அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2018
00:00

பி.எம்.ஜெ., - பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல்.. உலகின் பல நாட்டு மருத்துவர்களின், கீதை, குரான், பைபிள்! மருத்துவத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், மருத்துவர்கள் சந்தித்த சவால்கள்... அவை எதிர்கொண்டு ஜெயித்த முறை என, மருத்துவர்களுக்கு தேவையான அனைத்தும் இந்த இதழில் இருக்கும்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சர்வே பற்றி விலாவாரியாக கூறினார் டாக்டர் நண்பர் ஒருவர்.
ஆய்வு நடத்தப்பட்ட 21 வயதுக்குட்பட்ட பெண்களில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், பருவமடைந்த பின், வெகு சீக்கிரத்திலேயே, தம் கன்னித்தன்மையை இழந்தது குறித்து வருந்துகின்றனர்.

இதில் 16 வயதுக்கு முன்பே கன்னித் தன்மையை இழந்ததால் வருந்துபவர்கள் மூன்றில் இரண்டு பங்கு. ஆனால், இதே காலகட்டத்தில் உள்ள ஆண்களில் ஆறு பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் வருந்துகின்றனராம்!
'அது என்ன?' எனத் தெரிந்து கொள்வதில் இருந்த ஆர்வமே பொதுக்காரணமாக பெரும்பாலும் இருபாலரும் கூறியுள்ளனர்.
பெண்கள் தம் கன்னித் தன்மையைப் பெரும்பாலும் இழந்துள்ள வயது 16; ஆண்கள் 17!
மேலே சொன்ன கணக்குகள் எல்லாம் காதலர்களுடையது அல்ல; காதல் கீதல் எல்லாம் கிடையாது.. பள்ளித்தோழி, அடுத்த வீட்டுப் பெண், பக்கத்து வீட்டு சிறுவன்... இவர்களுடையது!
* நிஜமாகவே ஒருவரை ஒருவர் ஆழமாக காதலிப்பவர்களில், 16 சதவீதம் பெண்களும், 10 சதவீதம் ஆண்களும் காதலே எங்கள் கற்பு பறிபோனதற்கு காரணம் என்று கூறுகின்றனராம்.
* உணர்ச்சி மேலீட்டால், தப்பு செய்து விட்டோம் என, 13 சதவீதம் பெண்களும், ஆறு சதவீதம் ஆண்களும் கூறுயுள்ளனர்.
* கொஞ்சம் உ.பா., போட்டதுதான் முதன் முதலாக கன்னித்தன்மை இழந்ததற்கு காரணமாக அமைந்தது என 10 சதவீதம் இருபாலரும் கூறியுள்ளனர்.
* எதை இழக்கப் போகிறோம் என்பதை நன்கு அறிந்து, தம் சுய உணர்வுடன் கன்னித்தன்மையை இழந்ததாக, 14 சதவீதம் ஆண்களும், ஐந்து சதவீத பெண்களும் கூறியுள்ளனர்.
* ஆண்களை விட பெண்களே தம் தோழியரிடம் நடத்தையால் அதிக அளவு பாதிப்படைந்துள்ளனர். ஆறு சதவீத பெண்களும், மூன்று சதவீத ஆண்களும், தம் நண்பர்கள், இதில் ஈடுபடுகின்றனரே... நாம் ஏன் கூடாது என்ற எண்ணத்தில் விழுந்ததாகக் கூறியுள்ளனர்.
ஆய்வை லென்ஸ் மாமாவிடம் கூறி, நம் நாடு எவ்வளவோ பரவாயில்லை.. என்றேன்.
அட போப்பா... நம் நாட்டில் இது போன்ற சர்வேகள் நடத்தப்படவில்லை! நடத்திப் பார்க்கட்டும்... அப்புறம் பரவாயில்லைன்னு சொல்ல எனக் கூறி என் வாயை மூடினார்.


