உதவியதால் வந்த மகிழ்ச்சி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
00:00

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார் கோவில், அரசு பள்ளியில், பதினோராம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் இது... ஒரு நாள், சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன்; முதியவர் ஒருவர், சாலையை கடந்து கொண்டிருந்தார்; எதிரே வந்த சைக்கிள் அவர் மீது மோதிவிட்டது.
கீழே விழுந்த முதியவர் காலில், கல் குத்தி, ரத்தம் வழிந்தது; வேதனையில் அவரால் நடக்க முடியவில்லை; என் சைக்கிளில் அவரை ஏற்றி, தள்ளியபடியே, மருத்துவமனையில் சேர்த்தேன். பள்ளிக்கு, தாமதமாகச் சென்றேன்.
எங்கள் தலைமை ஆசிரியர், மிகவும் கண்டிப்பானவர். தாமதமாக வரும் மாணவர்களை அடித்து, நொறுக்கி விடுவார். அன்றும், பள்ளிக்கூட வாசலில், பிரம்புடன் நின்றிருந்தார்.
நான், பயந்தபடி சென்றேன்; கோபத்துடன் கூப்பிட்டார்; நடுங்கியபடியே அருகில் சென்றேன்.
'மணி என்ன ஆகிறது...'
'ஐயா... என்னிடம் கடிகாரம் இல்லை...'
'ஆமாம்... இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை; திமிரா பேசு...'
நான் எதுவும் பேசாமல் பயத்துடன் நின்று கொண்டிருந்தேன். என் சட்டையில் படிந்திருந்த ரத்தக்கறையைப் பார்த்து விட்டார்.
'என்ன இது ரத்தம்...' என்றார். முதியவரை, மருத்துவமனையில் சேர்த்து விட்டு வந்த விவரத்தைச் சொன்னேன்.
'ஓ... அப்படியா... நல்ல காரியம் செய்திருக்கிறாய்... ' என்று பாராட்டினார். என்னை வகுப்புக்கு அழைத்து சென்று, ஆசிரியரிடம், 'உதவியதால் தாமதமாக வந்திருக்கிறான்; வருகை பதிவேட்டில், 'ஆப்சென்ட்' போட வேண்டாம்...' என்றவர், மற்ற மாணவர்களிடம், 'நீங்களும் இப்படி உதவி செய்ய கற்றுக் கொள்ளுங்கள்...' என்று அறிவுரை கூறினார். ஒரு பேனா பரிசாக கொடுத்து கவுரவப்படுத்தினார்.
நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உடன் படித்த மாணவர்கள், 'தலைமை ஆசிரியர் அடித்து நொறுக்குவதால், கெட்டவர் என்றோமே... அவர் சுவையான பலாப்பழம்; வெளியே முள்ளாக இருந்தாலும் உள்ளே இனிப்பாக அல்லவா இருக்கிறார்...' என்று, புகழ்ந்து பேசினர்.
இப்போது, என் வயது, 70. இன்றும், அந்த நிகழ்வு பசுமையாக உள்ளது. உதவி செய்வதால் வரும் மகிழ்ச்சியை, அன்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
- அ.கல்யாணராமன், விழுப்புரம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X