இதமூட்டும் ஹிமாச்சல் பிரதேசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2018
00:00

வட மாநிலங்களில் கோடை சுற்றுலா என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது ஹிமாச்சல பிரதேசம் தான். குளிர்காலத்தில் முழுவதுமாக பனி போர்த்தியிருக்கும் இதன் குளிர்மலைகளின் முழு அழகை, கோடையில்தான் கண்டுகளிக்க முடியும். எங்கும் இதமான காலநிலை, அவ்வப்போது இடியும், பருவமழைக்கு முந்தைய மழைத்தூறலும் என, இங்கு கோடை சுற்றுலாவே சிலிர்ப்பூட்டும். இதனால்தான் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணியர் ஹிமாச்சலை நோக்கி படையெடுக்கின்றனர்.
கவின்மிகு 'கஜ்ஜியர்'மினி சுவிட்சர்லாந்து என்று வர்ணிக்கப்படும் கஜ்ஜியர், சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது முழுக்க, முழுக்க பசுமை சூழ்ந்த மலை நகரம், இயற்கையின் மொத்த அழகும் கொட்டிக் கிடககும் கஜ்ஜியர் பள்ளத்தாக்கு, இளைப்பாறவும், இயற்கை அழகில் திளைக்கவும் மிகப் பொருத்தமான இடமாகும். முகலாய, இந்து கட்டிடக் கலைகள் ஒன்று சேர்ந்திருக்கும் இடமிது. கஜ்ஜியர் ஏரி, சமிரா ஏரி, கஜ்ஜிநாகா கோவில் ஆகியவை இங்கு பிரபலமான இடங்கள். மலையேற்றம் மற்றும் ஜோர்பிங் விளையாட்டும் இங்கு பிரசித்தம். அழகிய ஆப்பிள் பழத்தோட்டங்களும், எழிலான கிராமங்களும் கண்களுக்க விருந்தளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கைலாஷ் மலைச்சிகரத்தை இங்கிருந்து பார்ப்பது ஓர் பரவச அனுபவம்.பார்க்க வேண்டிய காலம்: மார்ச் - அக்டோபர் மாதங்கள்.அருகிலுள்ள இடங்கள்: சம்பா, கலடாப், டல்ஹவுசி
காதலர்களுக்கான 'டல்ஹவுஸி'விக்டோரியன் பாணி கட்டிடங்கள், இயற்கை காட்சிகளை காணுமிடங்கள், இயற்கை நீரூற்றுங்கள், இவற்றுடன் இதமான காலநிலை அனைத்தும் சேர்ந்து டல்ஹவுசி நகரை, கோடைக்கு உகந்த இடமாக மாற்றியிருக்கின்றன. நீங்கள் இயற்கை ஆர்வலராக இருந்தால், மலையேற்றத்தின் போது பிரமிக்க வைக்கும் காட்சிகளை காணும் வாய்ப்பு இங்கு கிடைக்கும். இளைப்பாறுவதற்கு அமைதியான ஓர் இடம் வேண்டுமெனில், அது டல்ஹவுசி தான். இதன் அழகும், அமைதியும், ஹனிமூன் தம்பதியருக்கு மிகவும் ஏற்றது. நிறைய டிரெக்கிங் மற்றும் இயற்கை நடை பயணங்கள் இங்குண்டு.பார்க்க ஏற்ற காலம்: மார்ச் - ஜூலை மாதங்கள்அருகிலுள்ள இடங்கள்: தர்மசாலா, கலடாப், கஜ்ஜியர்.
