அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2018
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 28. படிப்பு, எம்.ஏ., மெல்லிய உடல்வாகு கொண்டவள். மாநிறம், அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும், பார்க்கும்படி இருப்பேன். சோடா புட்டி கண்ணாடி வேறு போட்டிருப்பேன்.
தோழியர் என்று யாரும் இல்லை. படிப்பில் கெட்டிக்காரியாக இருப்பேன். பாட சம்பந்தமான குறிப்புகளை, 'காப்பி' அடிக்க மட்டுமே, என்னுடன் பேசுவர், சக மாணவியர்.
ஆண் - பெண் என, இரு பிரிவினரும் இணைந்து படிக்கும் கல்லுாரியில் தான் படித்தேன். வகுப்பு தோழியர் சக மாணவர்களுடன் சகஜமாக பேசி, பழகுவதை பார்க்கும் போது, ஏக்கமாக இருக்கும். இந்நிலையில், மற்றொரு பாட பிரிவில் படிக்கும் மாணவன் ஒருவன், என்னுடன் பேச ஆரம்பித்தான். படிப்பு, குடும்பம் பற்றி எல்லாம் அக்கறையாக விசாரிப்பான். பாடத்திலும் சந்தேகம் ஏற்பட்டால், தீர்த்து வைப்பான். பல விஷயங்களை பற்றி பேசுவான்.
வீடு, கல்லுாரி, பாடப்புத்தகம் என, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிய எனக்கு, வெளி உலகத்தை அறிமுகப்படுத்தியவன், அவன் தான்.
மேற்கொண்டு என்ன படிக்க வேண்டும்; எந்த துறையில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது; போட்டி நிறைந்த உலகில், எந்த மாதிரியான தகுதிகளை வளர்த்துக் கொள்வது; எவ்வாறு திறமைகளை மேம்படுத்துவது போன்ற பல விஷயங்களை சொல்லி சொல்லி, எனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கினான்.
பசுமை நிறைந்த கல்லுாரி காலம் முடிவுக்கு வரும் நாளும் வந்தது. மொபைல் எண்ணை பரிமாறியபடி, பிரியா விடை பெற்றோம்.
இன்று அவன் வழிகாட்டலில், போட்டி தேர்வுகள் எழுதி, மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் ஒன்றில், பொறுப்பான பதவியில் உள்ளேன். அவன் கொடுத்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், வேறு யாரோ எடுக்கின்றனர்.
அவன் எங்கிருக்கிறான், எவ்வாறு சந்திப்பது என, புரியவில்லை. நாங்கள் படித்த கல்லுாரியில், அவன் படித்த டிபார்ட்மென்ட்டுக்கு சென்று விசாரிக்க முற்பட்டேன். அவர்கள் ஒரு முகவரியை கொடுக்க, அங்கும் சென்று பார்த்து விட்டேன். வடமாநிலம் ஏதோ ஒன்றுக்கு, குடும்பத்துடன் சென்று விட்டதாக அங்கு இருப்போர் கூறினர்.
என் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்படுத்தி, என்னை ஒரு உன்னத நிலைக்கு கொண்டு வந்த அவனை சந்திக்க விரும்புகிறேன்; ஆனால், எப்படி என்று தெரியவில்லை. வலைதளங்கள் எதிலாவது அகப்படுவானா என்று தேடியும் பார்த்து விட்டேன். ஹூம்... பயனில்லை.
அவனுக்காக என் திருமணத்தையும் தள்ளி போட்டு வருகிறேன். அவன், என்னை நல்ல தோழியாக நினைக்கவில்லையா... என்னுடன் பழகியதெல்லாம் பச்சாதாபத்தில் தானா... மன உளைச்சலில் உள்ளேன். தக்க ஆலோசனை தாருங்கள் அம்மா!
