இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஆக
2018
00:00

அட... நல்ல ஐடியாவாக இருக்கே!
பெங்களூருவிலிருந்து எங்கள் அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்த, அலுவலக நண்பனை, அவன் வீட்டில் சந்தித்தேன். பேச்சு வாக்கில் அவனிடம், 'வயசான பெற்றோரை தனியாக பெங்களூருல விட்டுட்டு வந்திருக்கியே... அவங்களுக்கு துணை வேணாமா...' என, கேட்டேன். அவன் சிரித்தபடி, 'அவங்க நம்மள விட, 'ஹாப்பி'யாக இருப்பாங்க...' என்றான்.
புரியாமல் பார்த்த போது, 'எங்க குடியிருப்பு வளாகத்தில், வெளிநாட்டில் வேலை செய்யும் நான்கு பேருடைய பெற்றோர் இருக்காங்க. அவங்களோட என் பெற்றோரும் சேர்ந்து, ஓர் ஒப்பந்தம் செய்திருக்காங்க. அதன்படி, காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரை வாக்கிங்; அப்புறம், ஓட்டலில் டிபன், காபி. பின், பார்க்குக்கு சென்று, 10:00 மணி வரை உடற்பயிற்சி; அது முடிந்து வந்த பின், அவங்க தயாரித்த அட்டவணைப்படி, அன்று யாருடைய வீட்டில் சமையலோ, அவங்க வீட்டிற்கு சென்று, ஆளுக்கொரு வேலையாக, காய்கறி நறுக்குவது, பாத்திரம் கழுவுவது என, சமையலுக்கு ஒத்தாசை செய்து, பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிடுவர். பின், மாலையில் காபி சாப்பிட்டு, பூங்கா, மால் மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் என சுற்றி, தேவையானதை வாங்கி, அவரவர் வீட்டிற்கு போயிடுவாங்க.
'இப்படி, அட்டவணைபடி ஒவ்வொருவர் வீட்டிற்கும் மாறி மாறிச் சென்று, சந்தோஷமாக பொழுதை கழிப்பதால், அவர்களுக்கு, தனிமை என்ற உணர்வே இல்லை. இப்போது சொல், என் பெற்றோரைப் பற்றி, நான் கவலைப்படணுமா...' என்றான்.
தனித்து வாழும், வயதான பெற்றோர், இம்முறையை பின்பற்றி, தனிமை துயரை விரட்ட முயற்சிக்கலாமே!
— டி.கே.சுகுமார், கோவை.

இளசுகளின் மனமாற்றம்!
சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு, சென்றிருந்தேன். தோரணங்கள், சீரியல்கள், போகஸ் லைட்ஸ் என்று அமர்க்களமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது, மண்டபம். அது மட்டுமல்லாமல், நிறைய, 'ப்ளக்ஸ் போர்டு'கள் வைத்திருந்தனர். போர்டுகள் வைத்திருந்த இடத்தில் கூட்டம் கூட்டமாக நின்று, அவற்றை படித்துக் கொண்டிருந்தனர், இளைஞர்கள். 'இளசுகள் எதை இப்படி ஆர்வமாக படிக்கின்றனர்...' என்று எட்டிப் பார்த்தேன்.
அதில், திருமணத்தில் நிகழும் சடங்குகளான நிச்சயதார்த்தம், உறுதி மொழி, மூன்று முடிச்சு, அட்சதை போடுதல், மெட்டி அணிவித்தல், மணமேடையில் அக்னியை வலம் வருதல், காசி யாத்திரை, கன்னிகாதானம், முளைப்பாரி போடுதல், 16 பேறுகள் ஆசிர்வாதம் போன்ற சடங்குகள், எதற்காக செய்யப்படுகின்றது, அதற்கு என்ன விளக்கம், அதன் பயன் என்ன என்பது பற்றி, விரிவாக, 'பிரின்ட்' செய்து ஒட்டி வைத்திருந்தனர்.
அவற்றைப் படித்த இளைஞர்களும், இளைஞிகளும், 'வாவ்... மேரேஜில் இவ்வளவு மேட்டர் இருக்குதா...' என்று, வியப்பில் விழிகளை விரித்தனர்.
இன்றைய இளசுகள், ஏன் நடுத்தர வயதினருக்கும், சில பெரியவர்களுக்கும் கூட, திருமண சடங்குகள் பற்றித் தெரிவதில்லை. அவற்றை அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் விதமாக, வித்தியாசமாக யோசித்து போஸ்டர் வைத்திருந்த திருமண வீட்டாரை, அனைவரும் மனதாரப் பாராட்டினோம்!
—ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.

