நம் நாட்டில் ஒரு பாலம் கட்டினால், பத்து பாலங்களுக்கான பணத்தை, நம் அரசியல்வாதிகள் அமுக்கி விடுவர். ஆனால், மற்ற நாடுகளில் அப்படியல்ல. உலகிலேயே, அதிக உயரத்தில், மிக நீளமான கண்ணாடியால் உருவாக்கப்பட்ட பாலம் ஒன்றை அமைத்து, சாதனை படைத்திருக்கிறது சீனா. கடல் பரப்பிலிருந்து, 305 மீட்டர் உயரே, ஷாங்ஜியாஜி மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்தை, வடிவமைத்தவர், இஸ்ரேல் கட்டட வல்லுனரான ஹெயிம் டாட்டன்.
பாலத்தை மூன்று மணி நேரம் பயன்படுத்த, ரூ.1,300 கட்டணம் செலுத்த வேண்டும். ஷாங்ஜியாஜி மலையின் சுற்றுலா மையத்திலுள்ள பாலத்திலும் பயணிக்க வேண்டுமென்றால், ரூ.2,700 கட்டணம் செலுத்த வேண்டும்.
— ஜோல்னாபையன்.