அப்பாவி!
சீனாவில், ஒரு விவசாயி, தன் நிலங்களை பாதுகாக்க, இரண்டு நாய் குட்டிகளை ஒருவனிடம் வாங்கினான். அவை நன்றாக சாப்பிட்டு, வேகமாக வளர்ந்தன; சுறுசுறுப்புடன் நிலத்தை சுற்றி வந்தன; விவசாயி வளர்த்த கோழிகளை, 'லபக்'கின.
அவன் நாய் குட்டிகள் என நினைத்து, வாங்கியது கரடி குட்டிகளை!
நவயுக திருடர்கள்!
இன்று, இ.காமர்ஸ் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவது சகஜமாய் நடக்கிறது. இதிலும், நவயுக திருடர்களால் தில்லுமுல்லு அரங்கேற ஆரம்பித்து விட்டது. ஆம்... நான்கு திருடர்கள், போலியான முகவரியை கொடுத்து, விலை உயர்ந்த மொபைல் போன்களை ஆர்டர் செய்து வாங்குவர். பின், நல்ல மொபைலை எடுத்துக் கொண்டு, அதே பிராண்டு்ள்ள, பழுதான மொபைலை வைத்து, 'சரியில்லை...' என, திருப்பி அனுப்புவர்.
இந்த மொபைல் போன்கள் திரும்பி வந்தபோது, திடுக்கிட்ட, 'பிளிப்கார்ட்' நிறுவனம், ரகசிய விசாரணையில் இறங்கியது. விளைவு... இவற்றை செய்வது, தன்னிடம் வேலை செய்து, நுணுக்கங்களை தெரிந்து கொண்ட, முன்னாள் ஊழியர்கள் நான்கு பேர் என தெரிய வந்தது. இப்போது, அந்த நால்வரும் கம்பி எண்ணுகின்றனர்.
சொகுசு திருடன்!
இது, நம் ஊர் சம்பவம் போன்று தான்... இங்கிலாந்து நாட்டின், வேல்ஸ் நகரில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த திருடன், கிடைத்ததை எல்லாம் அள்ளி மூட்டை கட்டியவன், அருகிலிருந்த பிரிஜ்ஜை திறந்து பார்த்தான். அதனுள் ஐஸ்கிரீம் மற்றும் சாப்பாட்டு ஐட்டங்கள் இருக்க, அவற்றை ஒரு பிடி பிடித்துள்ளான். உண்ட மயக்கத்தில் துாக்கம் வர, அங்கிருந்த கட்டிலில் படுத்து உறங்கி விட்டான். அதற்குள், வீட்டுக்காரர் வந்து விட்டார். அப்புறமென்ன... போலிஸ் வந்து சுலபமாக இழுத்துச் சென்றனர்.
வித்தியாசமான நடுவர்!
தென் அமெரிக்க கண்டத்திலுள்ள, பிரேசில் நாட்டில், கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலம். இரண்டு அணிகள் மோதும்போது, அந்த அணிகளின் வீரர்களுக்கிடையே வார்த்தை மோதல்களும், சண்டையும் சகஜம். இதை, நடுவர் சமாளிக்கும் விதமே அலாதி. இப்படி ஒரு நிலை மைதானத்தில் எழுந்தபோது, நடுவர் என்ன செய்தார் தெரியுமா... பாக்கெட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து விண்ணில் சுட்டார்; சண்டை கப்சிப்!
சோம்பேறி சிரிப்பு திருடர்கள்!
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி வங்கி ஒன்றிலிருந்து, நான்காயிரம் டாலர் பணத்தை திருடி வெளியே வந்தான் ஒரு சோம்பேறி திருடன்; அலுப்பை குறைத்துக்கொள்ள, கடைக்குள் நுழைந்து காபி குடித்துள்ளான். அப்போது, அவனை, போலீஸ்,'லபக்'கென பிடித்துக் கொண்டது.
கிடைத்ததை திருடுபவன்!
திருடன் ஒருவன், பல்கலை கழகத்தில் நுழைந்து, கிடைத்ததை எல்லாம் திருடினான்; அவன் திருடிய பொருட்களுடன் ஒரு புத்தகமும் இருந்தது. பின், அதை பழைய புத்தக கடையில் விற்க முயன்றான். புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா... 'உனக்கு பயன்படாததை தள்ளிவிடு!