ஆசிரியரை சந்திக்க வந்த நடுத்தெரு நாராயணனின் ஜோல்னாபையை ஆராய்ந்தேன். அதில் ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் பற்றிய ஒரு தமிழாக்கப் புத்தகம் இருந்தது. எடுத்துப் புரட்டினேன்.
அதில் இருந்த ஒரு விஷயம்....
ஹிட்லருக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஒரு சமயம் பெரிய ஜோதிட வல்லனர் ஒருவரை அழைத்து வரச் சொன்னார். அவரிடம், என் ஆயுட்காலம் எப்போது முடிகிறது; நான் எப்போது சாவேன்? எனக் கேட்டார்.
ஹிட்லரின் ஜாதகத்தை மிகத் தீவிரமாக ஆராய்ந்த ஜோதிடர், யூதர்களின் பண்டிகையன்று நீங்கள் இறப்பீர்கள் என்று சொன்னார்.
யூதர்கள் தான் தம் நாட்டைச் சுரண்டியவர்கள்... அவர்களால் தான் ஜெர்மானியர்கள் வறுமையில் வாடுகின்றனர் என்ற எண்ணம் கொண்டிருந்தவர் ஹிட்லர். ஆயிரக்கணக்கான யூத இன மக்களை விஷ வாயு அறைகளில் அடைத்து மிகக் கோரமாகக் கொன்றவர்.
ஜோதிடரின் பதிலைக் கேட்ட ஹிட்லர் யூதர்களுக்குத் தான் பண்டிகைகள் ஆண்டு முழுவதும் வருகிறதே... எந்தப் பண்டிகையின் போத நான் இறப்பேன் என்பதை சரியாகச் சொல்லுங்கள் னெறார்.
நீங்கள் என்று இறக்கிறீர்களோ, அந்த நாள் யூதர்களின் பண்டிகை நாளாக நிச்சயம் கொண்டாடப்படும் என்றார் ஜோதிடர்.
அதன்பின் அந்த ஜோதிடரின் கதி என்னவாயிற்றோ என்று நினைத்துக் கொண்டேன்.

அவர் ஒரு மத்திய அரசு ஊழியர்; சிற்றிதழ்களின் சகவாசம் அதிகம் கொண்டவர்; எழுத்தாளர்; அவர் எழுதுவதும் யாருக்கும் புரியாது... (கையெழுத்தை சொல்லவில்லை...) எதிலுமே, எப்போதுமே மற்றவரில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்.
கடந்த வாரத்தில், நண்பர் ஒருவர் வீட்டில் அவரை சந்தித்தேன்..
டேய் கண்ணா... அந்த கண்றாவி இருந்தா, கொண்டா... என நண்பரிடம் கூறினார்.
ஆச்சரியம் கலந்த பார்வையை அவர் மீது வீசிக் கொண்டிருந்த போது....
எங்க ஆபீசுல ஒரு லேடிப்பா... ரொம்ப, வெல் பிஹேவ்ட் லேடி... அப்பப்ப பாத்து சிரிக்கும்... என் எழுத்துக்கள விமர்சனம் செய்யும்... டீ குடிக்ககூட வரும்!
லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்ட லேடி... ஒண்ணோ, ரெண்டோ கொழந்தைங்க இருக்கு. வயசென்ன இன்னிக்கெல்லாம் மிஞ்சி போனா, 30 அல்லது 32 இருக்கும்... என்று இவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இவர் கேட்ட, கண்றாவி வந்தது... உ.பா., தான்!
என்னங்க சார்... நீங்களே இதக் கண்றாவின்றீங்க... அப்பாலே அத ஏன் சாப்பிடுறீங்க? எனக் கேட்டேன்.
உனக்கு இதப்பத்தி எல்லாம் தெரியாது... விஷயத்தைக் கேளு... என்றவர் சரக்கை பக்குவமாகக் கலந்து கொண்டே தொடர்ந்தார்....
