அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2018
00:00

அன்புள்ள ஆன்ட்டி —
நான், 27 வயது பெண். படிப்பு: எம்.காம்., வங்கியில் பணிபுரிகிறேன். ஒரே மகள். அப்பா அரசு பணியில் உள்ளார்; அம்மா பள்ளி ஆசிரியை. என்னுடன் பணிபுரியும் ஒருவரை காதலிக்கிறேன். அவர் நல்லவர். அவருக்கு ஒரே ஒரு அக்கா; திருமணமாகி விட்டது. அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, வேறு ஜாதியை சேர்ந்தவர்.
என் காதல் விஷயம் வீட்டினருக்கு தெரிந்து, கேவலமாக என்னை ஏசி பேசினர், பெற்றோர். உடனடியாக, எங்கள் ஜாதியை சேர்ந்த வேறொரு மாப்பிள்ளையை தேட ஆரம்பித்தனர்.
எதிர்ப்பு தெரிவித்து, ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்தேன். என்னை ஒரு அறையில் பூட்டி, சிறை வைத்தனர்.
என் அத்தை தான், வற்புறுத்தி சாப்பிட வைத்தார். என் பிடிவாதத்தை அறிந்த அவர், பெற்றோரிடம் பேசி, சமாதானப்படுத்த முயன்றார். அவர்கள் எதற்கும் மசியவில்லை. என்னை வேலையிலிருந்து நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார், அப்பா.
இவ்வளவு நடந்த பிறகும், என் காதலன் என்னை மணந்து கொள்ள விரும்பி, எவ்வளவு காலமானாலும் காத்திருப்பதாக கூறுகிறார்.
பெற்றோரையும் விட்டு செல்ல விரும்பவில்லை; காதலனையும் மறக்க முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அம்மா.
இப்படிக்கு
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு,
காதலிக்கும் எல்லா பெண்களும் தங்களின் காதலர்களுக்கு பார்த்த கணத்தில் நன்னடத்தை சான்றிதழ் கொடுத்து விடுகின்றனர். உண்மையில் உன் காதலன் எப்படிப்பட்ட குணங்களை கொண்டவன்... உன்னை ஆயுளுக்கும் வைத்து காப்பாற்றுவானா... உங்களுக்கு கலப்பு மணம் நடந்தால், அவனது பெற்றோர் உங்களை ஏற்றுக் கொள்வார்களா... ஆந்திராவில் யாரையாவது திருமணம் செய்து, இங்கு வங்கி வேலைக்கு வந்திருக்கிறானா என்பதை எல்லாம் நீ அலசி ஆராய்ந்திருக்க வேண்டும்.
ஜாதி விட்டு ஜாதி, மாநிலம் விட்டு மாநிலம் திருமணம் செய்து கொள்வது பெரிய விஷயமில்லை. அந்த திருமண பந்தம், 50 ஆண்டுகளுக்கு நீடித்திருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
வங்கி வேலை கிடைப்பது எளிதல்ல. அதற்காக கோச்சிங் சென்டர் சென்று படித்து, பலமுறை பெயிலாகி, பின் தேர்வாகி, வேலைக்கு போயிருப்பாய். வங்கி பணிக்கு சம்பளமும் அதிகம், சலுகைகளும் அதிகம். குறுகிய காலத்தில், பதவி உயர்வுகளும் சாத்தியம். ஆகவே, எக்காரணத்தை முன்னிட்டும் வங்கி பணியை விட்டு விடாதே.
'என் காதலனை பற்றி எனக்கு உள்ளும் புறமும் தெரியும். நாங்கள், 'டீனேஜ்' காதலர்கள் அல்ல மூன்று ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருக்கிறோம். இவனை விட்டால் எனக்கு வேறொரு ஆதர்ஷ கணவன் கிடைக்க மாட்டான், என்னை விட்டால் அவனுக்கு வேறொரு ஆதர்ஷ மனைவி கிடைக்க மாட்டாள். அவன் பொய் என்றால், உலகத்தில் வேறெதுவுமே உண்மையாய் இருக்காது. உண்மையான காதலுக்கு, ஜாதியோ, மொழியோ எல்லைக் கோடுகளோ தடையாய் இராது. எனக்குள் அவனும், அவனுக்குள் நானும் கரைந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. ஒரு சுவாசத்தில் இரு உயிர்கள்...' என்கிறாயா. அப்படியென்றால், உன் காதலை ஒரு போதும் கைநழுவ விட்டு விடாதே.