சாகசப் பிரியர்களுக்கு, 'பிர் பில்லிங்'நீங்கள் சாகசப் பிரியர் எனில், சாகச விளையாட்டுகளின் மெக்கா என்றழைக்கப்படும் பிர் பில்லிங், கட்டாயம் உங்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும். ஹிமாச்சல் பிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள சிறிய கிராமமான இது, அற்புதமான காலநிலையையும், பாதுகாப்பான அழகில் பள்ளத்தாக்கையும் கொண்டு பயணியரை ஈர்க்கிறது. பாராகிளைடிங் உள்ளிட்ட நாடித்துடிப்பை எகிற வைக்கும் சாகச விளையாட்டுகள், மலையேற்றம் மற்றும் கேம்பிங் போன்ற செயல்பாடுகள் உங்களுக்கு பரவசமூட்டும். 13ம் நூற்றாண்டு கோவிலான வைத்யநாத், புத்த மடாலயங்கள், பலம்பூர் தேயிலை தொழிற்சாலை உள்ளிட்டவையும் இங்கு காணத்தக்கவை. 2-3 நாட்கள் இங்கு தங்கலாம்.பார்கக ஏற்ற காலம்: மே - ஜூலை மாதங்கள்அருகிலுள்ள இடங்கள்: தர்மசாலா
ஹிமாச்சலின் நுழைவாயில் 'கசாலி'பணி மூடிய சிகரங்கள், அடர்ந்த காடுகள், ஆங்கிலேயர் கால கட்டிடங்கள் கொண்ட அழகிய சிறு மலைநகரம் தான் கசாலி. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் எல்லைகளையொட்டி அமைந்துள்ளது. அழகிய சர்ச்சுகள், ஆப்பிள் பழத்தோட்டங்கள், வாழ்விடங்களுக்கு திரும்பவரும் பறவைகள், என உங்களை கோடையில் குஷிப்படுத்த நிறைய உண்டு. பரபரப்பான நகர வாழ்க்கையை விட்டு சில நாட்கள் ஒதுங்கி இளைப்பாற நினைத்தால், அதற்கு கசாலியை விட சிறந்த இடம் இருக்காது. 3-4 நாட்கள் தங்கலாம். ஆங்கிலிக்கன் சர்ச், மங்க்கி பாயின்ட், ஹனுமன் பாதம் போன்ற இடங்களை கண்டு ரசிக்கலாம்.பார்க்க ஏற்ற காலம்: ஏப்ரல் - நவம்பர் மாதங்கள்; டிசம்பர் - ஜனவரி மாதங்கள்அருகிலுள்ள இடங்கள்: பர்வானூ, சோலன்
இதமான 'குலு - மணாலி'ஹிமாச்சல் பிரதேசத்தின் முதன்மை சுற்றுலா தலம் என்று இந்த இரட்டையர்களை சொல்லலாம். பனி மூடிய மலைகளுக்கு நடுவே பசுமைப் போர்த்திய மலைகளையும், தூய்மையான காற்றையும் விரும்புகிறவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு மிகவும் ஏற்றது. சோலங் பள்ளத்தாக்கில் சாகச விளையாட்டுகள், மணாலி பறவைகள் சரணாலயம், பழைய கோவில்கள் என, இந்த இரண்டு இடங்களிலும் பார்க்க ஏராளம் உண்டு. மேலும் டிரெக்கிங், கேம்பிங், ஆங்கிலிங், ரிவர் ராப்டிங், ஸ்கீயிங், போன்ற சாகச விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். முழுமையாக சுற்றிப் பார்க்க, 4-5 நாட்கள் தேவைப்படும்.பார்க்க ஏற்ற காலம்: மே - ஜூலை மாதங்கள்; நவம்பர் - ஜனவரி மாதங்கள்அருகிலுள்ள இடங்கள்: சோலங், ரோடங், மனிகரண், மலானா, கிரகங்கா, சண்டிகார் - 252 கி.மீ.,
சிலிர்ப்பூட்டும் 'சிம்லா'வடமாநிலங்களில் சிறந்த குளிர்மலை என்றால், முதலில் நினைவுக்கு வருவது சிம்லா. குடும்பத்தினர், தேநிலவு தம்பதியினர், தனியாக பணிப்போர் என, அனைவருக்கும் ஏற்ற சுற்றுலா தலம் இது. அண்மைக்காலமாக நிறைய சுற்றுலா பயணியர் வருவதாலும், வணிகச் செயல்பாடுகளாலும் நெரிசல் மிகுந்த இடமாக மாறிவிட்டாலும், இப்போது அதன் அழகை, சிம்லா தக்க வைத்திருக்கிறது. மால் ரோடில் ஷாப்பிங், ஜக்கு ஹில் டிரெக்கிங், ஹனுமன் கோவில், வைஸ் ரீகல் லாட்ஜ், சாகச விளையாட்டுகள், என உங்களை மகிழ்ச்சிப்படுத்த நிறைய இடங்கள் உள்ளன. எதுவும் செய்யாமல் இதமான காலநிலையை மட்டுமே அனுபவிக்க நினைத்தாலும் சிம்லா உங்களை மகிழ்விக்கும் 3-4 நாட்கள் தங்கலாம்.பார்க்க ஏற்ற காலம்: மே - ஜூலை மாதங்கள்; நவம்பர் - ஜனவரி மாதங்கள்அருகிலுள்ள இடங்கள்: தட்டபானி, சோலன், ம ேஷாப்ரா, சண்டிகர் - 117 கி.மீ. மணாலி - 260 கி.மீ., டில்லி - 343 கி.மீ.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X