கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: தண்ணீர்... தண்ணீர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2018
00:00

கேன் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர், மிகவும் பாதுகாப்பானது என, நம்புகிறோம். உலகம் முழுவதும், இந்த குடிநீர் வர்த்தகம் மட்டும், ௮.௮௨ லட்சம் கோடி ரூபாய்க்கு நடக்கிறது. உண்மையில், பாட்டில் மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் பாதுகாப்பானதா?
வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்ட, பத்திரிகையாளர்கள் நடத்தும், தன்னார்வ தொண்டு நிறுவனமான, 'ஆர்ப் மீடியா' சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஒரு தண்ணீர் பாட்டிலில், ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது.
மேலும், 11 முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த, 250 தண்ணீர் பாட்டில்களை ஆய்வு செய்ததில், அவற்றில் பிளாஸ்டிக் துகள்களுடன் சேர்த்து, 'பாலி புரோபைலின், நைலான், பாலி எத்திலின்' இருப்பதும் தெரிய வந்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள முன்னணி ஆய்வுக் கூடத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை தவிர, அதைப் போலவே இருக்கும் வேறு துகள்களும் இருப்பது உறுதி ஆகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், வெகு சிலவற்றில் மட்டுமே, எந்த துகள்களும் இல்லாமல் இருந்தது; சிலவற்றில், 1 லிட்டரில், 10 ஆயிரம் நுண்ணிய துகள்கள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த நிறுவனம் எடுத்த மாதிரி தண்ணீர் பாட்டில்களில், 93 சதவீதம் பாட்டில்கள், இதுபோன்ற பிளாஸ்டிக் மற்றும் பிற துகள்கள் இருந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது.
11 முன்னணி, 'பிராண்டு'களின், 250 வாட்டர் பாட்டில்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு பிராண்டுகள், தங்கள் தயாரிப்பு வாட்டர் பாட்டில்களில் பிளாஸ்ட் மற்றும் பிற வேதிப் பொருட்களின் துகள்கள் கலந்திருப்பதை ஒத்துக் கொண்டாலும், மற்ற பிராண்டுகள், 'இது பாட்டில்களில் இருக்கும் அளவை விடவும் மிகைப்படுத்தி, இந்த ஆய்வு கூறுகிறது...' என, குற்றம் சாட்டுகின்றன.
'பிளாஸ்டிக் துகள்கள் கலந்த நீரை குடிக்க, ஒருவராவது விரும்புவோமா? அப்படி இருக்க, தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏன் இப்படி பொறுப்பே இல்லாமல் நடந்து கொள்கின்றன?' என, பல்வேறு தரப்பிலிருந்தும், ஆய்வு குறித்து அதிர்ச்சியும், வேதனையுமான கருத்துகள் வெளிவந்தபடியே இருக்கின்றன.
காலரா, வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு தொற்று நோய்கள், தண்ணீர் மூலமே பரவுகிறது என்ற விழிப்புணர்வு இருப்பதால், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் தான் பாதுகாப்பு என, நம்மில் பெரும்பாலானோர் நம்பி வாங்குகிறோம்.
குறிப்பாக, வெளியிடங்களுக்கு செல்லும் போது, குழந்தைகளுக்கு, பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரையே கொடுக்கிறோம்.
பாதுகாப்பான குடிநீர் பல இடங்களிலும் எளிதாக கிடைக்கிறது; சுத்தமாக இருக்கும்; சுவை நன்றாக உள்ளது போன்ற பல காரணங்களால் பாட்டில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட நீரையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
இந்த நீரின் பயன்பாடு, ஓராண்டில், 300 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் கவலை, பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள். சமீபத்தில் செய்யப்பட்ட சர்வதேச ஆய்வு, கடல், குளம், ஏரி, மண், காற்று என்று அனைத்திலும், 5 மில்லி மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக கூறுகிறது. இந்தத் துகள்கள் கடைசியில் வந்து சேர்வது நம் உடலில்.
'குடிநீர் வழியே நம் உடலுக்குச் செல்லும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களில், 90 சதவீதம் வெளியேறி விடும்; 10 சதவீதம் சிறுநீரகங்கள், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புக்களில் போய் தங்கிவிடும் சாத்தியம் அதிகம்' என, மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் சென்றால், என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு, இதுவரையிலும் அறிவியல் பூர்வமான தகவல்கள் இல்லை.
இந்த ஆய்வறிக்கை வெளிவந்தவுடன், அறிக்கை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், 'அனேகமாக, எல்லா முன்னணி நிறுவனங்களின் தண்ணீர் பாட்டில்களிலும், பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
'தொடர்ந்து பாட்டில் மற்றும் கேன் நீரை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு பற்றி முழுமையான ஆய்வு நடத்த உள்ளோம்' என கூறியுள்ளது.
பாதுகாப்பான குடிநீர், குழாய்களில் கிடைக்கும் என்றால், காய்ச்சி ஆற வைத்து குடிப்பதே பாதுகாப்பானது என்பது தான், டாக்டர்களின் ஆலோசனை.

www.orbmedia.org

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X