லவ் மேரேஜூன்னு தான் பேரு.. லவ்வே இல்லைன்னு இப்போ புலம்பறாங்க அந்த லேடி! அவங்க ஹஸ்பண்டு நல்ல பதவியில தான் இருக்காரு... நல்லா சம்பாதிக்கிறாரு... வொய்ப்பை மிஷின் மாதிரி தான் நினைக்கிறாராம்... நடத்துறாராம்... ஆறுதலா, அன்பாக, காதலா ஒரு வார்த்தை கூட பேசறது இல்லியாம்...
நானும் ஆபீஸ் போயி மாடா ஒழச்சு, பஸ்சில் இடிபட்டு, மிதிபட்டத்தானே வீடு வந்து சேருகிறேன்... என்ன, கண்ணா டயர்டா இருக்கான்னு ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டேங்கறாரு எனப் புலம்புகிறார் அந்த லேடி... கண்ணே மணியே என்று கொஞ்சியது எல்லாம் காதலிச்சுகிட்டு இருந்த காலத்தோட போச்சு...
'சரி போகட்டு, வேலை முடிஞ்சு நேரத்தோட வீடு வந்து சேந்தா என்னவாம்? ராத்திரி, 10.00 மணி, 11:00 மணி வரை பிரண்ட்ஸோட ஆட்டம் போட்டுட்டு வர்றாரு.. இங்கே நானும், குழந்தைகளும் அவரை எதிர்பார்த்துட்டே காத்துக் கிடக்கோம்ன்னு ஏன் அவருக்கு புரிய மாட்டேங்குதுன்னு கேக்குறாங்கப்பா அந்த லேடி' என்றவர், தன் ஜோல்னாபையைத் திறந்து, அதிலிருந்த மிக்ஸர் பொட்டலத்தைப் பிரித்து, வாய் கொள்ளாத அளவு உள்ளே தள்ளி கரக், முறுக் என்ற சப்தமாக அரைத்தார்.
இதனிடையே, நண்பர் வீட்டு சமையல்காரம்மா, எக் ஸ்கிரம்பிள் சுட, சுட எடுத்து வந்தார், அதையும், ஸ்பூனால் அள்ளி, இரண்டு, மூன்று வாய் போட்டுக் கொண்டு பூப்போட்ட கண்ணாடி கிளாசில் இருந்ததை அப்படியே உள்ளே தள்ளினார்.
அவரே தொடர்ந்தார்... இதுக்கெல்லாம் மேலே ஒரு விஷயம்ப்பா... லேடீசை பூ போல, ஹாண்டில் பண்ணனும்ப்பா... ஆனா, இந்த ஆளு முரடனாம்... அதையும் சொல்லி வருத்தப்படுதப்பா... என்றார்..
சரி... நீங்க என்ன ஆறுதல் குடுத்தீங்க? என்றேன்.
அதை விவரித்தார்..