— இப்படிக்கு,
உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —
உன்னிடம் பழகிய நண்பன், தலைமை பண்பு உடையவன். பிறருக்கு ஆலோசனை வழங்குவதில் ஆர்வமுள்ளவன். குறிப்பாக, பெண் தோழியரை ஏற்படுத்திக் கொள்வதில் பெரியதொரு ஈடுபாடு கொண்டவன். கிரிஜாவிடமும் சரி, வனஜாவிடமும் சரி சமமான அக்கறை தான் காட்டுவான். அவன் இருக்கும் இடத்தில் இருப்பவருடன் நட்பாக பழகுவான். துாரத்தே விலகிப் போனால், பழையவர்களை மறந்து, புதியவர்களுடன் நட்பு பாராட்டுவான். உன்னுடன் அவன் நட்பாய் பழகினானே தவிர, 'உன்னை காதலிக்கிறேன்' என வாயால் கூறினானா அல்லது உடல் மொழியால் உணர்த்தினானா?
கரையோரம் வந்து விளையாடிப் போன டால்பினை, கடலுக்குள் தேடி கைகுலுக்க முடியுமா... குண்டூசி தயாரிக்கும் தொழிற்சாலையில், காணாமல் போன ஒரு குண்டூசியை கண்டுபிடிக்க முடியுமா... மழைக் காலத்தில் பூத்த வானவில்லை, கோடை காலத்தில் தேடி அலைதல் முறையா...
அவனை எதற்கு தேடுகிறாய்... தேடியவன் கிடைத்து விட்டாலும், என்ன பெரிய அற்புதம் நடந்து விடப் போகிறது... 'யார் நீங்கள்? உங்களை, எனக்கு ஞாபகமில்லையே... (பழையவைகளை நினைவூட்டிய பின்) ஓ... நீங்களா... என்னை கண்டுபிடிக்க ஏன் இத்தனை சிரமப்பட்டீர்கள்... என்னுடைய ஆலோசனைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றி, நல்ல பணியில் இருக்கிறீர்கள். மகிழ்ச்சி! எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என் மனைவியும் பணிபுரிகிறாள். மூன்று வயதில் மகனும், எட்டு மாத குழந்தையாய் மகளும் உள்ளனர். பத்திரமாக ஊருக்கு கிளம்புங்கள்...' என்பான். பிரம்மபிரயத்தனம் பண்ணி அவனை கண்டுபிடித்து, அவனிடம் அவமானப்படப் போகிறாயா?
அவன், உன்னை நல்ல தோழியாக பார்க்கவில்லை. நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருத்தியாக நினைத்தே பழகியுள்ளான். உன்னிடம், அவனுக்கு பச்சாதாபம் ஏதுமில்லை; வெறும் ஆர்வம் தான்.
சினிமா பார்த்து, மனதிற்குள் வீண் கற்பனைகள் வளர்த்துள்ளாய். ஏழெட்டு மணிநேர ரயில் பயணத்தில் ஒரே பெட்டியில் பயணிக்கும் இருவர், நட்பாய் பழகுவர், உணவு பரிமாறி கொள்வர். பெர்த்துகளை விட்டுக் கொடுப்பர், கைபேசி எண்களை தந்து கொள்வர். ரயில் பெட்டியிலிருந்து இறங்கியவுடன் இவர் யாரோ... அவர் யாரோ? கைபேசி எண்ணை வைத்து, முகவரி கண்டுபிடித்து, வீடு தேடி போய் கை குலுக்கினால், முகம் சுளிப்பர்.
யதார்த்த உலகில் வாழப் பார் மகளே. முகநுால் நண்பர்களை நம்பாதே.
'வாட்ஸ் ஆப்' குறுஞ்செய்திகளில் மயங்காதே. டுவிட்டரில் கரைந்து போகாதே. இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
* நண்பனின் நினைவுகளுக்கு நிரந்தர குட்பை சொல்லி, உனக்கான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழப் பார். பதவி உயர்வுக்காக மேலும் உழை. கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்.
* உன் பங்குக்கு குறைந்தபட்சம், நுாறு ஆண் - பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, 'கேரியர் கவுன்சிலிங்' கொடு.
