என்.ஐ.டி., யில் சேர ஆசையா | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
என்.ஐ.டி., யில் சேர ஆசையா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 மே
2018
00:00

தமிழகத்தில் உள்ள ஒரே என்.ஐ.டி., கல்வி நிறுவனம், திருச்சியில் உள்ளது. இதில் 17 தற்காலிக இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம் : டேட்டா என்ட்ரி ஆபரேட்டரில் 13ம், அக்கவுண்ட்ண்ட் டிரெய்னியில் 4 இடங்களும் உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப் படிப்புடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய எம்.எஸ்., ஆபிசில் திறன் பெற்றவர்களாகவும், டைப்பிங் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அக்கவுண்டண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.காம்., படிப்புடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய வேர்டு, ஸ்பிரட்ஷீட் போன்றவற்றில் திறமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : 2018 மே 31ல் நடைபெறும் 'வாக் இன் இன்டர்வியூ' எழுத்துத் தேர்வில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினமே எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடக்கும்.

தேர்வு நடைபெறும் இடம் : The Orion building, NIT, Tiruchirappalli.

விபரங்களுக்கு : www.nitt.edu/home/other/jobs/DEO_Accountant_Trainees_2018-v2.pdf

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X