பின், இது பற்றி தனிமையில் ஒரே யோசனை... காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டவங்க கூட ஏன் இப்படி நடந்துக்கிறாங்க என்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Manian - Chennai,இந்தியா
25-ஜூன்-201800:58:50 IST Report Abuse
Manian பி.எம்.ஜெ., - அண்ணல் இந்த சர்வேக்கள் அடிப்படை காரணங்களை பற்றி சொல்லவில்லை. இதற்கு பன்முக தன்மை வேண்டு,. அப்படி என்றால் என்ன என்பதற்கு முதலில் விளக்கம், பின் இந்த மாதிரி நடப்பதற்கு காரணங்களை சொல்லலாம்- (குரு மன்னிப்பாராக): பன்முக தன்மை (Polymath) என்பதை புரிந்து கொள்ளத்தவரை ஒவ்வொருவரும் தங்கள் சொல்வதே சரி என்று இங்கே கருத்து சொல்லுகிறோம். 15 -ம் நூற்றாண்டில் ஒரே விஞ்ஞானி மட்டும் இல்லாதிருந்தால் நாம் இன்றும் அதே நிலையில்தான் இருப்போம். விஞ்ஞானி சர்.ஐசக் நியூட்டன் மட்டும் இல்லாமல் போயிருந்தால், இன்னும் நாம் பழய காலத்தில்தான் இருப்போம். நியூட்டன் ஒருவரே புவி ஈர்ப்பு விசை (Gravity ),இடமாற்றம்(Movement/Motion ), வானசாஸ்திரம் (Astronomy ),கேல்குலஸ் (Calculus ) போன்ற விஞ்ஞான கோட்பாடுகளை கண்டுபிடித்தார். ஆனால் அதை எல்லாம் யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று அவற்றை வெளியிடவில்லை. அதிர்ஷ்டவசமாக, சற்று திறமை குறைந்த கணித விஞ்ஞானி நியூட்டனின் கண்டு பிடிப்புக்களின் முக்கியத்தை உணர்ந்தார். நியூட்டனை வற்புறுத்தி அந்த படைப்புக்களை வெளியிடவைத்தார்.அதற்கும் இந்த சர்வே கண்டுபிடிப்புக்கு சம்பந்தம்? நியூட்டன், ஐன்ஸ்டன் போன்றவர்கள் சிந்தனை அறிவை ஒரு மரம் போல கண்டார்கள். அனால் ஒரு மரக்கிளையில் அதே மரத்தில் நாம் அமர்ந்திருப்பதாகவும் எண்ணினார்கள் சிந்தனை அறிவை ஒரு மரம் போல கண்டார்கள். ஆனால் ஒரு அறிவை மரக்கிளையில் அதே மரத்தில் ஏதேனும் கற்ற ஒரு விசேஷ மரக்கிளையில் அமர்ந்திருப்பதாகவும் எண்ணினார்கள்.அந்த மரக்கிளையை ஒரு தலை பாடப் படிப்பு (Subject specialization ) -பொருளாதரம்(Economics), மருத்துவம்(Medicine), இன்ஜினீயரிங் (Engineering), இலக்கியம் (Arts), , வாணிபம்(Commerce), போக்குவரத்து(Transportation), விவசாயம் (Agriculture)... இன்றைய படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பும் இன்ஜினியர்கள் போர்னவர்கள்- போன்றவை. பசியோடு நாம் உட்கார்ந்திருக்கும் கிளையில் பழம் இல்லை என்றால், மற்ற கிளைகளில் அதை தேடும்போது, அந்த பழம் கிடைக்கும். நாம் இருக்கும் கிளை, அதே மரத்தின் இணைந்த ஒரு பகுதியே என்பதை புரிந்து கொண்டால், பழம் இருக்கும் கிளைக்கு சென்று அதை பறித்து பசி ஆறுவோம். - இனி செக்ஸ் சம்பந்த படட காரணங்களை பார்ப்போம். பல தடவை நான் இங்கே சொன்னதை முதலில் சொல்லுகிறேன். மருத்துவம் முழுவதும் இன்று போல் வளராதா காலத்தில், மனிதனின் மூளை வளர்ச்சி பதினெட்டு (18) வயதில் முடிந்து விடுகிறது என்று சொன்னார்கள் (அதனால்தான் ஒட்டுரிமை வழங்குகிறார்கள்).