கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மார்
2011
00:00

கேள்வி: நான் வேர்டில்,பைல் ஒன்றை பிரிண்ட் செய்திடக் கமாண்ட் கொடுக்கையில், பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைப்பதற்குப் பதிலாக, பேக்ஸ் விஸார்ட் தரப்படுகிறது. எப்படி பிரிண்ட் டயலாக் பாக்ஸ் பெற்று பிரிண்ட் செய்வது?
-ச.முருகதாஸ், பொள்ளாச்சி.
பதில்: உங்களுடைய கம்ப்யூட்டருடன், பிரிண்டர் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொண்டு இந்த விளக்கத்தினைத் தருகிறேன். பிரிண்ட் டயலாக் பாக்ஸ் வராததற்குக் காரணம், கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்ட பிரிண்டர், டிபால்ட் (Default) பிரிண்டராக செட் செய்யப்படாத தாகத்தான் இருக்கும். இதற்கான ஒரு குயிக் பிக்ஸ் தரட்டுமா? கிடைக்கும் பேக்ஸ் விஸார்டை அடுத்து உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில், நீங்கள் இணைத்திருக்கும் பிரிண்டர் பெயர் இருக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இன்னொரு வழியும் உள்ளது. ஸ்டார்ட் பட்டனில் இடது கிளிக் செய்திடவும். பின்னர், கண்ட்ரோல் பேனல் என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி என்று எழுதி இருக்கிறீர்கள். இதில் பிரிண்டர்ஸ் அண்ட் அதர் ஹார்ட்வேர் என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இங்கு பேக்ஸ் பிரிண்டர் அல்லது இன்ஸ்டால்டு பிரிண்டர்ஸ் என்பதனைப் பார்க்கவும். இங்கு பிரிண்டரின் பெயரில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், டிபால்ட் பிரிண்டர் என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே வரிசையாகக் கிளிக் செய்து மூடவும். இனி, எந்த புரோகிராமில் பிரிண்ட் கொடுத்தாலும், அது பிரிண்டர் டயலாக் பாக்ஸைக் கொண்டு வரும்.

கேள்வி: என் நண்பர் ஒருவரின் கம்ப்யூட்டரில், டாஸ்க் பாரில் நேரம் அருகே அவரின் பெயர் காட்டப்படுகிறது. அது எப்படி என அவருக்கும் தெரியாது என்று சொல்கிறார். யாரோ ஒருவர் அமைத்தார் என்று கூறுகிறார். இதனை எப்படி அமைப்பது?
-ஜே.ஸ்டெல்லா மனோகரன், மதுரை.
பதில்:உங்களுடைய ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். இருப்பினும் இது ஒரு வேடிக்கை விளையாட்டு. நீங்கள் உங்கள் பெயரைத்தான் என்றில்லை, எந்த பெயரையும் கடிகார நேரத்தின் அருகே வர வைக்கலாம்.
எக்ஸ்பி சிஸ்டத்தில் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் பெறவும். பின் காட்டப்படும் மெனுவில் Regional and Language Options என்ற பிரிவிற்குச் செல்லவும். அடுத்து, Regional Options என்ற டேப் அழுத்திக் கிடைக்கும் விண்டோவில் Customize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு Time என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு AM/PM என இருக்கும் அடையாளத்தை அழிக்கவும். பின்னர், என்ன பெயர் டாஸ்க்பாரின் வலது மூலையில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனை டைப் செய்திடவும். அதன் பின்னர் ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும்.
இதனையே விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேற்கொள்ள, ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில் Region and Language என டைப் செய்து தேடவும். பின்னர் கிடைக்கும் Region and Language டயலாக் பாக்ஸில் Additional settings பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு Customize Format டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அங்கு AM/PM என இருக்கும் அடையாளத்தை அழிக்கவும். பின்னர், என்ன பெயர் டாஸ்க்பாரின் வலது மூலையில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனை டைப் செய்திடவும். அதன் பின்னர் ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது என்ன! உங்கள் நண்பர்களிடம் இதனைக் காட்டி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். எப்படி எனக் கேட்டால், தெரியாதுப்பா என விலகலாம்.