* உன் பெற்றோர் பார்த்து வைக்கும் வரனை திருமணம் செய்து, சிறந்த குடும்ப தலைவியாக விளங்கு.
* இலக்கியங்களையும், சினிமாக்களையும், சின்னத்திரை சீரியல்களையும் பொழுதுபோக்காய் பார். வாழ்க்கையுடன் பொருத்தி பார்த்து அல்லலுறாதே.
* ஆணுடனோ, பெண்ணுடனோ விழுந்து விழுந்து நட்பு பாராட்டி காயப் படாதே. ஆரோக்கியமான இடைவெளி விட்டு பழகு. நட்பு தொடர்ந்தால் சந்தோஷம், நட்பு பிரிந்தால் அதே சந்தோஷம்.
* ஏட்டு கல்வியை விட, வாழ்க்கை கல்வியை முழு மூச்சாய் கற்றுக்கொள்.
* வரப்போகும் கணவனிடம், நண்பனை தேடி அலைந்ததைப் பற்றி மூச்சு விடாதே.
* மெய்யான காதல் எது என்பதை, திருமணத்திற்கு பின் உணர்வாய். அப்போது, நண்பனை தேடி அலைந்த நாட்களை கேலியும், கிண்டலுமாய் பார்ப்பாய், உணர்வாய்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gurusamy Kaladi - Sattur,இந்தியா
21-ஜூலை-201814:20:49 IST Report Abuse
Gurusamy Kaladi Kaladi Gurusamy, Sattur -இந்தியா அம்மா சகுந்தலா அவர்கள் நல்ல அறிவுரை கூறியுள்ளார்கள், ஆனால் அந்த கேடுகெட்ட சீரியலை மட்டும் தயவு செய்து மறந்தும் பொழுதுபோக்கிற்க்காக பார்க்கவேண்டாம், உங்களுடைய எதிர்காலம் நல்லபடியாக அமைய இயற்க்கை உறுதுணையாக இருக்கும், அதனடிப்படையில் எல்லாம் வல்ல உங்களுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க உங்களுடைய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Siva - Chennai,இந்தியா
16-ஜூலை-201811:49:55 IST Report Abuse
Siva அன்பு சகோதரி, Depression என்பது ஒன்றை பற்றியே நினைப்பதாலும் தன்னை தானே demotivate செய்வதாலும் வரும் ஒரு வியாதி. உன்னுடைய நண்பன் உனக்கு செய்தது பாராட்டத்தக்கது, எவராலும் மறுக்க முடியாது. அனால், வாழ்க்கை என்பது ஒரு பெரிய கடல் அதில் நீ அனுபவிக்க வேண்டியவை எண்ணில் அடங்காது. காதலிக்காத மனிதர்கள் இந்த உலகில் இலர், அது ஒரு தலை காதலோ இல்லை இரு தலை காதலோ, அனைவரும் அதை அனுபவிக்கின்றனர். சிலருக்கு காதல் வெற்றியையும் பலருக்கு தோல்வியையும் தந்துள்ளது. உன் நண்பனிடம் நீ உனது number-ஐ தந்து இருக்காய். அவனுக்கும் உன்மேல் காதல் இருந்து இருந்தால் அவன் உன்னை தொடர்பு கொண்டு இருப்பான். உன் மனதுக்குள் நீ வளர்த்து கொண்டுள்ள காதல் மிகவும் மோசமானது, உன்னோடைய வெற்றிக்கு அது ஒரு தடையாக இருப்பதாய் நான் உணர்கிறேன். Please focus on your successful life. Move ahead.
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
16-ஜூலை-201801:16:09 IST Report Abuse
.Dr.A.Joseph வாய்மொழியாகவோ,உடல்மொழியாகவோ உங்களை காதலிப்பதாக உணர்த்தியிருந்தால் அவரை தேடுங்கள்.இல்லையெனில் அவரை ஒரு நல்லாசிரியர் என நன்றி பாராட்டி விட்டு விடுங்கள். அவரைப்போல நீங்களும் நிறையபேரை உருவாக்க முயலுங்கள்.நிறைந்த அன்புடன்................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X