அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
00:00

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கலப்படம் கண்டுபிடிக்கலாம்!
உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிக்க, பல வழிமுறைகள் உண்டு.சிலவற்றை பார்க்கலாம்...

சர்க்கரை: சர்க்கரையில், ரவையை கலப்படம் செய்து விடுவர், அதை நீரில் போட்டால், சர்க்கரை கரைந்து விடும்; கரையாமல் ரவை இருக்கும்.

காபி துாள்: காபி துாளில், புளியங்கொட்டைத் தோல் கலக்கப்படுகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு தேக்கரண்டி காபி துாளை போடுங்கள். சுத்தமான காபி துாள் மிதக்கும்; கலப்படம் என்றால், அடியில் படிந்து விடும்.

தேன்: சுத்தமான தேனை நாய் சீண்டாது. தேனில், வெல்லப்பாகு கலந்து விற்பர். இதை அறிய, ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு துளி தேன் கலக்க வேண்டும். சுத்தமான தேன் என்றால், அடியில் படியும்; வெல்லப்பாகு கலந்திருந்தால், தண்ணீரில் கலந்து விடும்.
தீக்குச்சியை, தேனில் முக்கி, தீப்பெட்டியில் உரச வேண்டும்; அது நன்றாக பற்றி எரிந்தால், தேன் சுத்தமானது; அணைந்தாலோ, சரியாக எரியா விட்டாலோ கலப்படம் செய்யப்பட்டது.

வெண்ணெய்: வெண்ணெயில், மாவை கலப்படம் செய்வர்; இதை அறிய, சிறிதளவு வெண்ணெயில், ஒரு துளி, 'டிங்சர்' அயோடினை விட வேண்டும். கலப்படம் செய்திருந்தால், அது ஊதா நிறமாகி விடும்.

ஊட்டமான காலை உணவு!

அவசர உலகில், காலை உணவை துறப்பவர் ஏராளம். இரவு துாங்கும் போது, இரைப்பையில் அமிலம் சுரக்கும்; அது, காலையில் ஊறி இருக்கும். காலை உணவை சாப்பிடா விட்டால், இரைப்பையை அமிலம் சிதைத்து விடும்.
காலையில், வயிற்றை உணவால் நிரப்பாவிட்டால், இரவில் இயல்பாக ஏறிய பித்தம், மெதுவாக தலைக்கு ஏறும். இதனால், வயிற்றுப்புண், உப்புசம், வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, ரத்த கொதிப்பு, மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
காலை, 9:00 மணிக்குள் சாப்பிடவேண்டும். அதை தவிர்த்து, முற்பகல், 11:00 மணிக்கு ஏற்படும் அகோரப் பசியால் கடைகளில், பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிட்டால், நோய்கள் போட்டி போட்டு, உடலை தாக்கும்.
காலையில் தான், மிகச் சிறந்த உணவு அவசியம். தினை அரிசியில், பொங்கல் செய்து சாப்பிடுவது குழந்தைகளுக்கு ஏற்றது. வரகு அரிசி, உப்புமா, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கும்.
அரிசிக்கு பதில் தினை, ரவைக்கு பதில் வரகு போன்றவை, கடின உடல் உழைப்பு செய்வோருக்கு ஏற்ற காலை உணவு. கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் பெண்கள், வளரும் குழந்தை, முதியவர்கள் என, அனைவருக்கும் ஏற்ற உணவு.
சிவப்பு சம்பா அரிசி, முளைக்கட்டிய பாசிப்பயிறு, சிவப்புக் கொண்டைக் கடலை, நன்கு வறுத்த கறுப்பு உளுந்து, நிலக்கடலை, பொட்டுக் கடலை, சம்பா கோதுமை, தினை, கேழ்வரகு, பார்லி மற்றும் குதிரைவாலி ஆகியவற்றை, வகைக்கு தலா, 250 கிராம் எடுத்து, வறுத்து, அரைத்தால், சத்துமாவாகிவிடும்.
இதை, மூன்று தேக்கரண்டி எடுத்து, கஞ்சியாக காய்ச்சி குடிக்கலாம்; விரும்பினால், பாலும், வெல்லமும் கலந்து கொள்ளலாம்.
இதே மாவை, சிறிது காரம் சேர்த்து, கொழுக்கட்டையாகவும், வெல்லம் சேர்த்து, மாலாடு உருண்டையாக்கியும் உண்ணலாம். இதில் உள்ள புரதம், கால்ஷியம் மற்றும் நுண்கனிமங்கள் ஆயுளை நீட்டும்; வாழ்க்கையை உற்சாகப்படுத்தும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X