உத்தரகாண்ட்டின் உற்சாக குளிர் மலைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
00:00

கோடைக்காலத்தில் சில நாட்களேனும் வெப்பத்தின் கடுமையில் இருந்து தப்பிக்கவும், உற்சாகம் பெறவும் சிறந்த வழி குளிர்மலைகளுக்கு பயணிப்பது. இமயத்தின் சாரலில் அமைந்திருக்கும் வட மாநிலங்களில் நிறைய குளிர் மலைகள் இருந்தாலும், உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருப்பவை விசேஷமானவை. இவற்றை நிதானமாக கண்டு ரசிக்கலாம். பெரும் மக்கள் நெரிசலின்றி, இயற்கையின் முழுமையான அழகை வெளிப்படுத்தும் இடங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறோம்.

அழகின் பிறப்பிடம் ஆலி
'இந்தியாவின் ஸ்விஸ் ஆல்ப்ஸ்' என்று வருணிக்கப்படும் ஆலி நகரம், கடல்மட்டத்தில் இருந்து 9300 அடி உயரத்தில், இயமத்தின் மடியில் அமைந்திருக்கிறது. இந்தியாவிலேயே பனி விளையாட்டுகளுக்கு சிறந்த இடம். பனி படர்ந்த கார்வால் இமயமலைச் சரிவுகளின் பின்னணியில், அழகிய இயற்கைக் காட்சிகளும், நிலத்தோற்றங்களும் உங்களுக்கு பரவசமூட்டும். மார்ச் - ஜூன் காலகட்டத்தில், இங்கு வெப்பநிலை 15 டிகிரியில் தான் இருக்கும் என்பதால், கோடையில் இளைப்பாற சிறந்த இடமிது. மலை சாகச விளையாட்டுகளுக்கும் ஏற்றது.
தொலைவு: டேராடூன் நகரிலிருந்து, 268 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.
பார்க்க ஏற்ற காலம்: ஏப்ரல் - ஜீன், நவம்பர், பிப்ரவரி (பனிக்கால விளையாட்டுக்கு ஏற்றது)


பிரியமான பின்சார்
எழுத்தாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், அமைதி விரும்பிகள், காதல் ஜோடிகளுக்கு ஏற்ற இடம், பின்சார். வனவிலங்கு சரணாலயத்துக்கு நடுவில் அமைந்திருக்கும் குளிர்மலை இது. கடல்மட்டத்திலிருந்து 7,600 அடி உயரத்தில் அமைந்துள்ள மாசுபடாத இங்கு இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. இங்கிருந்து நந்ததேவி, நந்தகோட், கேதர்நாத் மற்றும் சாகம்பா ஆகிய சிகரங்களை பார்ப்பது அற்புதமான காட்சியாக இருக்கும். இங்கு அருமையான ஹோம்ஸ்டே தங்குமிட வசதிகள் உள்ளன. சைட் சீயிங், போட்டோகிராபி, ஊர் சுற்றுதல், டிரெக்கிங், வனவிலங்கு சபாரி, பின்சார் மலை, காலி எஸ்டேட், கணநாதர் ஆலயம், போன்ற இடங்களை கண்டுகளிக்கலாம்.
தொலைவு: பண்ட் நகர் விமான நிலையம் - 143 கி.மீ.,; கத்கோடம் ரயில் நிலையம்: 110 கி.மீ.,
பார்க்க ஏற்ற காலம்: பருவமழைக் காலம் தவிர்த்து, ஆண்டு முழுவதும்.


விருந்தளிக்கும் நைனிடால்
இந்தியாவின் மிக அழகான மலை நகரங்களில் ஒன்றான நைனிடால், 6,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலைப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள நைனி ஏரையை சுற்றி அமைந்துள்ள பசுமை நகரம் இது. கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகள் இங்கு ஏராளம். நைனி ஏரியில் படகுச் சவாரி, டிரெக்கிங், திபெத் மார்க்கெட்டில் ஷாப்பிங், டிப்பின் டாப்பில் இருந்து சூரிய உதயத்தையும் ஹனுமன் காரியில் இருந்து சூரியன் மறைவையும் பார்த்தல், ரோப்வே கேபிள் சவாரி, திபெத்திய பாரம்பரிய உணவுகள், என ஒவ்வொரு கணமும் உற்சாகத்துடன் அனுபவிக்க இங்கு நிறைய உண்டு.
தொலைவு: கத்கோடம் ரயில் நிலையம் - 34 கி.மீ.,; பண்ட் நகர் விமான நிலையம் - 65 கி.மீ.,
பார்க்க ஏற்ற காலம்: மார்ச்- ஜூன் வரை