நமக்கு நாமே...
 நான், அரசு மருத்துவ கல்லுாரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவி; மருத்துவ வளாகத்தில் உள்ள கல்லுாரி கட்டடம் மற்றும் மாணவ - மாணவியர் விடுதியை சுற்றியுள்ள இடம், சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. யாரும் அதை கண்டு கொள்ளாத நிலையில், என்னுடன் பயிலும் தோழி ஒருத்தி, சிலருடன் சேர்ந்து, அவற்றை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
ஆரம்பத்தில், அவளது செயலை கண்டு பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், அவற்றை பொருட்படுத்தாமல், மற்ற மாணவியரின் உதவியோடு, கல்லுாரி கட்டடம், விடுதி, கட்டட வேலை நடைபெறும் இடம் மற்றும் மருத்துவமனையை சுற்றியுள்ள இடங்களில் இருந்த குப்பைகளை அகற்றினாள்.
தற்போது, 'எகோ கிளப்' என்ற ஓர் அமைப்பை ஆரம்பித்து, அதில், ஆர்வமுள்ள மாணவ - மாணவியரை சேர்த்து, அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து, அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
அத்துடன், கல்லுாரி மற்றும் மருத்துவ வளாகங்களில், அதிகமான இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வளாகத்தின் உள்ளே, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்து, துணி பைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதோடு, அவ்வப்போது பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகளை பொது மக்களுக்கு தெரிவிக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
எங்கள் கல்லுாரியில், மருத்துவ மாணவர்கள் செய்யும் இச்செயலை கண்டு, மற்ற மருத்துவ கல்லுாரிகளும் பின்பற்ற துவங்கி விட்டன.
பூமியை பராமரிக்க, நம்மை சுற்றியுள்ள இடங்களையாவது, நாமே சுத்தம் செய்ய, களத்தில் இறங்கினால், நிச்சயம் பலன் கிடைக்கும் என்ற தோழியின் எண்ணத்தையும், விடா முயற்சியையும் பாராட்டி, நானும், என் தோழியரும் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.
— கே.ஜனனி, சென்னை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஆக-201811:00:34 IST Report Abuse
D.Ambujavalli வாக்கிங் பார்க்குகளுக்குச் செல்வார்களாக இருக்கும். சும்மா பீச் என்று கூறினால் எத்தனை சதவீதம் உண்மையோ என்றுதோன்றுகிறதே
Rate this:
Share this comment
Cancel
Sekhar - Bengaluru ,இந்தியா
05-ஆக-201806:20:54 IST Report Abuse
Sekhar All the 3 are good to read. In the first post, Bengaluru and kadarkarai ? Which part of the city?
Rate this:
Share this comment
Subramaniya prabu.G - (sivagangai ) Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஆக-201810:19:10 IST Report Abuse
Subramaniya prabu.Gகடற்கரை என்று எங்கே அவர் கூறினார்... கொஞ்சம் விளக்கவும்......
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
06-ஆக-201817:12:44 IST Report Abuse
சுந்தரம் சுப்பிரமணிய பிரபு அவர்களே, முதலில் இருந்தது. பின்னர் யாருடைய வற்புறுத்தலின் பேரிலேயோ அது அகற்றப்பட்டுள்ளது. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
07-ஆக-201809:19:16 IST Report Abuse
சுந்தரம் கடற்கரை பற்றி அவர் கூறியது எங்கே என்று கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டுமா? தினமலர் அச்சடித்து விற்பனைக்கு அனுப்பிய பிரதிகளில் உள்ளது. அது தவிர வார மலர் பகுதியிலும் உள்ளது....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
07-ஆக-201817:38:09 IST Report Abuse
சுந்தரம் ( தவறு என்று வாசகர்கள் குறிப்பிடும் தகவல்கள் நீக்கப்படுவது வழக்கமான ஒன்றே)...
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
05-ஆக-201804:53:31 IST Report Abuse
manivannan முதல் கடிதம் முதலில் நிற்கிறது. முதியவர்கள் ஆனதால் அனாவசிய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வராது. வந்தாலும் சரிசெய்து கொள்வார்கள்.நல்ல கம்யூனிட்டி உணர்வுகள் ஏற்படும் . மிக அருமையான வழிமுறை, வழிகாட்டுதலாகவும் இருக்கிறது. மற்ற இரு கடிதங்களும் அருமையான உதாரணமான செயல்கள். ஆக மூன்று கடி தங்களும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு தருபவை ஆகவே பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X