காந்தத்தை விழுங்கியதால், மூச்சு விடமுடியாமல் திணறிக்கொண்டிருந்த சிறுமிக்கு, இன்னொரு காந்தத்தை வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூரில் இந்த அரிய சம்பவம் நடந்துள்ளது 9 வயது சிறுமி. பொம்மை வைத்து விளையாடியபோது, அதிலிருந்த காந்தத் துண்டு தொண்டைக்குள் போய்விட்டது. நுரையீரலுக்கு மேல்புறத்தில் உள்ள சுவாசக்குழாய் பகுதியில் போய் அடைத்துக்கொண்டது. காந்தம் வழவழப்பாக இருந்ததால், அதை கிடுக்கி மூலமோ, எண்டோஸ்கோப்பி மூலமோ அகற்றுவது சிக்கலாக இருந்தது. இதனால், மருத்துவர்கள் பெரும் குழப்பமடைந்தனர். பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின்னர், இன்னொரு காந்தத்தைப் பயன்படுத்தி மேலே கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பெரிய காந்தம் மூலம், சுவாசக் குழாயில் சிக்கிக்கொண்டிருந்த காந்தத்தை மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர்.