வெற்றி ரகசியம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2018
00:00

தச்சு வேலைக்காரன் செந்தில். அவன் செய்யும் மேஜை, நாற்காலி போன்றவை மிகவும் நேர்த்தியாகவும், வசீகரமாகவும் இருக்கும். துாக்கமின்றி தவிப்பவர்கள், அவன் செய்த கட்டிலில் படுத்தால், நன்றாக துாக்கம் வருவதாக கூறுவர். அதனால், தயாரிப்புகளுக்கு என்ன விலையை அவன் கூறினாலும், தயங்காமல் வாங்கி செல்வர்.
இப்படி, பலராலும் பாராட்டப்பட்டாலும், செந்திலுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. பலருக்கு, தொட்டில் செய்து கொடுக்கும் அவனுக்கு கொஞ்சி விளையாட, ஒரு குழந்தை இல்லை.
மர பொம்மைகள் செய்வதிலும், அவன் கெட்டிக்காரன்; அவன் செய்யும் பொம்மைகள், உயிருள்ளவை போல, தத்ரூபமாக தோற்றமளிக்கும்.
செந்திலின் ஊர் அருகே ஒரு ஜமீன்தார் வசித்துவந்தார். அவர், ஒரு அழகிய குழந்தை பொம்மை செய்து தரும்படி செந்திலைக் கேட்டார்; கணிசமாக முன் பணம் கொடுத்து சென்றார்.
உயிருள்ள மரங்களை வெட்டுவதில், செந்திலுக்கு உடன்பாடு இல்லை; எனவே, வனதேவதையை, நினைத்து, அருள்புரிய வேண்டினான்.
வனதேவதை, அவனது பக்தியை மெச்சி, காற்று தேவன் மூலம், பட்டு போன ஒரு மரத்தை விழ செய்தாள்.
வனதேவதையை வணங்கி, பசி, தாகமின்றி, இரவு, பகலாக, பொம்மையை முழுமூச்சாக உருவாக்கினான். நினைத்தபடியே, வெகு நேர்த்தியாக, பொம்மை அமைந்தது; இரண்டு நாட்களில் ஜமீன்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால், வண்ணம் பூசி முடித்தான். பணிக் களைப்பில், அன்று இரவு அயர்ந்து உறங்கினான்.
என்ன ஆச்சரியம், செந்தில் செய்த பொம்மைக்கு, உயிர் வந்து, அழகாக நடை போட துவங்கியது. அங்கிருந்த மரச்சாமன்களில் மோதி அதன் கால் உடைந்தது.
மறுநாள் காலையில், கண் விழித்த செந்தில், பொம்மையின் கால் ஒடிந்திருப்பதை பார்த்து கதறினான்; அவன் மனைவியும் ஓடி வந்து,''என்ன சோதனை இது...'' என்று, சொல்லி கண் கலங்கினாள்.
''தெய்வமே... என்ன பிழை செய்தேன்... என்னை ஏன் சோதிக்கிறாய்...'' என்று, கதறியபடி மயங்கி விழுந்தான்.
அவனது வேதனைக் குரலைக் கேட்ட வனதேவதை கனவில் தோன்றி, 'வருந்தாதே, உன் கை வேலைப்பாடால், பொம்மைக்கு உயிர் வந்து நடந்த போது, கால் ஒடிந்தது. பொம்மையின், ஒடிந்த காலை சரி செய்து விட்டேன். உன் தன்னம்பிக்கை, உற்சாகம், தொழில் மீதுள்ள பக்தி இவைதான், உன் வெற்றியின் ரகசியம். என்னை முழுமையாக நம்பி வழிபட்டதால், உனக்கு விரைவிலேயே, ஒரு குழந்தை பிறக்கும்' என்று வாழ்த்தி, மறைந்தது.
மயக்கம் தெளிந்து எழுந்த செந்தில், கனவில் கண்டதை, மனைவியிடம் கூறினான்; அவள் ஆனந்த கண்ணீர் வடித்தாள்.
அப்பொம்மையை, ஜமீன்தாரிடம் ஒப்படைத்தான் செந்தில். பொம்மையின் அழகைக் கண்டு, பெருமகிழ்ச்சி அடைந்து, பாராட்டினார் ஜமீன்தார்.
வனதேவதை அருளால், செந்திலுக்கு ஒரு குழந்தை பிறந்தது; அந்த பொம்மை போலவே, குழந்தை இருந்ததை கண்டு, கிராமமக்கள் ஆச்சரியப்பட்டனர். 'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற முதுமொழியை மனதில் கொண்டு, செந்தில் உழைத்ததால், அவனுக்கு உயர்ந்த பரிசு கிடைத்துள்ளது என புகழ்ந்தனர்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X