வங்கி பணியும் வேண்டும், காதலனும் வேண்டும், பெற்றோரும் வேண்டும் என நீ அடம் பிடித்தால் எப்படி? வாழ்க்கையில் ஒன்றை பெற, மற்றொன்றை இழந்து தான் ஆகவேண்டும். பெறுவது, இழப்பதை விட லாபகரமானதாய் இருந்தால், நல்லது.
ஒரு பொறுப்புள்ள தாயான நான், உன்னைப் போன்ற மகளுக்கு இப்படி ஒர் அறிவுரை கூறக்கூடாது. ஆனால், சூழ்நிலையின் அவசியம் கருதி கூறுகிறேன். நீயும், உன் காதலனும் அவரவர் உறவுகளை துறந்து, பதிவு திருமணம் செய்து கொள்ளுங்கள். வங்கி தலைமைக்கு விண்ணப்பித்து, இருவரும் பணி இட மாற்றம் பெற்றுக் கொள்ளுங்கள். இட மாற்றம் செய்யப்படும் வங்கி கிளைக்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்துங்கள். உன் கைபேசி எண்ணை மாற்று. எக்காரணத்தை முன்னிட்டும் கைபேசி மூலம் பெற்றோரிடமோ, உன் தரப்பு உறவினர்களிடமோ பேசாதே.
யார் கண்ணையும் உறுத்தாமல், ஐந்து ஆண்டு, அமைதியாக குடும்பம் நடத்துங்கள். சினிமா, மால் என்று ஊர் சுற்றுவதை தவிருங்கள். உன் கணவனின் கைபேசி எண்ணையும் மாற்ற சொல். அவனையும், அவனின் பெற்றோரிடமும், உறவினரிடமும் பேச வேண்டாமென கூறு. சொந்த வீடு கட்ட வேண்டும்... கார் வாங்க வேண்டும்... வீட்டு உபயோக பொருட்களை வாங்கி குவிக்க வேண்டும் என முயற்சிக்காதீர்கள்.
காதலிக்கும்போது, இருவரும் ஒருவருக்கொருவர் எப்படி உண்மையாக இருந்தீர்களோ அப்படியே திருமணத்திற்கு பின்னும் இருங்கள். காதலின் வெற்றி, திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்துவதில் தான் பரிபூரணமடையும். உன் காதலன் தமிழ் மொழியை முழுமையாக கற்றுக்கொள்ளட்டும். நீ சுந்தரத் தெலுங்கினை முழுமையாக கற்றுக்கொள். இரு மாநில சமையலுக்கும் காந்தர்வமணம் செய்து வை. எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள். 'ஈகோ' அறவே ஆகாது. வீட்டிலும் இரு வங்கி பணியாளர்களாக இராதீர்கள். கணவன் - மனைவியாக இருங்கள்.
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரன் உன் காதல் வெற்றி பெற, அருள் புரியட்டும்.

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar Vijay - Bangalore,இந்தியா
25-ஜூலை-201810:57:06 IST Report Abuse
Chowkidar Vijay நீ யாரை கல்யாணம் பண்ணாலும், ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து விட்டுகுடுத்து மதித்து நடக்கவில்லை என்றால் கல்யாணம் பண்ணி வேஸ்ட் தான் ..
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
24-ஜூலை-201807:07:06 IST Report Abuse
Ramesh Kumar பெற்றோரின் சம்மதம் கிடைக்கும் வரை உங்கள் காதலிலே உறுதியாக இருங்கள்....உளப்பூர்வமாய் ஒருவரை விரும்பி, மற்றவர்களின் வற்புறுத்துதலால் வேறொருவரை கரம் பிடிப்பது கொடுமையிலும் கொடுமை......என்னதான் காலம் நம்மை மாற்றும் என்றாலும் பிரிவின் வலியும் வேதனையும் கடைசிவரை கூடவே வரும்.....
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
23-ஜூலை-201812:43:40 IST Report Abuse
manivannan திரு செந்தில் குமார் சொல்வதையே நான் ஆமோதிக்கிறேன். பாஷை கீஷை ஒரேமாநிலம் , ஜாதி ஜனம் என்று உள்ள காதல்களே காற்றிலே கரைந்து கோர்ட் டிலே நிற்கிற காலம் இது பேசாமே அப்பா அம்மா சொல்கிறதே கேளுங்கள் . எல்லாம் மறந்து போய்விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X