கேள்வி: விண்டோஸ் 7, ஆபீஸ் 2007 பயன் படுத்துகிறேன். என் அவுட்லுக் 2007 இமெயில் புரோகிராமில், படிக்காத மெயில்கள், அழுத்தமான போல்ட் எழுத்தாகக் காட்டப் படவில்லை. இது ஏன்? இதனை எப்படிக் கொண்டு வருவது?
-டி. சிக்கந்தர், மதுரை.
பதில்: எதனையும் மாற்றாத நிலையில், அவுட்லுக், படிக்காத மெயில்களுக்கான வரிகளை அழுத்தமான போல்ட் எழுத்துக்களில் தான் காட்டும். பல மெயில் கிளையண்ட் புரோகிராம்களும் அவ்வாறே செயல்படுகின்றன. உங்கள் கம்ப்யூட்டரில் மாறி இருப்ப தற்கு, ஏதோ ஒரு பிரச்னை தான் காரணம். இதனைச் சரி செய்து விடலாம்.
முதலில் அதன் Inbox செல்லுங்கள். பின்னர், View மெனுவில், Current View என்ற இடத்திற்குச் செல்லவும். கிடைக்கும் சப் மெனுவில் Customize Current View என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு கிடைக்கும் Message டயலாக் பாக்ஸில், Automatic Formatting பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு பல செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும். இனி நீங்கள் ஏற்படுத்தப்போகும் மாற்றம் இவற்றையும் மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கும். எனவே இவை மாறக் கூடாது என எண்ணினால், இவற்றை எடுத்துவிடவும். இங்கு Unread Message என்பது செக் செய்யப்பட வேண்டும். பின்னர், இங்கு உள்ள Font என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் பாண்ட் டயலாக் பாக்ஸில், பாண்ட் ஸ்டைல் என்பதின் கீழ் போல்ட் என்பதனதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து வரிசையாக அனைத்து பாக்ஸ்களிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். ஒரு பைலை அழிக்கக் கட்டளை கொடுத்தால், "Recycle bin format is invalid. Do you want to empty the recycle bin?'' என்ற கேள்வி வருகிறது. கொடுக்கப்படும் கட்டத்தில் எந்த பதிலைத் தேர்ந்தெடுத்தாலும், எந்த ஒரு ரீஆக்ஷனும் இல்லை. இந்த சிக்கலுக்குத் தீர்வு என்ன?
-டி. எம். நந்தகோபால், பெரியகுளம்.
பதில்: சற்று சிக்கலான விஷயம் தான். இருந்தாலும் கீழே குறிப்பிட்டபடி செயல்படவும். கம்ப்யூட்டர் பூட் ஆகும் பொழுது F8 கீயைஅழுத்தி MSDOS மோடில் நுழையுங்கள். Deltree /y C:/Recycled கட்டளையைக் கொடுங்கள்.
C: டிரைவ் போக, உங்கள் கம்ப்யூட்டரில் மற்ற ஹார்ட் ட்ரைவ்களுக்கும் இதனைச் சற்று மாற்றித் தரவும். எடுத்துக் காட்டாக, D: ஹார்ட் டிரைவ் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் Deltree /y D:/Recycled என்று கட்டளையைக் கொடுங்கள். இது போன்று இதர ஹார்ட் டிரைவ்களுக்கும் கட்டளை கொடுங்கள்.
கம்ப்யூட்டரை மறுபடியும் பூட் செய்யுங்கள். இனி ரீசைக்கிள் பின் சரியாக வேலை செய்திடும்.

