மனிதர்களே இப்படித்தான்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2018
00:00

கீரப்பாளையம் என்ற ஊரில், ஒரு பாட்டி இருந்தாள். அவளது மகள் அழகே உருவானவள். சிறு வயதிலேயே, திருமணம் முடிந்தது. கடமை முடிந்து விட்டது என்று, பாட்டி திருப்தியடைந்தாள்.
அந்த நேரத்தில், புருஷன் வீட்டுக்குப் போன மகள், சோகம் ததும்பிய முகத்தோடு, பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாள். கர்ப்பிணி என்றும் பாராமல், அவளை அடித்து, தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டான், இரக்கமற்ற கணவன்.
அவள் அழகான, ஆண் குழந்தையை பெற்றாள். சில நாட்களிலே இறந்துவிட்டாள். மகளை இழந்த பாட்டிக்கு, ஒரு பேரன் கிடைத்து விட்டான்.
குடிசையில், ஒண்டிக் குடித்தனம் நடத்தி வந்த பாட்டி, பேரனை சீராட்டி வளர்த்தாள். தாயின் முகமறியாத குழந்தை அது. சிரித்து விளையாடும் போது, 'மானே... மயிலே... மரிக்கொழுந்தே...' என்று கொஞ்சுவாள். அழ ஆரம்பித்து விட்டால், 'நாயே... பேயே... சனியனே...' என்று திட்டத் துவங்கி விடுவாள்.
ஒரு நாள்-
குழந்தை, தொடர்ந்து அழுதபடியே இருந்தது. பாட்டி, சமாதானம் சொல்லி பார்த்தாள். அழுகையை நிறுத்தியபாடில்லை. அப்போது, இரை தேடி அலைந்து கொண்டிருந்த ஓநாய் ஒன்று, அங்கு மிங்கும் சுற்றி விட்டு, பாட்டியின் குடிசை பக்கம் வந்து நின்றது.
குடிசைக்குள்ளே குழந்தையின் அழுகை சத்தமும், பாட்டியின் அதட்டலும் ஓநாயின் காதில் விழுந்தது.
குழந்தையை அதட்டியபடி, 'இனியும் அழுகையை நிறுத்தா விட்டால், என்ன செய்வேன் தெரியுமா... உன்னை துாக்கி போய், குடிசைக்கு வெளியே நிற்கும் ஓநாய்க்கு போட்டு விடுவேன்...' என்று, சத்தம் போட்டு பயம் காட்டினாள், பாட்டி.
குடிசைக்கு வெளியே பசியுடன் நின்று கொண்டிருந்த ஓநாய், இதைக் கேட்டு, மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது.
'இன்னும் சிறிது நேரத்தில், குழந்தையை, குடிசைக்கு வெளியே வீசுவாள்' என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது.
நேரம் செல்ல செல்ல, ஓநாய்க்குப் பசி அதிகரித்தது. எதிர்பார்த்தபடி, குழந்தையை வெளியே கொண்டு வரவில்லை பாட்டி. குழந்தையின் அழுகை படிப்படியாக குறைந்து, முழுவதுமாக நின்று விட்டது.
அழுகையை நிறுத்தி, சிரித்த குழந்தையை கண்ட பாட்டி, 'ராசா... இப்பத்தான் நிம்மதி; நல்லா துாங்கு... இப்ப அந்த ஓநாய் வரட்டும்; இங்கிருக்கிற உலக்கையால் ஒரே அடியில், தலையை சுக்கு நுாறாக்கி விடுறேன்...'' என்றாள்.
'குழந்தையைத் தின்னலாம்' என்று பசியுடன் காத்திருந்த ஓநாய், 'ச்சே... இந்த மனிதர்களே இப்படி தான்; சொல்வது ஒன்று; செய்வது வேறு' என்று நினைத்தபடியே, அவ்விடத்தை விட்டு சென்றது.
குட்டீஸ்... காதில் விழும் வார்த்தையில், உண்மை இருக்கிறதா என்பதை, நிதானமாக சிந்தித்து முடிவு செய்தால், வாழ்க்கையில் உயரலாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X