01. சிறுவர் நாடோடிக் கதைகள்
தொகுப்பு: கி.ராஜநாராயணன்
வெளியீடு: அகரம் பதிப்பகம்
காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்த பல சுவாரசியமான கதைகளின் தொகுப்பு. சிறுவர்களின் கற்பனை நிறைந்த உலகத்தை மேலும் விசாலமாக்கும் கதைகள்.
02. ஆயிஷா (குறுநாவல்)
இரா.நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
ஓர் அறிவியல் நூலுக்கு அதன் ஆசிரியை முன்னுரை எழுதுவதாக அமைந்ததே, இந்த நாவல். கல்வியை, அதன் நடைமுறையை, கற்பிக்கும் முறையை, அது குழந்தைகளிடம் ஏற்படுத்தும் பாதிப்பை அழுத்தமாய்ச் சொல்லும் புத்தகம்.
03. குட்டி இளவரசன்
அந்துவான் எக்சுபரி (தமிழில்: வெ.ஸ்ரீராம்)
வெளியீடு: க்ரியா பதிப்பகம்
பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகம். விமானம் பழுதடைந்ததால், பாலைவனத்தில் தரையிறங்குகிறார் விமானி. வெப்பம் வாட்டும் சூழலில், விண்மீனிலிருந்து வரும் ஓர் அழகிய சிறுவனோடு கழிக்கும் அற்புதப் பொழுதுகளே கதையாக விவரிக்கப்பட்டுள்ளது.
04. பூக்குட்டி சுஜாதா
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
சிறுவர்களுக்கு இடையிலான நட்பில் ஏழை, பணக்காரன், சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை உணர்த்தும் கதை. ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட இந்த நாவல் பெரியவர்களும் வாசிக்கக்கூடியது.
05. பிஞ்சுகள்
கி.ராஜநாராயணன்
வெளியீடு: அன்னம் பதிப்பகம்
இயற்கை எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம். சிறுவர்களுக்கு இயற்கை மீதான ஆர்வத்தை ஊட்டும் விதத்தில், குறுநாவலாக எழுதப்பட்டது இந்தப் புத்தகம். இயற்கையை பாதுகாப்பதன் அவசியம், உயிர்களின் மீது ஏற்படும் பரிவு ஆகியவற்றை ஒரு சிறுவனின் பார்வையில் விவரிக்கிறது.