திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
00:00

'நேர நிர்வாகமும் - வாழ்க்கை வெற்றியும்' நுாலிலிருந்து: ஒரு பெரிய பத்திரிகை ஆசிரியரின் மேஜை மீது, சிறு அட்டையில், வாசகம் ஒன்று எழுதி வைக்கப்பட்டிருந்தது...
'எனக்கு நிறைய வேலை இருக்கிறது; உங்களுக்கு?' என்பது தான் அந்த வாசகம்.
இவரை சந்திக்க வரும் நபர், நாற்காலியில் அமர்ந்ததும், அந்த வாசகத்தை படிப்பார். அப்புறம், வந்த விஷயத்தை ஒன்றிரண்டு வாக்கியங்களில் முடித்து, புறப்பட்டு விடுவார். அனாவசிய பேச்சுக்கும், அரட்டைக்கும் அங்கு இடமில்லை.
இன்னொரு பிரமுகர், சில நேரங்களில் அலுவலகத்திற்கு தன்னை தேடி வருவோர் அதிகமாகி விட்டால், உடனே, தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று, ஒவ்வொருவராக அழைத்து பேசுவார். வருபவரும் நின்று கொண்டே பேச நேரும்; அதனால், வந்த விஷயத்தை சொல்லி, உடனே விடைபெற்றுச் சென்று விடுவர்.

கவிதா பதிப்பகம் வெளியீடான,'எம்.ஜி.ஆர்., என்றொரு மாயக் கலைஞன்' நுாலிலிருந்து: கடந்த, 1977ல் ஆட்சிக்கு வந்தார், எம்.ஜி.ஆர்., அவரது ஆட்சியை, ஒன்றரை ஆண்டுகளில், கலைத்தது, மத்திய அரசு. செய்தவர்: இந்திரா காந்தி. எனவே, மீண்டும் தன் சினிமா நடிப்பை தொடர முனைந்த, எம்.ஜி.ஆர்., தன், எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் கதை இலாகாவை அவசரமாக வரவழைத்து, ஒரு கதை தயார் செய்யச் சொன்னார்.
'எப்படியோ, எனக்கு ஓய்வு கிடைத்தது; ஆட்சி போனதிலே, என்னைத் தவிர எல்லாருக்கும் கவலை. காலையிலிருந்து ஆயிரம் போன்... எல்லாருக்கும் பதில் சொல்லணும்; ஏன்னா, ஆட்சியை கொடுத்தவங்க மக்கள்; பறிச்சுக்கிட்டது டில்லி. இதுக்கு நான், மக்களுக்கும் பதில் சொல்லணும்; மத்திய அரசை கேள்வி கேட்கணும். அப்படி ஒரு கதை, ரெண்டு நாளில் வேணும்...' என்றார்.
இதில், எம்.ஜி.ஆருக்கு எப்படிப்பட்ட பாத்திரம் அமைப்பது என்பதையும் அவரே சொன்னார்...
'மக்களால் தேர்ந்தெடுக்கக் கூடிய பதவியில் இருப்பவராய் இருக்கணும்; உதாரணத்துக்கு பஞ்சாயத்து தலைவராக கூட இருக்கலாம்...' என்றார்.
கதை இலாகாவினர் தயங்கி, 'வேணாம்... முதலமைச்சர் பதவி பறிபோயிடுச்சு; அதனால, பஞ்சாயத்து தலைவர் பதவி போதும்ன்னு சொல்லி படமெடுத்திருக்கிறார்ன்னு எதிர்க்கட்சிக்காரங்க கேலி பேசுவாங்க. முதல்வர், முதல்வராகவே இருக்கட்டும்; கல்லுாரி பிரின்ஸ்பாலுக்கும் முதல்வர் என்று தானே பெயர்... அதனால், உங்களுக்கு கல்லுாரி முதல்வர் பாத்திரம் அமைத்து, கதை தயார் செய்கிறோம்...' என்றனர்.
இரண்டே நாளில், கதை ரெடியானது; மூன்றே நாளில், அக்கதைக்கு, திரைக்கதை எழுதினார், நீலகண்டன். நான்கே நாளில்,வசனம் எழுதினார், ரவீந்தர். எட்டே நாளில், ஆறு பாடல்களை பதிவு செய்து கொடுத்தார், எம்.எஸ்.விஸ்வநாதன்.
நடிகர்கள் தேர்வும் நடந்து முடிந்து, முன் பணமும் கொடுத்தாகி விட்டது; திடீரென, தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. என்ன செய்வது... தேர்தல் பிரசாரத்திற்கு போக வேண்டுமே... 'பகலில் பிரசாரம்; இரவில் படப்பிடிப்பு...' என்றார், எம்.ஜி.ஆர்.,
அது சாத்தியமா... ஊர் ஊராக பிரசாரம் செய்து கொண்டே, இரவில் எந்த ஊரில், எங்கே படப்பிடிப்பு நடத்துவது... மற்ற நடிகர், நடிகையர் ஒத்துழைக்க இயலுமா... அதனால், திரைப்பட தயாரிப்பு முடிவை ரத்து செய்து, அரசியல் பிரசார வேலைகளில் இறங்கினார்; வென்றார். இரண்டாம் முறையும் முதல்வர் ஆனார். அண்ணா என் தெய்வம் என பெயரிடப்பட்ட அந்த படம், அத்தோடு சரி!

