடங்கள்: நாது லா, ஹனுமன் கோவில், ரும்டெக் மடாலயம், கெசியோபால்ரி ஏரி, மற்றும் படோங் மடாலயம்.


தரமான தர்மசாலா
திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவின் இருப்பிடமாக அறியப்படும் தர்மசாலா, இயற்கை அழகும் பசுமையும் நிரம்பி வழியும் இடமும் கூட. இங்கு புத்த மடாலயங்கள், இந்து கோவில்கள் இரண்டையும் காணலாம். மன அமைதியும், முழுமையான ஓய்வும் விரும்புகிறவர்களுக்கு தர்மசாலா நிறைவளிக்கும். நம்க்யால் மடாலயத்தில் தங்கி தியானத்தில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்க்க வேண்டிய இடங்கள்: காங்க்ரா கோட்டை, பக்சுநாத் கோவில், பக்சு அருவி, நாம்க்யால் மடாலயம், தலாய் லாமா கோவில் வளாகம், கிரிக்கெட் ஸ்டேடியம், கங்க்ரா பள்ளத்தாக்கின் தேயிலைத் தோட்டங்கள்.


உற்சாகத்தை தரும் கசோல்
பரபரப்பு வாழ்க்கையை சில நாட்களேனும் முற்றிலும் தவிர்க்க விரும்புகிறவர்களுக்கு ஏற்ற அமைதியான மலைநகரம், கசோல். பரபரப்பில்லாத சாலைகள், அமைதியான உணவகங்கள், நட்பாக பழகும் மக்கள், எப்போதும் இதமான காலநிலை என, முழுமையான இளைப்பாறலுக்கு பொருத்தமான இடம் இது. பார்வதி பள்ளத்தாக்கின் அழகு உங்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். 'டிரெக்கிங், ராக் கிளைம்பிங், ரிவர் ராப்டிங்,' போன்ற சாகச செயல்பாடுகளுக்கும் இது ஏற்ற இடம்.
பார்க்க வேண்டிய இடங்கள்: மலானா கிராமம், கீர்கங்கா சிகரம், பார்வதி ஆறு, தீர்த்தன் பள்ளத்தாக்கு, புல்கா கிராமம். குளு மற்றும் மணாலி நகரங்கள் அருகில் தான் உள்ளன.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X