ஆனால், இளைஞர்களின் மோடடார் வாகன ஓட்டிகளின் ஆக்சிடென்டுகளை அமெரிக்காவில் ஆராய்ந்தார்கள். சுருக்கமாக எது சரி, எது தப்பு என்று பிரித்தறியும் திறன் முன் மண்டைக்கு மட்டுமே உரியது. அங்கே தான் நீண்ட நாள் பிளான்கள் , சிறந்த செய்யல் முறை தேர்தல், திடடமிடல் போன்ற முக்கிய காரணங்களுக்கு இந்த முன் மண்டையில் உள்ள ( front lobe) பிறந்டெல் லோப் என்ற மூளை பகுதி வளர்ச்சி 18 -19 வயதில் ஆரம்பித்து சுமார் 22 - ல் பெண்களுக்கும், 27 -29 -களில் ஆண்களுக்கும் முதிர்ச்சி அடைகிறது என்று கண்டார்கள்கள். அதனாலேதான் அந்த வயதில் படிக்கும் மாணவர்கள் எண்ணங்கள், திருமணம் பற்றி சிந்தனைகள், வேலையில் திரைமையாக பணியாற்றுதல் போன்ற எல்லாம் நன்ராக நடை பெருகிறதாம். இதில் சில விதிவிலக்கும் உண்டு. எனவே, சுமார் 14 - 20 வயது வரை இயர்கையின் உந்துதலால், ஆண்கள் , பெண்கள் இருவருக்கும் டெடிரஸ்டானே என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகம்,இன்னொன்று ஆக்சிடோசின்- இன்பத்தை உச்ச நிலைக்கு கொண்டுபோதல் . அதனால், முன் மண்டை முழுவதும் முற்றதா நிலையில், இரண்டும் இணைந்து எது சரி- எது தவறு எண்னும் திறமை வளராத நிலையில் செக்சில் ஈடுபடுகிறார்கள். சுழ்நிலை(தனிமை, உடல் மாற்றங்கள் பற்றிய கேள்விக்களுக்கு பதில் சோல்ல சிறந்த அனுபவஸ்தர்கள் இல்லாமை..) , புரிதல் உள்ள அன்பனான (எதையும் புரிந்துக்க முயலாத /முயற்சி செய்யாத - உணவு தருகிறேன், இடம் தருகிறேன், துணிமணி தருகிறேன், பள்ளிக்கு/கல்லூரிக்கு அனுப்புகிறேன் என்று மட்டுமே தன்னை சமாதானம் செய்து கொள்ளும்) தந்தைகள் மட்டுமே இருத்தல் , தங்கள் மன ஓட்டங்களை பயம் இல்லாமல் மனம் விட்டு பேச வீட்டில் யாரும் இல்லமால்/வெளியில் மனோமருத்துவ வசதிகள் இல்லாமை, தேவை இல்லாத பயம், பிறர் கேலி செய்வார்களே என்ற தாழ்வு மனப்பான்மையில் சம வயதுள்ளவர்களிடம் நெருங்கி, அது செக்சில் முடிகிறது. இதை தவறு இல்லை என்று சொல்லவில்லை/ சரிதான் என்று சொல்லவும் முடியாது. அதேசமயம், வேண்டாத கர்ப்பம், பால் வினை நோய்கள் வருதல் போன்ற மருத்துவ காரணங்களால் குறைக்க வழி தேடலாம். அதற்கு சமுதாய எண்ணங்கள் - வயது முதிர்ந்தவர்களின் நியாயங்கள் பயன் படாது. ஏனென்றால், இந்த மாதிரி செக்ஸ் உணர்வே வர வில்லை என்றால் அது முழு பொய், அல்லது முற்றும் துறந்த முனிவராக இருக்கவேண்டும்(அவரை நான் பார்த்ததில்லை) . அதை புரிந்து கொள்ளும் நிலையில் இந்த மாணவர்களின் மூளை வேலை செய்யாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம். இது உலகெங்கிலும் உள்ள உண்மை. நாம் எதையோ அதிசய பிறவிகள், நமக்கு இயற்கை தொந்தரவுகள் இல்லை என்பது வெறும் கற்பனையே. ஆனால், மனம் வீட்டு உண்மையையை நாம் ஒருபோதும், பொதுவாக ஒப்புக்கொண்டதில்லையே இதெல்லாம் தவறு என்று அறியாமையால் பேசுவது எந்த பயனும் தராது.
