ஜூன் 5, 1972: உலக சுற்றுச்சூழல் நாள்
ஒவ்வொரு தனிமனிதனும் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். சுகாதாரமாக வாழவும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை மக்களிடம் எடுத்துக்கூறவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஜூன் 6, 2004: தமிழ் செம்மொழி நாள்
2,500 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டது தமிழ் மொழி. அதற்கு, 'செம்மொழி' என்கிற உயர் தகுதியை இந்த நாளில் இந்திய அரசு அறிவித்தது.
ஜூன் 7, 1974: மகேஷ் பூபதி பிறந்த நாள்
இந்திய டென்னிஸ் வீரர். இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் லியாண்டர் பயஸ், சானியா மிர்சாவுடன் இணைந்து பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், விம்பிள்டன் என 12 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார்.
ஜூன் 7, 1811: சர்.ஜேம்ஸ் யங் சிம்சன் பிறந்த நாள்
ஸ்காட்லாந்து மருத்துவர். 'குளோரோஃபார்ம்' எனும் மயக்க மருந்தைக் கண்டறிந்தார். ஈதர் திரவத்தைப் பயன்படுத்தி வலியில்லாப் பிரசவ முறையை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்!
ஜூன் 9, 1781: ஜார்ஜ் ஸ்டீபன்சன் பிறந்த நாள்
இங்கிலாந்து பொறியாளர். பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை முதன்முதலில் அமைத்தார். 'ரயில் பாதைகளின் தந்தை' என்று போற்றப்படுகிறார்.
ஜூன் 10, 1925: வே. தில்லைநாயகம் பிறந்த நாள்
தமிழக நூலகத் துறையின் முன்னோடி. 40 ஆண்டுகளாகச் சேகரித்த தகவல்களை 'இந்திய நூலக இயக்கம்' என்னும் நூலாக வெளியிட்டார். 'தமிழகப் பொது நூலக இயக்கத்தின் தந்தை' எனப் புகழப்படுகிறார்.