இந்தியாவில் டேப்ளட் பிசிக்கள் தயாரானாலும், அவை இன்றைய பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கிடைக்கின்ற வசதிகளை அப்படியே கூடுதலாகச் சிறப்பான முறையில், அதிக திறனுடன் தந்தால்தான் மக்கள் வாங்கத் தொடங்குவார்கள். இதனை உங்களைப் போன்ற பத்திரிக்கை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.
-சா. இஸ்மாயில், புதுச்சேரி.
மொபைல் போனுக்கான சிப்பையும் வாங்கிக் கொண்டு அந்த பயன் பாட்டினையும் டேப்ளட் பிசி தந்தால், மக்கள் போனுக்குப் பதிலாக நிச்சயம் நீங்கள் குறிப்பிடும் பட்டயக் கம்ப்யூட்டருக்கு மாறிக் கொள்வார்கள்.
-என். சாமுவேல், தாம்பரம்.
கம்ப்யூட்ட ருக்குப் புதியவரா? என்ற தலைப்பில் நீங்கள் தரும் தகவல், என்னைப் போன்ற 70ஐத் தாண்டியவர் களுக்கு நல்ல புத்தகமாக உள்ளது. இன்னும் பல கம்ப்யூட்டர் கூறுகளைப் பற்றி எழுதவும்.
-ஆர். சுப்பிரமணியன், திருப்பரங்குன்றம்.
ஐ-பேட் குறித்த உங்கள் கட்டுரை வந்த வேகத்தில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிப் ஒன்றை மக்களிடத்தில் பிரபலப்படுத்தும் விளம்பரத்தினைப் பார்த்தேன். புதிய கம்ப்யூட்டர் வாங்குவதனைத் தள்ளிப் போட்டு இன்னும் பல டேப்ளட் பிசிக்கள் வந்த பின்னர் அவற்றில் ஒன்றை வாங்க முடிவெடுத்து இருக்கிறேன்.
-டி.எஸ். சபாநாயகம், சென்னை.
மாதங்கள், தேதிகளை எப்படி ஒர்க்புக்கில் வரிசைப்படுத்துவது என குழப்பமாயிருந்த நேரத்தில், உங்கள் டிப்ஸ் சரியான பாடமாக இருந்தது. நன்றி.
-டாக்டர் இராசேந்திரன், விழுப்புறம்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் டேப்கள் அமைப்பது குறித்த என் கேள்விக்கு தந்த உதவிக் குறிப்பு மிக அருமை. எக்ஸ்டன்ஷன் பயன்படுத்தி என் ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன். இது போல பல புதிய விஷயங்களைத் தரும் உங்கள் கேள்வி பதில் ஆசிரிய ருக்கு என் வணக்கமும் வாழ்த்தும்.
-பெ.பாஸ்கரன், மதுரை.
கர்சர் முனையில் உலகக் கோப்பை மிக மிக அருமையான ஒரு சிறப்பான, பல பயன்தரும் தளம். இது குறித்து எத்தனை வேண்டுமானாலும் புகழலாம். ஒரு சிறிய திரையில் எத்தனை வகையான தகவல் கள். இதனைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
-ஆ. பாண்டியன், கோயமுத்தூர்.
டிஜிட்டல் சாதனம் எது வந்தாலும், அறிமுக வேளையில் எக்கச் சக்க விலை வைத்து விற்பனை செய்கிறார்கள் என்ற பொது உண்மையை டேப்ளட் பிசியும் நிரூபித்துள்ளது. இருப்பினும் சீன தயாரிப்புகளும் வருவதால், நம் நிறுவனங்கள் விலையைக் குறைக்க முயற்சி மனது வைக்கலாம்.
-பேரா. சிவசுப்பிரமணியன், சென்னை.
பத்து ஆண்டுகளில் பயமுறுத்தியவை இவ்வளவுதானா? நீங்கள் பயந்ததை மட்டும் எழுதி இருக்கிறீர்களா?
-டி.ஸ்வேதா லஷ்மி, சென்னை.
இந்த வாரம் வேர்ட் குறித்து ஒரே ஒரு டிப்ஸ் தான் வந்துள்ளது. தினந்தோறும் அதனையே பயன்படுத்தும் எங்களைப் போன்ற ஆபீஸ் அலுவலர்களுக்கென அதிகம் தருமாறு வேண்டுகிறேன்.
-கா. சாம்பசிவம், கோவை.