நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு என்றே தனியாக ரேடியோ சேவையைக் கேரள அரசு அறிமுகப்படுத்த உள்ளது. விவசாயம் செய்வதற்கான ஆர்வம் மக்களிடையே குறைந்து வருகிறது. போதிய வருவாய் இல்லாதது, அவர்கள் வேறு வேலையை நாடிச் செல்வதற்கு முக்கியக் காரணம். கேரள அரசு அறிமுகம் செய்ய உள்ள சமுதாய ரேடியோ மூலம், விவசாயிகளுக்குப் பல்வேறு பயனுள்ள தகவல்கள் வழங்கப்படும். குறிப்பாக, வானிலை முன்னறிவிப்பு, புதிய தொழில்நுட்பம், பயிர் நோய்கள், விதைகள் மற்றும் உரங்கள் குறித்த அறிவிப்புகள் செய்யப்படும். முதற்கட்டமாக, குட்டநாட்டில் இந்த வானொலி சேவை தொடங்கப்படுகிறது. பின்னர் படிப்படியாக, மற்ற வேளாண் மண்டலங்களிலும் சமுதாய வானொலி தொடங்கப்படும்.