உலகின் 'டாப்-10' பட்டியலில் ரிஷிகேஷ், கோவா! | சுற்றுலா | Tour | tamil weekly supplements
உலகின் 'டாப்-10' பட்டியலில் ரிஷிகேஷ், கோவா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2018
00:00

பயண ஏற்பாடு மற்றும் ஆலோசனை நிறுவனமான, 'ட்ரிப் அட்வைசர்' வெளியிட்டுள்ள, நலச்சுற்றுலா செல்ல விரும்பும் பயணியரின், டாப்-10 பட்டியலில், இந்தியாவின் ரிஷிகேஷ் மற்றும் கோவா ஆகிய இரண்டு சுற்றுலா தலங்கள் இடம்பெற்றுள்ளன. உடல்நலம், யோகா, ஆன்மிகம் உள்ளிட்ட நோக்கங்களுக்காக பயணிப்பவர்கள், ட்ரிப் அட்வைசர் இணையதளத்தில் மேற்கொண்ட தேடல்களின் அடிப்படையில், நலச் சுற்றுலா பயணியர் விரும்பும், 'பத்து ஜென் தலங்கள்' என்ற பட்டியலை ட்ரிப் அட்வைசர் வெளியிட்டது. அதில் உத்தரகண்ட் மாநிலத்தில், இமயச்சாரலில் அமைந்துள்ள புனித நகரமான ரிஷிகேஷ் இரண்டாம் இடத்தையும், கோவாவின் சாண்டி கோஸ்ட் கடற்கரை ஏழாம் இடத்தையும் பிடித்துள்ளன.
தற்போது வேகமாக வளர்ச்சி பெற்று வரும் முக்கிய சுற்றுலா, நலச்சுற்றுலா என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரிப் அட்வைசர் நிறுவனத்தின் பேஸ்புக் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 25 சதவீதம் பேர் அடுத்த ஓராண்டுக்குள் நலச் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X