இளஸ்... மனஸ்... (109)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
00:00

அன்புள்ள ஆன்டிக்கு...
எட்டாம் வகுப்பு மாணவி எழுதுவது. இந்தப் பகுதியை தொடர்ந்து படிப்பேன் ஆன்டி. அதனால், என்னுடைய கவலையை, உங்களிடம் கொட்டப் போகிறேன்.
டாடின்னா, எனக்கு ரொம்ப உயிர்; எனக்கொரு தங்கை உண்டு; அம்மா, வீட்டை பார்த்துக்குவாங்க... எங்க டாடி, குடும்பத்துக்காக ரொம்ப உழைக்கிறார்... அவருக்கு, இரவில் தூக்கமே வருவதில்லை... ரொம்ப கஷ்டப்படுறார்.
கடன் பிரச்னை, பணப் பிரச்னை உண்டு... எங்களது எதிர்காலம் குறித்து, ரொம்ப கவலைப்படுறார்.
இதனால், தூக்கம் வரலையான்னு தெரியல ஆன்டி... கண்ணுக்கு கீழ, கருவளையம் வந்து, அசிங்கமா இருக்கு...
நீங்க தான், எல்லாப் பிரச்னைக்கும் வழி சொல்றீங்களே... ஏதாவது, எளிய வழிமுறை சொல்லுங்க ஆன்டி... எங்க டாடிக்கு செய்து கொடுத்து, தூங்க வைக்கிறேன்.

ஹாய் டியர்... உன்னோட டாடி பாசம் புரியுது... இந்த காலத்துல, பல பேர் இந்த பிரச்னையால கஷ்டப்படுறாங்க செல்லம். தற்போதைய உணவு முறை, அதிகப்படியான டென்ஷன், வேலை பளு, மொபைல் போன், 'டிவி' பார்த்தல், மது அருந்துதல், இரவு நேர வேலை என, பல காரணங்கள் தூக்கமின்மைக்கு காரணம்.
மனச்சோர்வும் தூக்கத்தைக் கெடுக்கும். சராசரி மனிதனின் ஆரோக்யத்திற்கு, ஆறு முதல், ஏழு மணி நேர தூக்கம் அவசியம்; அப்போது தான், நம் மூளை, சுறுசுறுப்பாக வேலை செய்யும்.
தூக்கமின்மையால், ஞாபக மறதி, மன உளைச்சல், நரம்பு தளர்ச்சி, புற்றுநோய் போன்றவை உருவாகின்றன.
நல்ல துாக்கம் வர...
* மாலை, 7:00 மணிக்கு பிறகு, டீ, காபி, தண்ணீர், குளிர் பானம் அருந்தக் கூடாது
* மிதமான வெந்நீரில் குளித்து, பூண்டு போட்ட, சூடான பால் அருந்தி விட்டு, துாங்கச் சென்றால், சுகமான துாக்கம் வரும்
* கசகசா, மாதுளம் பழம், பால் இவை நல்ல தூக்கத்தை கொடுக்கும். 1 ஸ்பூன் கசகசாவை, 1 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து, 1 ஸ்பூன் தேன் கலந்து, படுப்பதற்கு, 1 மணி நேரத்திற்கு முன்பு குடித்து வர, நல்ல துாக்கம் வரும்
* கடுகு எண்ணெயை சூடு செய்து, உள்ளங்காலில் தேய்த்து விட்டு படுத்தால், நல்ல தூக்கம் வரும்
* பாகற்காய் சாற்றில், சிறிது நல்லெண்ணெய் கலந்து, உச்சந்தலையில் தேய்த்து, தூங்கச் செல்லலாம்.
கடைசியாக, பாட்டி வைத்தியம் ஒன்று சொல்கிறேன்...
ஒரு பல் பூண்டை தலையணைக்கு அடியில் வைத்து, தூங்கினால், நல்ல தூக்கம் வரும். இதில், எந்த வழி உன் டாடிக்கு ஒத்து வருது என்று, 'ட்ரை' பண்ணி பாரு!
உன் டாடி சுகமாக தூங்கி, நலம் பெற வாழ்த்துகள்!
தூக்கம் என் கண்களை தழுவுகிறது... ஆவ்... ஆவ்...
- ஜெ...னி...ப...ர்... பி...ரே...ம்.!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathi subramanian - tamilnadu,இந்தியா
23-ஏப்-201819:39:49 IST Report Abuse
ganapathi subramanian ஊர் திரும்பி விட்டதால் இன்று தான் மிகவும் விரும்பும் இளஸ் மனஸ் படித்தேன். நல்ல தீர்வுகள்.பூண்டு பாட்டி வைத்தியம் எனக்கு சரியாக இருக்கும் ஆதலால் அதை பயன்படுத்த போகிறேன். நன்றி மேடம்.- பூரணி தஞ்சாவூர்
Rate this:
Share this comment
Cancel
Ezhilarasi.R - villupuram,இந்தியா
21-ஏப்-201810:16:35 IST Report Abuse
Ezhilarasi.R Nalla tips madem.. TqMadem..yellarukum use full ah irukum.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X