கேள்வி: இன்டர்நெட் தளத்திற்கு அதிக ஹிட் வந்தது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது எதனைக் குறிக்கிறது? எப்படி இதனைக் கணக்கிடுகிறார்கள்?
-என். சுந்தரி திருமாறன், மதுரை.
பதில்: நல்ல கேள்வி. ஹிட் என்பது ஓர் இணைய தளத்திற்கு ஒருவர் செல்கையில் எண்ணிக்கையில் ஒன்று கூடும் ஒருவகைக் கணக்கு என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறு. சற்று விளக்கமாக இதனைக் காணலாம்.
"ஹிட்' என்பது ஒரு வெப் சர்வருக்கு அளிக்கப்படும் வேண்டுகோள் ஆகும். எடுத்துக்காட்டாக தன்னுடைய இணைய முகப்புத் தளத்தில் ஆறு படங்களை உடையதாக ஓர் இணைய தளம் இருப்பதாகக் கொள்வோம். இந்த தளத்தைப் பெற உங்களுடைய பிரவுசர் இந்த ஆறு படங்களுக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பும். அத்துடன் அத்தளத்தின் எச்.டி.எம்.எல் க்காகவும் ஒரு வேண்டுகோளை அனுப்பும். எனவே இந்த வேண்டுகோள்கள் எல்லாம் சேர்ந்தால் மொத்தம் ஏழு "ஹிட்' கள் இந்த தளத்திற்கு அனுப்பப்படுகின்றன. நீங்கள் கூகுள் தேடுதளத்தில் (அல்லது நீங்கள் விரும்பும் எந்த தேடு தளத்திலும்) உங்கள் தேடுதலை அனுப்பி அதற்கான முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கப் பட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு "ஹிட்' ஆகக் கருதப்படும். எனவே உங்கள் தேடுதல் சார்ந்து 423 தளங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டால் உங்களுக்கு 423 ஹிட்கள் திரும்ப வந்துள்ளன என்று பொருள். இதுதான் "ஹிட்' என்பதின் உண்மையான பொருள்.

கேள்வி: இமெயில்களைப் பெற்றுப் படிக்க, மொஸில்லா நிறுவனம் வெளியிட்டுள்ள தண்டர்பேர்ட் என்னும் புரோகிராமின் புதிய வெர்ஷனைப் பயன்படுத்துகிறேன். ஆனால் இதில் இமெயில்களை அனுப்பியவர்களின் பெயர்களை அட்ரஸ் புக்கில் சேர்க்கும் வழி தெரியவில்லை. சற்று உதவவும்.
-பா. தமிழரசி, திருத்தணி.
பதில்: தண்டர்பேர்டில் அட்ரஸ் புக்கினைக் கையாள்வது மிக எளிதான ஒன்றாகும். நீங்கள் யாருடைய இமெயில் முகவரியை அட்ரஸ் புக்கில் சேர்க்க விரும்புகிறீர்களோ அந்த இமெயில் மெசேஜை முதலில் திறந்து கொள்ளவும். பின் From என்பதில் உள்ள முகவரியில் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் சிறிய மெனுவில் Add to Address Book என்ற பிரிவில் கிளிக் செய்தால் விஸார்ட் ஒன்று கிடைக்கும். இதில் அவரின் இமெயில் முகவரி தரப்பட்டிருக்கும். மற்ற தகவல்களான அவரின் பெயர், செல்லப் பெயர், எப்படி திரையில் காட்டப்பட வேண்டும், அவரின் போன் எண் போன்ற உங்களிடம் இருக்கும் தகவல்களைத் தரவும். அனைத்து கட்டங்களும் நிரப்பப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பின் ஓகே கிளிக் செய்தால் இந்த முகவரி அட்ரஸ் புக்கில் நிரப்பப்பட்டு விடும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manian - Toothukudi-TamilNadu,இந்தியா
13-மார்ச்-201120:08:02 IST Report Abuse
manian naan dinamalar comments type seiyum pozhuthu ennudaiya letters tamilil maaruvathillaiye yen? if i press "a".
Rate this:
Share this comment
Cancel
RAJENDRAN - CHENNAI,இந்தியா
12-மார்ச்-201108:15:58 IST Report Abuse
RAJENDRAN கேள்வி பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஷார்ட் கட் கீஸ் பற்றி குறிப்பிட்டு இருந்தததும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி
Rate this:
Share this comment
Cancel
கார்த்திகா.n - tiruppur,இந்தியா
08-மார்ச்-201111:02:15 IST Report Abuse
கார்த்திகா.n i'm using xp os. i have problem while opening my word files for the past 1 month.and not only the word files all the ms office files. while opening the files it shows the message "there is not enough memory space to run the program" . my c drive total capacity is 24 gb and 8 gb free space. ram capacity 1gb. after seeing this msg i reinstalled ms office, and i found no change in the error message. please reply for my problem....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X