பிரான்ஸ் நாட்டு தலைநகரான, பாரீஸ் நகருக்கு இந்திரா காந்தி சென்றிருந்தபோது, அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு, 'இந்நகரில், புகழ்பெற்ற புனித இருதய மாதா கோவிலின் படிக்கட்டில் தான், என்னை திருமணம் செய்து கொள்ள வாக்கு கொடுத்தார், பெரோஸ் காந்தி...' என, பேட்டியளித்தார்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
12-ஆக-201811:35:49 IST Report Abuse
Krish விகடன் திரு பால சுப்பிரமணியம் அவர்கள்தான் மேலே குறிப்பிடப்பட்டிருப்பது.
Rate this:
Manian - Chennai,இந்தியா
15-ஆக-201806:08:12 IST Report Abuse
Manianவேலையில் தடங்கல் வாராமல் இருக்க ஆறு பேர்களை தவிருங்கள் என்று ஒரு கட்டுறை நேற்று படித்தேன்- அவர்கள்- (1) பொழுது போக்கிகள் . The Chit-Chatter (2) தனக்குத்தான் தெறியும் என்ற மேதாவி - தேவை இல்லாமலே அட்வைஸ் தருபவர் The Know-It-All (3) பின் முதுகு கத்திக்குத்தர் Back-Stabbers (4) எருமை சோம்பேறிகள் The Procrastinator (5) சிந்தனை திருட்டு ஒட்டுண்ணிகள் The Soul-Sucker (6) தானே தியாகி, மற்றவர்கள் அட்டைகள். கட்டுரையில் சொல்லப்படுவது முதல் இனத்தை விரட்டுதல். 5 -வது நபர்கள் அமெரிக்காவில் அதிகமாம். தமிழ் நாட்டு புத்திசாலிகள் தங்கள் டம்ப, ஈகோ பேச்சால் பல கண்டுபிடிப்புகளை அமெரிக்க மேல் அதிகாரிகளுக்கு பலி கொடுத்து , தங்களால் காப்புரிமை பெற முடியாமல், எந்த பயனும் அடைவதில்லை என்று மூன்று உதாரணங்கள் மூலம் நபர் ஒருவர் சொன்னார். ஆகவே , எதை சொன்னாலும் உடனே ஒரு ஈமெயில் அனுப்பி, நான் உங்களிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களின் சாரம்சம் "இதோ" என்று சொல்ல வேண்டுமாம். உடனேயே அதற்கு முன் ஒரு நோட்டரி பப்லிக் முன் தங்களது எழுத்து பூர்வமானா கட்டுரையை கருத்துக்களை பதிவு செய்து ஒரு காப்பி வைத்துக்க வேண்டும் என்றும் சொன்னார். இங்கே கல்வியில், (C) copyright குறி, தேதி போடாமல் எழுதப்படும் கட்டுரைகளை அங்கே திருடி, நம்மையும் அவர்களுக்கு கப்பம் கட்டாமல் அதை உபயோகிக்க முடியாமலும் செய்து விடுவார்களாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X