இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2018
00:00

சபாஷ், பட்டதாரி இளைஞர்களே...
அண்மையில் நடந்த அரசு பொதுத் தேர்வில், எங்கள் ஊர் அரசு பள்ளி, 10ம் வகுப்பில், 87 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 13 பேர் தேர்ச்சி பெறாததால், பள்ளியின், 100 சதவீத தேர்ச்சி பறிபோனது. இதை அறிந்த எங்க ஊர் பட்டதாரி இளைஞர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து, எந்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையோ, உடனடியாக, அவர்களுக்கு அரசு தேர்வுக்கு விண்ணப்பித்து, அந்தந்த பாடங்களில் முறையான பயிற்சி அளித்து, வெற்றி பெற செய்ததோடு, 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற வைத்தனர்.
அதோடு நில்லாமல், தற்போது, 10ம் வகுப்பு படிக்கும் அதே பள்ளி மாணவர்களில், பின்தங்கிய மாணவர்களை அழைத்து, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சியளிக்க துவங்கியுள்ளனர்.
மாணவர்களின் பெற்றோரும், இதற்கு பக்க பலமாக உள்ளதால், '100 சதவீத தேர்ச்சி இலக்கு மட்டும் அல்லாமல், 400க்கு மேல் மதிப்பெண் பெற வைப்பதே எங்கள் நோக்கம்...' என்கின்றனர் அந்த இளைஞர்கள்.
பட்டதாரி இளைஞர்களை போல், ஊருக்கு சிலர் இருந்தால், தமிழ்நாடு, கல்வியில், 100 சதம் அடைந்து விடும்.
— உமா புருஷோத்தமன், ஆதிச்சபுரம்.

மறந்தவைகளை சொல்லிக் கொடுங்க!
வீட்டுக்கு அருகே வசிக்கும் சிறுவர்கள், என் வீட்டுக்கு அவ்வப்போது வருவதுண்டு. ஒரு நாள் எனக்கு வந்த அஞ்சல் அட்டை ஒன்றை எடுத்து, 'இது என்ன அங்கிள்?' என்றதும், அதிர்ந்து போனேன்.
'இது தான் அஞ்சல் அட்டை... நாட்டிலேயே மிகவும் குறைந்த விலை தகவல் சாதனம். இதை, எளியோரும் பயன்படுத்தலாம்...' என்றேன்.
அஞ்சல் அட்டை, அஞ்சல் கவர் மற்றும் இன்லாண்டு லெட்டர் ஆகியவற்றை எடுத்து காட்டியதோடல்லாமல், மறுநாளே தபால் அலுவலகம் சென்று, சில அஞ்சல் அட்டைகளை வாங்கி, சிறுவர்களிடம் கொடுத்து, இதில், ஒருவருக்கொருவர் நல்ல செய்திகளை எழுதி, அவர்களின் முகவரிக்கு தபால் பெட்டியில் போட சொல்லிக் கொடுத்தேன். அத்துடன் பின் கோட்டின் முக்கியத்துவம் பற்றியும் கூறினேன்.
ஓரிரு நாட்களில், தங்கள் பெயருக்கு வீடு தேடி கடிதம் வந்ததை காட்டி, மகிழ்ந்தனர்.
இந்த பழக்கம், அவர்களின் பள்ளி நண்பர்களுக்கும் பரவி, தங்கள் உறவினர், நண்பர்களுக்கு அவ்வப்போது கடிதம் எழுதி வருகின்றனர்.
தொழில்நுட்பம் வளர்ந்த இணைய உலகில், இ - மெயில் மற்றும் வாட்ஸ்- - ஆப்பில் மூழ்கியுள்ள இளைய தலைமுறையினருக்கு, இது போன்ற மறக்கப்பட்ட தகவல் பரிமாற்ற முறைகளையும் சொல்லித்தந்து, தபால் துறைக்கு உயிரூட்டலாமே!
— எம்.விக்னேஷ், மதுரை.

அரசு பள்ளிகளுக்கு சிறுவர் இதழ்கள் வழங்கலாமே!
என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியையின் அரசு பள்ளிக்கு சென்றிருந்தேன். குழந்தைகளுக்கான இதழ்கள் அனைத்தும் இருந்தன. மதிய உணவு இடைவேளையில், குழந்தைகள் அதை படித்துக் கொண்டிருந்தனர்.
விசாரித்த போது, வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர், 50 அரசு பள்ளிகளுக்கு, சிறுவர் இதழ்களை சந்தா செலுத்தி, வாங்கித் தருவதாக கூறினர்.
அரசு பள்ளிகளுக்கு இதுபோல் புத்தகங்களை வழங்கி, வாசிப்பின் அருமையை குழந்தைகளுக்கு உருவாக்கி தரும், அந்த நல்ல மனிதரை மனதார பாராட்டினேன்.
நீங்களும், இதுபோல உங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, நுால் கொடை கொடுத்து உதவுங்களேன்!
ம.ஜெயமேரி, சிவகாசி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ruvaitha Begum - Lalpet,இந்தியா
19-ஜூலை-201818:43:39 IST Report Abuse
Ruvaitha Begum சபாஷ் பட்டதாரி இளைஞர்களே என்ற தலைப்பில் வந்த கதையை படித்ததில் மகிழ்ச்சி. இன்றைய இளைய சமுதாயத்திற்கு இதுபோன்ற பட்டதாரி இளைஞர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.. ருவைதா பேகம், லால்பேட்டை
Rate this:
Cancel
Naki - Mumbai,இந்தியா
16-ஜூலை-201812:53:54 IST Report Abuse
Naki நாங்களும் தபால் துறை பற்றி எங்கள் குழந்தைக்கு சொல்லி ஒரு இன்லேண்ட் லெட்டர் எழுதி போட வைத்தோம். ஆனால் அது வரவேயில்லை, விசாரித்தால் போஸ்ட்மேன் ரொம்ப குறைவு அதனால் லெட்டர் டிஸ்ட்ரிபூட் பண்ண முடியாது என்கிறாரகள்.
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
15-ஜூலை-201809:02:52 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மூன்றுமே நல்ல விஷயங்கள் பட்டதாரிகள் செய்யும் இந்தஉதவி மெய்யாலுமே கிரேட்டுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X