மலைக்க வைக்கும் முசோரி
மிகவும் பிரபலமான குளிர்மலை என்பதால் கோடையில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். பசுமைப் போர்த்திய மலைகளும், பல்வேறு வகையான தாவரங்களும், இதை ஒரு தேவதை நிலமாக மாற்றியிருக்கிறது. மிஸ்ட் ஏரியில் போட்டிங், குல்ரி பஜாரில் ரோலர் ஸ்கேட்டிங், முசோரி ஏரியை சுற்றிலும் பாரா கிளைடிங், மால் ரோடில் ஷாப்பிங், குன் மலைக்கு ரோப்வே கேபிள் கார் பயணம், கெம்ப்டி அருவி கொண்டாட்டம் என, கோடையில் கண்டுகளிக்க ஏராளம் உண்டு.
தொலைவு: தொலைவு: டேராடூன் நகரம் - 33 கி.மீ., : டேராடூன் விமான நிலையம் - 54 கி.மீ.,


மிடுக்கான அழகு: டேராடூன்
இமயத்தின் அடிவாரத்தில், டூன் பள்ளத்தாக்கில், அழகிய மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள எழிலான நகரம் இது. நகரின் இருபுறமும் கங்கை நதி பெருக்கெடுத்து ஓடுவதையும், இமயமலைத்தொடரின் பேரழகையும் பார்ப்பது மறக்க முடியாத அனுபவமாக நிலைக்கும். தவிர, டிரெக்கிங், மலையேற்றம், பாராகிளைடிங் போன்ற சாகச விளையாட்டுகளும் உண்டு.
டேராடூன் வன ஆராய்ச்சி நிலையம், டப்கேஷ்வர் கோவில், மல்சி மான் பூங்கா, சஹஸ்ட்ராதாரா, ஆசான் பரேஜ், கிளாக் டவர், இந்திய ராணுவ அகாடெமி, ஷிகார் அருவி, குச்சுபானி, கலங்கா போர் நினைவுச்சின்னம் போன்ற இடங்கள் கண்டுகளிக்க உகந்தவை.
பார்க்க ஏற்ற காலம்: ஆண்டு முழுவதும்.


அழகிய அல்மோரா
உத்தரகாண்டில் இருக்கும் அழகும் அமைதியும் நிரம்பிய நகரம் இது. காதல் தம்பதியினர், தனியே பயணிப்போர், சாகச விரும்பிகள், மலைப் பிரியர்கள் ஆகியோருக்கு பிடித்த இடமாக விளங்கும் அல்மோராவில், வேறு எங்கும் காணக் கிடைக்காத இயற்கை எழில் காட்சிகளை காணலாம். கோசி ஆறு, சிட்டாய் கோவில், பிரைட் எண்ட், காசர் தேவி, மர்டோலா, கடர்மால் சூரிய கோவில், பாஜினாத் கோவில் போன்றவை பார்க்க வேண்டிய இடங்கள். சிம்டோலா என்ற அற்புதமான பிக்னிக் சுற்றுலா தலமும் அருகில் இருக்கிறது. , கைவினைப் பொருட்கள் நிறைய கிடைக்கும்.
தொலைவு: பண்ட் நகர் விமான நிலையம் - 116 கி.மி., ; கத்கோடம் ரயில் நிலையம் - 90 கி.மி.,
பார்க்க ஏற்ற காலம்: பருவமழைக் காலம் தவிர்த்து, ஆண்டு முழுவதும்.


லயிக்க வைக்கும் லான்ஸ்டோன்
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட அழகிய மலைநகரமான இது, சிறந்த பிக்னிக் தலமாகும். எங்கும் இயற்கை என்பதுதான் இதன் ஸ்பெஷல். இயற்கையின் அழகை ரசிக்க விரும்புகிறவர்களுக்கான இடம் இது. அருகிலுள்ள கிராமங்கள், அருங்காட்சியகம், வியூபாயின்ட்கள் என பார்த்து மகிழும் இடங்களும் உண்டு.
தொலைவு: கொட்வார் ரயில் நிலையம் - சாலை வழியில் 1 மணி நேரப் பயணத் தொலைவு
பார்க்க ஏற்ற காலம்: ஏப்ரல் - ஜூன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X