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
24-ஜூன்-201802:23:26 IST Report Abuse
Manian "பின், இது பற்றி தனிமையில் ஒரே யோசனை... காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டவங்க கூட ஏன் இப்படி நடந்துக்கிறாங்க என்று"- காதல் வந்ததும், ஒருவனுடைய மன கோளாறுகளை யாரும் கண்டு கொள்வதில்லை. கண்டு பிடிக்க முயற்சி செய்வதில்லை, முடியவும் முடியாது. பெற்றோர்களின் குணாதிசயங்கள், மாமன்கள் குணாதிசயங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியாததால், இந்த காதலன் யார் போல் நடந்து கொள்கிறாரோ என்று யூகிக்க முடிவதில்லை . அவலக் குணத்திற்கு அம்மானை கொண்டுள்ளான் - கெட்ட குணங்களுக்கு தாய் மாமனை கொண்டுள்ளான் என்று ஒரு சொலவாடை உண்டு. மூத்த பையனுக்கு மாமனே பல குடும்பங்களில் வழிகாட்டி. எனக்கு தெரிந்த சுமார் 30 குடும்பங்களில் இதை நான் கண்டுள்ளேன். என் சொந்த அண்ணனே, பொதுவாக நல்லவனாலும், இந்த தகப்பனாரின் அன்பு, பாசம் எல்லாம் இருந்தாலும், என் முத்த மாமனைப் போல அவசரமாக சோறை சோற்றை அள்ளி திணித்துக் கொள்ளுதல், விழுங்குதல், எதுவும் தனக்கு கிடைக்காதோ என்ற பேராசை போன்ற சுமார் 45 % சில கெட்ட குணங்களும் உண்டு. மானோதத்துவ ஆராச்சியார்கள் இதை மரபணு குறைபாடுகள் - யாரோ ஒரு தாய் வழி கெட்ட திரிபு ஜீன்கள் பெற்றுள்ளார்கள்- குணாதிசயங்கள் என்கிறார்கள். அதாவது, தாயாரின் வம்சத்தில் உள்ள மனக்கோளாறுகள் என்றும் குறிக்கிறார்கள். இது பற்றி விரிவான ஆராச்ச்சிகள் இல்லை. அப்படியே இருந்தாலும், இருக்கும் வியாதிகள், கண்கள் கோளாறுகள், குறைந்த சம்பளத்தை சொல்லி பெண் கேட்டவர்கள் , காதலியை தேடியவர்கள் இருப்பார்களானால், காதலித்து ஏமாந்த பெண்களும் புலம்பமாட்டார்கள். மேல் நாடுகள் ளில் டேட்டிங்கு செய்யும் போது மனக்கோராறுகள் சாமர்த்தியமாக மறைக்க படுவதால்- incompatibility இணைந்த மனப்பன்மை இல்லாமை - என்பது மெதுவாகவே தெரிய வருகிறது. அதுவே டைவர்ஸிலும் முடிகிறது. ஆகவே தான், " நன்றாகா,தீர" விசாரித்து என்று சொல்வார்கள். ஆனால் காமத்தை காதல் என்று எண்ணி மயங்கும்போது, இந்த வக்கிரங்களெல்லாம் நடக்கும். மேலும், பெண்கள் தங்கள் திறமையால் ஆண்களை மாற்ற முடியும் என்று "டெஸ்ட்டிராஸ்தோன் "அதிகமானா உடல் பலவான்கள் பதவிகளில் இருப்பவர்களை தேவர்கள் என்று எண்ணி கலியாணம் செய்துகொள்கிறார்கள். பிறந்து தான் ஈந்த ஆன் ஜென்மங்கள் மரபணுக் கோளாறு உள்ளவர்களுக்கு டெஸ்ட்டிராஸ்டோன் அதிகமானவர்கள் அன்பு காட்ட தெரியாத ஜென்மங்கள் என்று புலம்புகிறார்கள். உண்மையனா காதல் தியாகத்தால் வருவது, சிறந்த சிந்தனை/ கல்வியால் வருகிறது. அதற்கு நேரம் எங்கே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X