பயிறு வகைகள் | ருசி | Rusi | tamil weekly supplements
பயிறு வகைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2018
00:00

நாம் சாப்பிடும் உணவில், வேக வைத்த தானியங்களும், காய்கறிகளுமே முக்கிய உணவாக உள்ளன. அவ்வப்போது, பச்சை காய்கள், முளைகட்டிய தானியங்களையும் உட்கொள்ள வேண்டும். முளைவிட்ட தானியங்கள், மனிதனுக்கு கிடைத்த ஒரு வரம் என்று சொல்லலாம்.
முளைவிட்ட தானியங்கள், ஒரு முழுமையான உணவாக இருந்தாலும், இன்னும் பலர் அதை தினசரி உணவாக பயன்படுத்த தயங்குகின்றனர். உடலுக்கு வலிமை சேர்ப்பதற்காக, உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லும் இளைஞர்கள் பலர், முளைகட்டிய பயிறுகளை தான், முக்கிய உணவாக எடுத்துக் கொள்கின்றனர். செரிமான சக்தி அதிகரிக்கும்: மனிதன் உட்கொள்ளும் எண்ணற்ற உணவுகளில், ஒரு பிடி முளைவிட்ட தானியத்தில் கிடைக்கும் சத்து, வேறு எந்த உணவின் ஒரு பிடியிலும் இருக்காது. ஒரு தானியத்தில் உள்ள வைட்டமின் சக்தி, முளை விடும் போது பன்மடங்காகிறது. முளைவிட்ட கோதுமையில், வைட்டமின் "சி', 600 சதவீதம் அதிகமாகிறது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் "சி' அளவை விட, இது அதிகம். இப்பயிறு வகைகளை சாப்பிடுவது மூலம், உடலுக்கு தேவையான சக்திகள் மற்றும் உடலுறுப்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X