கூகுளில் உள்ள பாதுகாப்பு ஓட்டையை சுட்டிக்காட்டிய இளைஞருக்கு, அந்நிறுவனம் 24 லட்சம் ரூபாய் பரிசளித்துள்ளது. உருகுவே நாட்டைச் சேர்ந்தவர், எஸ்கீல் பெரீரா, வயது 17. இவருக்கு சிறுவயது முதலே மென்பொருள் நிரலாக்கம் (Programming) மற்றும் கோடிங் எழுதுவதில் ஆர்வம் அதிகம். எஸ்கீல் தனது 11வது வயது தொடங்கி உலகளாவிய நிரலாக்கப் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல பரிசுகளை வாங்கியுள்ளார். தற்போது, கூகுள் கோடிங்கில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டிய அவருக்கு, 24 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எஸ்கீல் கூறும்போது, " நான் ஐந்தாவது முறையாக கூகுள் கோடிங்கில் உள்ள குறைபாட்டைக் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறேன். இந்த முறை கிடைத்த பரிசுத்தொகையே அதிகம்," என்றார்.